சாரா அலி கான் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ.. இதை பார்த்தால் உங்களுக்கே உற்சாகம் கிடைக்கும்..!
சாரா அலி கான் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ.. இதை பார்த்தால் உங்களுக்கே உற்சாகம் கிடைக்கும்..!
சாரா அலி கான்
நடிகை சாரா அலி கான் பாலிவுட்டில் மிக குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர். தனது நடிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் நடிப்பு உலகில் தனக்கென ஒரு இடத்தைக் பிடித்தவர்.
நடிகை சாரா அலி கான் பாலிவுட்டில் மிக குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர். தனது நடிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் நடிப்பு உலகில் தனக்கென ஒரு இடத்தைக் பிடித்தவர். 2018 ஆம் ஆண்டில் வெளியான கேதார்நாத் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மிக விரைவிலேயே பல படங்களில் நடக்கும் வாய்ப்பையும் பெற்றார். 26 வயதான சாரா அலி கான் நடிப்பில் மட்டுமல்லாதது தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல்வேறு ஃபிட்னஸ் வழிகளை பின்பற்றி வருகிறார்.
இவர் தொடர்ச்சியாக செய்து வரும் உடற்பயற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவார். இது பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடும் அளவிற்கு மிக அற்புதமாக இருக்கின்றன. சமீபத்தில் தனது வார இறுதியில் தனது பயிற்சியாளரான நம்ரதா புரோஹித்துடன் எவ்வாறு உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதற்கான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ உடற்பயிற்சி செய்ய விரும்புவோர்களுக்கும், தற்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவோர்களுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை நிச்சயம் தரும். இந்த வீடியோவில் சாரா அலி கான் ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் ஊதா நிற ஷார்ட்ஸில் பர்பீஸ் என்கிற உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். அதிக கலோரிகளை எரிப்பதற்கான உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர் தனது உடற்பயிற்சி வழிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் மிகவும் அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்பதற்கு அவரது உடலே சான்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோவில் தனது பயிற்சியாளரான நம்ரதா புரோஹித்தையும் அவர் டேக் செய்து ஊதா நிற ஹார்டின் எமோஜியை பயன்படுத்தி உள்ளார்.
தற்போது சாரா தனது தாயார் அம்ரிதா சிங்குடன் விடுமுறையில் லண்டனில் உள்ளார். லண்டனில் அவர் இருந்த பல படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இத்துடன் அவர் உடல் நலத்திற்கு நன்மை தரும் ஆப்பிள் சிடர் வினிகரை பற்றியும் பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் ஆரோக்கியமானது என்றும், கெட்ட பாக்டீரியாவை கொல்ல உதவும் என்றும், உடலின் சர்க்கரை அளவை சீராக வைக்கும் என்றும், உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரை போலவே சில பிரபலங்களும் ஆப்பிள் சிடர் வினிகரை குறித்து பதிவுகளை சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர்.
சாரா அலி கான் தற்போது பல படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் அடுத்ததாக லக்ஷ்மன் உடேகரின் பெயரிடப்படாத படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி, 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த திரைப்படத்தில் பணியாற்றவுள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இவரின் படத்தேர்வுகளின் மூலம் இவர் எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறார் என்பதை ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.