முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மயோசிடிஸ் நோய்க்கு பின் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் நடிகை சமந்தா..!

மயோசிடிஸ் நோய்க்கு பின் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் நடிகை சமந்தா..!

சமந்தா

சமந்தா

முதலில் நோயை தீவிர படுத்தக்கூடிய உணவு வகைகளை நாம் தவிர்த்து விட வேண்டும். விதைகள், நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அது அவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் வெகுவாக தாக்குகிறது. மேலும் தாங்க முடியாத வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கக் கூடும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் தசைகள் மிகவும் வலுவிழுந்து காணப்படும்.

சமந்தா மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர். ஆனாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டதிலிருந்து உடற்பயிற்சி செய்வதில் கூட பல சிக்கல்களை சந்தித்து இருந்தார். தற்போது இந்த மயோசிடிஸ் நோய் தாக்கிய பிறகு தன்னுடைய உடற்பயிற்சியினோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் ப்ரோட்டோக்கால் டயட் என்னும் கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.




 




View this post on Instagram





 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)



சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலை பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவில் அவர் புல்லப்ஸ் செய்யும் காட்சி இருந்தது. இதன் மூலம் இந்த நோய் தொற்றினால் அவரின் தன்னம்பிக்கை சிதைந்து போகவில்லை என்று நிரூபித்துள்ளார். மேலும் மிகக் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வலிமை என்பது நீங்கள் உண்ணும் உணவில் இல்லை. நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அது என்ன ஆட்டோ இம்யூன் உணவு கட்டுப்பாடு?

இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் திசுக்கள் மற்றும் செல்களை தாக்கும் விதமாக ஆன்டி பாடிஸ் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாகவே உடலில் உள்ள நோய் தொற்றுகளுடன் போராடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இவை நோய் தொற்று கிருமிகளைதாக்குவதற்கு பதிலாக பதிலாக அந்த நபரின் செல்களையே தாக்குகின்றன. இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனுடைய முக்கிய நோக்கமே அந்த நோயை அதிகமாகக் கூடிய மூலப்பொருட்கள் இல்லாத உணவை தேர்ந்தெடுத்து உண்பது தான். இந்த ஏஐபி(AIP) உணவு கட்டுப்பாடு ஆனது இரண்டு நிலைகளில் வேலை செய்கிறது.

எலிமினேஷன் ஃபேஸ்:

அதாவது முதலில் நோயை தீவிர படுத்தக்கூடிய உணவு வகைகளை நாம் தவிர்த்து விட வேண்டும். விதைகள், நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். மேலும் புகைபிடித்தல், ஆல்கஹால் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

ரீ இன்ட்ரொடக்ஷன் பேஸ்:

அதாவது கடுமையான உணவு கட்டுப்பாட்டிற்கு பிறகு உடல் சீரடைந்து வரும் நிலையில் நாம் ஒதுக்கி வைத்த உணவு பொருட்களை சிறிது சிறிதாக நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இது கடுமையான மேற்பார்வையின் கீழ் நடக்க வேண்டும்.

Also Read : சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன..? யாரையெல்லாம் பாதிக்கும்..?

இதைத் தவிர இந்த உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள் இயற்கையான முறையில் விளைந்த பழங்கள், காய்கறிகள், இயற்கை இனிப்புகள், வினிகர் ஆகியவற்றை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Actress Samantha, Disease, Samantha