தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சமந்தா. எவ்வளவு பிசியாக இருந்தாலும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே தனது ஃபிட்னஸிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா.
தனது உடலை சிக்கென்று வைத்து கொள்ள மிகுந்த ஈடுபாடு கொண்ட சமந்தா, தீவிர ஃபிட்னஸ் ஆர்வலராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அர்ப்பணிப்புடன் செய்யும் உடற்பயிற்சிகள் சிறந்த பலன்களை தரும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். எனவே தினசரி தவறாமல் யோகா மற்றும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது ‘Family Man 2’-வில் நடித்து வரும் சமந்தா ரூத் பிரபு எப்போதுமே சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். நடிப்பும் தனது ஸ்டைல் தவிர ஃபிட்டான உடலமைப்பால் நெட்டிசன்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் சமந்தா. சமந்தா எவ்வளவு ஃபிட்டாக, அழகாகவும் இருக்கிறார் என்று வியக்கும் பல ரசிகர்களுக்கு அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.
சமந்தா ஜிம்மில் மிகவும் கடினமான பயிற்சிகளை செய்கிறார். எனவே தான் அவர் மிகவும் ஃபிட்டாக மற்றும் பளபளப்பாக இருக்கிறார். மேலும் ஃபாலோயர்ஸை ஊக்குவிக்கும் விதமாக தான் செய்யும் ஒர்கவுட்கள் மற்றும் ஃபிட்னஸ் பயணம் குறித்த வீடியோவை சில நேரங்களில் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜிம்மில் தான் செய்த கடினமான உடற்பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை சமீபத்தில் ஷேர் செய்து உள்ளார் சமந்தா.
சமந்தாவின் தீவிர உடற்பயிற்சி:
சமந்தா ஷேர் செய்துள்ள வீடியோவில் இருபக்கமும் வெயிட்ஸ் இருக்கும் கம்பியை கீழிருந்து தூக்கி தன் கைகளை தலைக்கு மேலே உயர்த்தியபடி அதி தீவிரம் கொண்ட உடற்பயிற்சியுடன் (high-intensity workout) ஜிம் பயிற்சியை செய்கிறார்.
தொப்பையை குறைக்க நினைக்கும் பலர் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா..?
தலைக்கு மேல் கைகளை உயர்த்தியதோடு மட்டுமின்றி அந்த எடையை வைத்து கொண்டே அற்புதமாக ஸ்குவாட்ஸையும் செய்து அசத்துகிறார் சமந்தா. பொதுவாக ஸ்குவாட்ஸ் பயிற்சி கீழ் உடல் தசைகளின் வலிமை மற்றும் அளவை அதிகரிப்பதுடன் வலிமையை வளர்க்கும் ஒரு முக்கிய பயிற்சியாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வொர்கவுட்டை பளுவுடன் சமந்தா செய்யும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவிற்கு "வலுவான உடல் ✅ வலிமையான மனம் ✅✅, 2022-23 எனக்கு உடல் ரீதியாக மிகவும் கடினமான மற்றும் சவாலான காலமாக இருக்கும்... எதிர்கொள்வேன் என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார் நடிகை சமந்தா. இவரின் தீவிர வொர்கவுட் வீடியோவை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள், சவாலான காலத்தில் ஜெயிக்க வாழ்த்துகள் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.