சமந்தா பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். அது சொந்த வாழ்க்கையானாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, அவர் அதை எதிர்கொண்டு போராடும் வலிமைதான் இன்றும் அவரை ஒரு ஸ்டாராக உயர்த்தியுள்ளது. தனித்துவ நடிப்பு, அழகு, நடனம் என தன் துறை சார்ந்த வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும்தான் அவரின் அசைக்க முடியாத வெற்றிக்கு காரணங்களாக இருக்கின்றன.
குறிப்பாக தன் சுய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதிலும், ஃபிட்டாக இருப்பதிலும் அவர் ஒரு நாளும் சளைத்ததில்லை. அதற்கு அவருடைய இன்ஸ்டாகிராம் வீடியோக்களே சாட்சி. ஆண்கள் கூட செய்யத் தயங்கும் ஒர்க்அவுட்டுகளை அசாதாரணமாக செய்துமுடிப்பார். அதனால்தான் பலரும் பார்த்து பொறாமைப்படும் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார் சமந்தா.
அவரது எளிமையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி வழக்கமே அவரை இன்றுவரை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
ஜிம்மில் அவர் வியர்வை சொட்ட சொட்ட செய்யும் பயிற்சிகளை பார்க்கும்போது பலருக்கும் எழுந்து ஓட வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுக்கிறது. நாமும் இதுபோன்ற உடலழகைப் பெற உழைக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
சமந்தா வழக்கமான உடற்பயிற்சிகளைக் கூட சுவாரஸ்யமானதாக மாற்ற சில விஷயங்களை கையாளுகிறார். இதனால் அந்த பயிற்சிகள் சளிப்பு தட்டுவதில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோன்றும். இதை பலரும் தங்கள் தினசரி ஒர்க் அவுட்டில் இனைத்துக்கொண்டால் உங்களுக்கும் உடற்பயிற்சிகள் போர் அடிக்காது.
எடைப் பயிற்சி, புல்-அப் பயிற்சிகள், யோகா, சைக்கிள் மற்றும் கார்டியோ ஆகியவை சமந்தா செய்யும் பயிற்சிகளாகும். சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், சமந்தா தனது உடற்பயிற்சி பயிற்சியாளரான ஜுனைத் ஷேக்குடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது.
உடல் எடையைக் குறைக்க காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்...பிக்பாஸ் வனிதாவின் சீக்ரெட் இதுதானாம்...
அதுமட்டுமன்றி 2022 ஐ பாசிடிவாக கொண்டு செல்லும் விதமாக ஒரு சேலஞ் செய்துள்ளார். அதாவது முழங்காலைப் பயன்படுத்து ஜம்பிங் ஸ்குவாட் செய்ய வேண்டும். இதில் எந்த கருவியும் பயன்படுத்தக் கூடாது. அதில் சமந்தா 2022 ஆண்டை கருவிகள் இல்லாமல் உடலை லெவல் அப் செய்ய சவால் விடுகிறேன். உங்கள் கலோரிகளை எரிக்க இதுவே நல்ல தொடக்கம் எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
kneeling jump squat எவ்வாறு செய்ய வேண்டும் :
படி 1: இரு கைகளையும் இருகப் பிடித்து கால்களையும் மடக்கி மண்டியிடவாறு அமர வேண்டும்.
படி 2: பின் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். பின்னர் மூச்சை வெளிவிட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள்.
படி 3: இறுதியாக உங்கள் ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி குதித்து அமருங்கள்.
படி 4: நீங்கள் ஆரம்ப நிலைக்குத் திரும்பும்போது மூச்சை உள்ளிழுக்கவும்.
நீங்கள் முழங்காலில் ஜம்ப் ஸ்குவாட் செய்யும்போது, உங்கள் கால், இடுப்பு, தொடை எலும்புகள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் கலோரிகள் குறைவதை உணரலாம். இந்த உடற்பயிற்சி குறுகிய காலத்தில் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை 48 மணிநேரம் வரை அதிகரிக்கிறது. இந்த உடற்பயிற்சி உங்கள் மைய மற்றும் கீழ் முதுகு வலிமையையும் மேம்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha, Fitness, Gym, Weight loss, Workout