Home /News /lifestyle /

பெண்கள் குங்கமப்பூ தண்ணீர் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளை இருக்காதா..!!

பெண்கள் குங்கமப்பூ தண்ணீர் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளை இருக்காதா..!!

குங்குமப்பூ தண்ணீர்

குங்குமப்பூ தண்ணீர்

ஆன்டிஆக்சிடன்ட் முதல், உடலின் வெப்பத்தை தக்கவைப்பது வரை, பல விதங்களில் குங்குமப்பூ ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

உலகின் மிகவும் விலைமதிப்புள்ள உணவுப் பொருட்களில் குங்குமப்பூ முதல் இடங்களில் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விளைவிக்கப்படும் குங்குமப்பூவை, வளர்த்து அறுவடை செய்வது மிகவும் கடினமான ஒன்று. அதனால் தான் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. குங்குமப்பூவில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

சமைக்கும் போதும் குங்குமப்பூ சேர்க்கும் போது, அதன் சுவை, நிறம் அனைத்துமே அதிகரிக்கும். குறிப்பாக இனிப்புகளுக்கு ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து அதன் சுவையை பல மடங்கு அதிகரிக்க முடியும். உணவில் சேர்க்கப்படுவது தவிர்த்து, குங்குமப்பூ தண்ணீர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆன்டிஆக்சிடன்ட் முதல், உடலின் வெப்பத்தை தக்கவைப்பது வரை, பல விதங்களில் குங்குமப்பூ ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குங்குமப்பூ தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

குங்குமப்பூவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஃப்ரீ ராடிகல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது, உடலில் இருக்கும் நச்சை நீக்கி செல்களில் இருந்து சருமத்துக்கு புத்துணர்வைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தில் பொலிவையும் இளமையையும் தக்கவைக்க உதவும். ஆரோக்கியமான, பளபளப்பான, மாசு மருவில்லாத சருமம் வேண்டுமென்றால் ஸாஃபிரான் தண்ணீரை குடிக்கலாம்.



வலியற்ற மாதவிடாய்

குங்குமப்பூ வழங்கும் பல விதமான நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு நன்மை உள்ளது. மாதவிடாய் காலத்தில் வலியை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் குங்குமப்பூ உதவும் என்பது பலருக்கும் தெரியாது. மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே குங்குமப்பூ தண்ணீர் குடித்தால் மாதவிடாய் நாட்களை எளிதாக கடந்து செல்ல முடியும். அது மட்டுமல்லாமல் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வையும் பேலன்ஸ் செய்ய உதவும்.

மழைக்காலத்தில் செரிமான அமைப்பு ஏன் மந்தமாகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்...

எடை குறைக்க உதவும்

சருமத்துக்கு எவ்வாறு ஆன்டிஆக்சிடன்ஸ் உதவுகிறதோ, அதே போல, எடை குறைக்கவும் உதவியாக இருக்கிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் செல் அளவிலான பாதிப்பை நீக்கி, செல்களுக்கு புத்திணர்ச்சி அளித்து, ஆரோக்கியமாக மாற்றுகிறது. இதில் மன அழுத்தம் குறைக்கும் பண்புகள் உள்ளன. மேலும், க்ரோசெடின், சப்ரனால் மற்றும் கேம்ப்பெரால் உள்ளிட்ட மூன்று ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நச்சு நீக்கவும், செல் மற்றும் திசுக்களின் அழற்சியைக் கட்டுப்படுத்தி, பசி உணர்வை சீர்படுத்தி, நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரவும் உதவுகிறது.

குங்குமப்பூவை எந்த உணவிலும் சேர்ப்பது எளிது. அரிசி சாதம், பிரியாணி, புலாவ், இனிப்புகள், பாஸ்தா என்று எல்லா உணவுகளிலும் ஒரு இழை குங்குமப்பூவை சேர்த்தால் போதும்.



குங்குமப்பூ தண்ணீர் செய்வது எப்படி?

குங்குமப்பூவை அதிக அளவில் சாப்பிடக் கூடாது. எனவே, ஒன்று முதல் அதிகபட்சமாக மூன்று குங்குமப்பூ இதழ்களை ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரில் இரவு ஊறவைத்து, அடுத்த நாள் குடிக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Saffron

அடுத்த செய்தி