Home /News /lifestyle /

Sadhguru Tamil : இதயமா? மூளையா? எது சொல்வதை நம்புவது?

Sadhguru Tamil : இதயமா? மூளையா? எது சொல்வதை நம்புவது?

இதயமா? மூளையா?

இதயமா? மூளையா?

Sadhguru Tamil : இதயம் எதையும் சொல்ல முயற்சிக்கல. அது ஈடுகட்டுது அவ்ளோதான். உங்களுக்கு நிறைய ரத்தம் தேவைன்றதுனால கொஞ்சம் கஷ்டப்பட்டு பம்ப் பண்ணுது அவ்ளோதான். நீங்க மாடி படில ஓடும் போது கொஞ்சம் மூச்சு வாங்கும். நீங்கள் காதல் வயப்படும் போதும், மாடிப்படில ஓடும் போதும் அதானே நடக்குது.

மேலும் படிக்கவும் ...
இதயம் எதையுமே செய்ய முயற்சிக்கல உடம்புல ஓடுற இரத்த ஓட்டத்தை சீராக போக அது உதவுது. அதனால வெவ்வேறு மொழிகளில் பேசுறது உங்க மூளை தான்.
ஏதோ ஒன்னுல முதலீடு செய்றதுக்கு முன்னாடி 25 வருசத்துக்கு அப்புறம் இது எனக்கு அர்த்தம் உள்ளதா இருக்குமா என பாக்கணும். 50 வருசத்துக்கு அப்புறம் அர்த்தம் உள்ளதா இருக்குமா? என்னோட வாழ்க்கையின் முடிவுல திரும்பி பார்க்கும் போது இப்ப நான் செய்றத பாத்து நான் பெருமை படுவேனா இல்லை அவமான படுவேனானு பாக்கணும்.

இதயம் இரண்டே சப்தம் தான் எழுப்பும் லப்டப். உள்ளூர் பொண்ணுங்க அத கொஞ்சம் தொந்தரவு செஞ்சு அந்த பக்கம் போகாத வரைக்கும். மற்ற எல்லா சப்தமும் உங்கள் மூளையில் இருந்து தான் வருது. சில எண்ணங்கள் இதயத்தில் இருந்தும் , சில எண்ணங்கள் மூளையில் இருந்து வருதுன்னு சொல்றது ஒரு உருவகம் தான். துருத்தஷ்ட வசமா நிறைய பேர் இப்ப அத அப்படியே அர்த்தம் பண்ணிக்கிறாங்க. ஒரு காலத்துல உலகத்தோட பல பகுதில குறிப்பா அரேபியால கல்லீரல்ல இருந்து தான் உடலின் பல பகுதிகளுக்கு ரத்தம் அனுப்புதுனு நம்பினாங்க.

ஏன்னா கல்லீரல் தான் இதயத்தை விட சாதாரண உறுப்பு. இதயம் ஒரு சின்ன பம்பு தான். அதனால இரத்தத்தை உங்கள் உடலில் இருந்து மற்ற பாகங்களுக்கு அனுப்பும் பொறுப்பை தவிர வேறு எந்த பொறுப்பையும் கொடுக்காதீங்க. இங்க இருக்குற யாரவது அதனை நொறுக்காத வரைக்கும் பரவா இல்லை.

இதையும் படியுங்கள் :  ' இலுமினாட்டி தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை' - சத்குரு

பலரும் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்வி சத்குரு நான் தியானம் பண்ணனும். ஆனா எனக்கு எண்ணங்கள் வந்துட்டே இருக்குனு சொல்வாங்க. நான் அவங்க கிட்ட என்ன கேட்பேனா நான் உங்கள தியானம் பண்ண வைக்கிறேன். ஆனா உங்க கல்லீரல் நிறுத்தீட்றேன், உங்க சிறுநீரகம் நிறுத்தீட்றேன் சரியானு கேட்டா இல்லனு சொல்வாங்க. நீங்க தியானம் பண்ணும் போது உங்க கல்லீரல் வேலை செய்யணும், உங்க இதயம் வேலை செய்யணும் , உங்க மண்ணீரல் வேலை செய்யணும் ஆனா ஏதோ சில காரணங்களால உங்க மூளை மட்டும் வேலை செய்யக்கூடாது. ஏன்னா மூளை என்பது பரிணாம வளர்ச்சியால் உங்களுக்கு கிடைத்த புது சாதனம் . எந்த பாலூட்டி இனத்தை வெட்டித் திறந்து பார்த்தாலும் அவங்க எல்லாருக்கும் இந்த அனைத்து பாகங்களும் இருக்கும். ஒரு தவளை வெட்டித் திறந்தாலும் உங்களுக்கு இருக்கும் அனைத்தும் அவற்றிற்கும் இருக்கும்.



எப்போதுமே இதயம் எந்த நோக்கத்தையும், எண்ணத்தையும் உருவாக்கியது இல்லை. நீங்க அந்த இளம்பெண்ணை பார்க்கும் போது உங்கள் இதயம் அதிகம் துடிக்கலாம். இதயம் எதையும் சொல்ல முயற்சிக்கல. அது ஈடுகட்டுது அவ்ளோதான். உங்களுக்கு நிறைய ரத்தம் தேவைன்றதுனால கொஞ்சம் கஷ்டப்பட்டு பம்ப் பண்ணுது அவ்ளோதான்.

இதயம் எதையும் சொல்ல முயற்சிக்கல. அது ஈடுகட்டுது அவ்ளோதான். உங்களுக்கு நிறைய ரத்தம் தேவைன்றதுனால கொஞ்சம் கஷ்டப்பட்டு பம்ப் பண்ணுது அவ்ளோதான். நீங்க மாடி படில ஓடும் போது கொஞ்சம் மூச்சு வாங்கும். நீங்கள் காதல் வயப்படும் போதும் , மாடிப்படில ஓடும் போதும் அதானே நடக்குது. இதயம் எதுவுமே பேச முயற்சிக்கல. அது உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை கொண்டு சேர்க்குது அவ்ளோதான். உங்க மூளை தான் ஒவ்வொரு சமயத்துலயும் ஒவ்வொரு பாஷயில பேசுது.

இதையும் படியுங்கள் : கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது!

2 , 3 மொழி தெரிந்தால் வெவ்வேறு மொழிகளில் மூளை அதனை உங்களுக்கு பேசும். நீங்க தான் அத இதயம் பேசுது , மனசு பேசுதுனு நினச்சுக்குறீங்க. ஆனா உண்மையில அது எல்லாமே மூளை தான் பண்ணுது. எண்ணங்கள் இருக்கு, உணர்ச்சிகள் இருக்கு இவை இரண்டும் வெவ்வேறு உணர்ச்சிகளை சொல்லுதுனு மக்கள் நினச்சுக்கிறாங்க.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sadhguru

அடுத்த செய்தி