ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காற்று மாசு அதிகமுள்ள சமயத்தில் ரன்னிங் செல்லலாமா..? அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

காற்று மாசு அதிகமுள்ள சமயத்தில் ரன்னிங் செல்லலாமா..? அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ரன்னிங்

ரன்னிங்

ஆரோக்கியமான நபருக்கு பாதுகாப்பான AQI அளவு அதிகபட்சம் 100-150 ஆக இருக்கும் என்றும், சுவாச பிரச்சனை அல்லது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காற்றின் தர அளவு 100க்கு மேல் இருந்தால் வெளியே வரக்கூடாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் கடந்த அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுக்களை வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இந்த ஒருநாள் கொண்டாட்டத்தின் விலைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசின் அளவு தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு வழக்கமாக நீடிக்கும் காற்று மாசின் அளவு சற்றே அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பிந்தைய டெல்லியின் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையான AQI 350க்கு மேல் உள்ளது.

எனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார். அப்படியானால் விளையாட்டு வீரர்கள், ஜாக்கிங் செல்பவர்கள் என்னென்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

ரன்னிங் செல்ல ஏற்ற காற்றின் தரம் என்ன?

பிரபல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் துறையின் மூத்த மருத்துவரான மயங்க் சக்சேனா காற்றின் தர அளவு குறித்து கூறுகையில், “ஆரோக்கியமான நபருக்கு பாதுகாப்பான AQI அளவு அதிகபட்சம் 100-150 ஆக இருக்கும் என்றும், சுவாச பிரச்சனை அல்லது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காற்றின் தர அளவு 100க்கு மேல் இருந்தால் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். எனவே காற்று மாசுபாடு உள்ள சமயத்தில் யாராக இருந்தாலும் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

நுரையீரலைப் பாதிக்கும் காற்று மாசின் அளவு என்ன?

ஓட்டபந்தய வீரர்கள், ஜாக்கிங் செல்பவர்கள் என யாராக இருந்தாலும் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ள போது ரன்னிங் செல்வது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் ஓடும் போது உடலுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, ஆனால் காற்றின் தரம் மோசமாக இருக்கும் போது மாசு கலந்த குறைந்த அளவிலான ஆக்ஸிஜனே கிடைக்கக்கூடும் என்பதால், அது நுரையீரலை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் மூச்சுக்குழாய்களில் எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நெஞ்சு பகுதியில் இறுக்கமான உணர்வு போன்றவை ஏற்படலாம்.

Also Read : உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் ’வைட்டமின் சி’ நிறைந்த உணவுகள்..!

ரன்னர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

1. மாலை நேர ரன்னிங்:

தினமும் ரன்னிங் சென்றே தீருவேன் என அடம்பிடிக்கும் நபர்கள் காலை வேளைக்குப் பதிலாக, மாலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள காற்றின் தரம், மாலையில் ஓரளவுக்கு குறையக்கூடும் என்பதால் 4 முதல் 5 மணி அளவில் ரன்னிங் செல்வது சிறப்பானதாகும்.

2. மாஸ்க் அணியுங்கள்:

வெளியே ரன்னிங் செல்ல திட்டமிடும் நபர்கள் நுரையீரலுக்குள் மாசுக்கள் நுழைவதை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயமாகும். N95/N99 ஆகிய மாஸ்குகளை அணிவது நுரையீரலை பாதுகாக்க உதவும் என்றாலும், மாஸ்க் அணிந்து கொண்டு ஓட வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் மாஸ்க் அணிந்து கொண்டு ஓடும் போது ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபடுவதோடு, மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மிதமான வேகத்தில் வாக்கிங் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது.

Also Read :  இந்த உணவுகளை சாப்பிட்டால் மலட்டு தன்மை உண்டாகுமாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

3. ஜிம்மில் உடற்பயிற்சி நல்லது:

காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள நாட்களில் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது ஜிம்மிலோ டிரெட்மில்லில் ஜாக்கிங் செல்வது நல்லது. இது நுரையீரலை காற்று மாசில் இருந்து பாதுகாக்க உதவும்.

4. பூங்காவில் ஓடுவது நல்லது:

காற்று மாசு அதிகமுள்ள தெருக்களில் ஓடுவதை விட பூங்காக்கள் அல்லது மரங்கள் நிறைந்த பகுதிகளில் ரன்னிங் செய்வது நல்லது. ஏனெனில் மரங்கள் காற்றில் உள்ள மாசுக்களை வடிக்கட்டும் இயற்கை வடிகட்டிகளாக செயல்படுகின்றன. எனவே, ஒரு பூங்காவில் ஓடுவது சுத்தமான காற்றையும், நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Air pollution, Running