ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Sattvic Diet: எடை குறைக்க சாத்விக உணவு முறையை எல்லாரும் பின்பற்றலாமா? பயன் உண்டா?

Sattvic Diet: எடை குறைக்க சாத்விக உணவு முறையை எல்லாரும் பின்பற்றலாமா? பயன் உண்டா?

டயட்

டயட்

Sattvic Diet Weight loss: சாத்வீக உணவு சாப்பிட்டால் மட்டும் தான் உடல் எடை விரைவில் குறைக்க முடியுமா வேறு உணவுகள் வழியாக எடை குறைக்க முடியாதா என்று பலருக்கும் கேள்வி எழும்பலாம்!

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எடை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எடை குறைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் முதலில் தங்களுடைய உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி சேரும்போது எடை குறைய உதவும். ஒரு சிலர் உடற்பயிற்சி செய்தால் கூட உணவுகளில் மாற்றத்தை செய்யவில்லை என்றால் கலோரிகள் குறையாமல் எடை குறையவே குறையாது.

  அது போல தீவிரமான கிராஷ் டயட் என்று கூறப்படும் ஒரு கொழுப்பு மட்டும் இருக்கும் உணவு. அல்லது கார்போஹைட்ரேட் இல்லாத உணவு ஆகிய உணவுகளையும் சாப்பிடக் கூடாது. உடலும் மனமும் சோர்ந்து போகாமல். உங்களை புத்துணர்ச்சியோடு உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி எடையும் குறைக்க உதவும் உணவுப் பழக்கம் தான் சாத்விக் டயட் என்று கூறப்படும் சாத்வீக உணவு முறை. இதை பற்றி முழுமையாக இங்கே பார்க்கலாம்.

  சாத்விக் டயட் / சாத்வீக உணவுமுறையில் என்னென்ன உணவுகள் அடங்கும்

  சாத்விக் டயட் என்று கூறப்படும் உணவு பழக்கத்தில், ஃபிரெஷ்ஷான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், விதைகள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயிறு வகைகள் ஆகியவை அடங்கும். காய்கறிகள் சாலட், அல்லது பழங்களின் கலவை, முளைக்கட்டிய பயிறு வைத்து செய்த உணவுகள் ஆகியவை சாத்வீக உணவாக கருதப்படுகிறது.

  சாத்வீக உணவு பழக்கத்தை எல்லாரும் பின்பற்றலாமா?

  சாத்வீக உணவு என்பது பெரும்பாலும் சமைக்காத உணவுகளையே குறிக்கின்றது. ஆனால், சாத்வீக உணவுகள் எல்லோருக்கும் பொருந்தாது. அதாவது எல்லோராலுமே பச்சைக் காய்கறிகள், பழங்களை அல்லது பயிறு வகைகளை அப்படியே சாப்பிட முடியாது. குறிப்பாக, இர்ரிடபில் பவுல் சிண்ட்ரோம் (IBS - Irritable Bowel syndrome ) என்ற செரிமான கோளாறு இருப்பவர்களுக்கு உணவுகளை சமைக்காமல் சாப்பிடுவது அதன் தீவிரத்தை அதிகப்படுத்தும். அது மட்டும் இல்லாமல், சாத்விக டயட்டை யாரெல்லாம் பின்பற்றலாம் மற்றும் பின்பற்றக்கூடாது என்ற வரைமுறையும் இருக்கின்றது.

  இதையும் வாசிக்க: உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்தான 5 உணவுகள்! 

  வயிறு உப்புசம் ஏற்படும் அபாயம் அதிகம்

  காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அப்படியே சாப்பிடும் பொழுது வயிற்று உப்புசம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. பொதுவாக இந்த குறிப்பிட்ட உணவுகளுடன் வேறு சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சொல்லும் பழக்கம் இருக்கின்றது. அந்த வகையில் சாத்வீக டயட் உணவுகளுடன் நீங்கள் வேறு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

  உணவு வகைகள்

  உங்களுக்கு வயிறு உப்பசம் அல்லது செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பல வகையான உணவுகளை ஒரே நேரத்தில் நீங்கள் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதிகப்படியான சர்க்கரை, இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டாம். அதேபோல சாப்பிட்ட பிறகு வேறு எந்த தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  இதையும் வாசிக்கஉயிருக்கே ஆபத்தாகும் கல்லீரல் கொழுப்பு.. காரணம் என்ன? சரிசெய்வது எப்படி?

  வேறு எப்படி உடல் எடை குறைக்க முடியும்?

  சாத்வீக உணவு சாப்பிட்டால் மட்டும் தான் உடல் எடை விரைவில் குறைக்க முடியுமா வேறு உணவுகள் வழியாக எடை குறைக்க முடியாதா என்று பலருக்கும் கேள்வி எழும்பலாம்!

  உணவுகளின் அளவை குறைத்து சாப்பிடுவதன் மூலம் தாராளமாக எடையை குறைக்கலாம். எல்லோராலுமே உணவை பச்சையாக, சமைக்காமல் சாப்பிட முடியாது அல்லது எல்லா வேலைகளிலும் சமைக்காத உணவுகளை சாப்பிட முடியாது.

  எனவே எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் போர்ஷன் கண்ட்ரோல் என்று கூறப்படும் சாப்பிடும் உணவின் அளவை குறைத்து சாப்பிடுவதன் மூலம் எடை குறைக்க முடியும். வழக்கமாக நீங்கள் சாப்பிடுவதை விட 30% குறைவாக சாப்பிடும்போது நீங்கள் சாப்பிடும் கலோரிகளின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தவிர்த்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

  அது மட்டும் இல்லாமல் மெதுவாக நிறுத்தி நிதானமாக சாப்பிடுவது எடை குறைக்க உதவும். அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும் உடைகள் எடை குறைக்க உதவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Diet, Diet tips, Weight loss