வைரஸ் கண்காணிப்பு ஆய்வின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் ஷாப்பிங், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், வேலைக்குச் செல்வது ஆகியவை கோவிட்-19 பரவுதலுக்கான முக்கிய பங்களிப்பாளர்களில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. COVID-19 தொற்று இரண்டாவது அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் , செப்டம்பர்-நவம்பர் 2021 இல் கட்டுப்பாடுகள் இல்லாதபோதும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் வெளிப்புற நடவடிக்கைகளை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள், குறிப்பாக ஓமிக்ரான் மாறுபாட்டின் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. திங்களன்று, இந்தியாவில் 1,79,723 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் ஒமிக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை 4,003 ஆக உள்ளது. COVID-19 நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பை தடுக்க, தனிநபர்கள் ஆபத்தான செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் தங்களால் முடிந்தவரை அவற்றைப் பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும்.
ஆய்வின்படி, COVID-19 தொற்று பரவுவதை அதிகரித்த அபாயகரமான நடவடிக்கைகள் : ஷாப்பிங்கிற்காக வெளியில் செல்வது, வேலைக்கு செல்வது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், உணவகங்களில் சாப்பிடுவது, விளையாட்டு மைதானங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புற விருந்துகளுக்குச் செல்வது போன்றவை கொரோனா தொற்று பாதிப்பை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு முறை வெளியில் ஷாப்பிங் செய்யச் செல்பவர்கள், மற்றவர்களை விட நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு எச்சரிக்கிறது.
WHO எச்சரிக்கை..! ஓமிக்ரான் தொற்றில் இருந்து துணி மாஸ்க்குகள் உங்களை பாதுகாக்காது
ஆய்வில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, வீட்டிற்கு வெளியில் யாரோ ஒருவருடன் பகிரப்பட்ட காரைப் பயன்படுத்துவது, உடமைகளை பயன்படுத்துதல், உட்புற உணவகம், கஃபே அல்லது கேன்டீனில் சாப்பிடுவது, உட்புற மற்றும் வெளிப்புற விருந்துகளுக்குச் செல்வது போன்ற வீடு அல்லாத வெளிப்புறச் செயல்பாடுகள் கொரோனா பாதிப்பை தீவிரப்படுத்தும் . இதனால் புறக்கணிக்க முடியாத விகிதத்தில் கோவிட்-19 பரவுதல் வழக்குகள் இருக்கும்.
அதேபோல் திரையரங்குகள், கச்சேரிகள் அல்லது உட்புற விளையாட்டு நிகழ்வுகள் அல்லது அழகு நிலையங்கள், ஸ்பா ஆகிய இடங்களுக்கு செல்வதும் கொரோனாவை பரப்பும் என்று கூறுகிறது. எனவே இதுபோன்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு வீட்டில் பாதுகாப்பாக இருப்பதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.