உடல் பருமனால் குடலிறக்க பிரச்சனை அதிகரிப்பு : எடையை குறைக்க அறுவை சிகிச்சை அவசியமா..?

உடல் பருமன்

அதிக எடை கொண்டவர்களில் ஹெர்னியா என்று சொல்லப்படும் குடலிறக்க பிரச்சனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
இந்தியாவின் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் உடல் பருமனும் ஒன்று. இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை 2010-லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்த பிரச்சனை இரட்டிப்பாகும். பொதுவாக உடல் பருமன் ஒருவரில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் மூட்டு பிரச்சினைகள் போன்ற பல நோய்களுடன் தொடர்புடைய பிற கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

அதன்படி, அதிக எடை கொண்டவர்களில் ஹெர்னியா என்று சொல்லப்படும் குடலிறக்க பிரச்சனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெர்னியா (குடலிறக்கம்) என்பது குடலில் உண்டாகும் ஒரு வகை சிக்கலாகும். குடலிறக்கம் காரணமாக, வயிற்றில் துளைகள் ஏற்படுகின்றன. மேலும் அவை வீங்கிய வடிவத்தில் வெளியே தெரிகின்றன. இதனால் இடுப்பின் தசைகள் பலவீனமடையும். இந்த பிரச்சனை ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடத்திலும் காணப்படுகிறது.

அதிலும், உடல் பருமன் கொண்ட நோயாளிகளுக்கு ஹெர்னியா மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உண்மையில், பருமனான மக்கள் குடலிறக்க பிரச்சனையை அனுபவிப்பதற்கான அதிக ஆபத்தில் இருப்பது மட்டுமல்லாமல், அத்தகைய நோயாளிகளிடையே குடலிறக்க அறுவை சிகிச்சை தோல்வியடைவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆபத்தை குறைக்க, அதிக எடை அல்லது பருமனான நோயாளிகள் பெரும்பாலும் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பு உடல் எடையை குறைக்கும்படி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.இது குறித்து, குருகிராமின் மெடந்தா மெடிசிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் விகாஸ் சிங்கால் கூறியதாவது, "பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது ஒரு வகையான அறுவை சிகிச்சையாகும். இது கணிசமான அளவு எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் நோயாளிகள் பொதுவாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற கூட்டு நோய்களிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குகிறது. மேலும் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் காணலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு உண்டாகும் தசைகளின் வலியைக் குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...

மேலும், வயிற்று சுவர் குடலிறக்கத்தை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. அதற்கு அறுவை சிகிச்சை தேவை. சில சந்தர்ப்பங்களில், குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்கு மீண்டும் அந்த பிரச்சனை வரலாம். அதற்கு உடல் பருமன் ஒரு காரணமாகும். வயிற்று சுவரில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக பருமனான நோயாளிகளில் குடலிறக்கம் மீண்டும் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.இதுதவிர பருமனான நோயாளிகளுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை காயம் உள்ளிட்ட சிக்கல்களின் பாதிப்பும் அதிகம். உடல் பருமனால் அவதிப்படும் நோயாளிகள் பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளாக இருக்கலாம். மேலும் மூட்டு வலியால் பாதிக்கப்படுவது அவர்களின் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், எந்த ஒரு செயலையும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர். எனவே, உணவு மற்றும் உடற்பயிற்சி உதவியுடன் சொந்தமாக உடல் எடையை குறைப்பது என்பது அவர்களுக்கு கடினம்.

எனவே, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை இந்த நோயாளிகளுக்கு உடல் எடையை குறைக்கவும், சிக்கல்களைக் குறைக்கவும் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குடலிறக்க பிரச்சனை மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவும். குடலிறக்க சிக்கல்களுக்கான அவசர நிகழ்வுகளைத் தவிர, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அத்தகைய நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட அவசியமாகிறது என்று விகாஸ் சிங்கால் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்த டயட்டையும் பாலோ பண்ணாமல், உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இதோ டிப்ஸ்!

உடல் பருமன் மற்றும் குடலிறக்கம் ஆகிய இரண்டும் பொதுவான பிரச்சனைகள் ஆகும். அவை பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் நோயாளிக்கு சிக்கலை அதிகரிக்கின்றன. இந்த சிக்கலான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடலாம். மேலும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நோயாளிகளுக்கு, முழுமையான மதிப்பீடு தேவைப்படும்.

 
Published by:Sivaranjani E
First published: