முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மழைக்காலங்களில் அதிகரிக்கும் கோவிட் இணைத்தொற்று நோய்கள் : தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன..?

மழைக்காலங்களில் அதிகரிக்கும் கோவிட் இணைத்தொற்று நோய்கள் : தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன..?

ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் ஒரே நேரத்தில் பாதிப்படைவது இணைத்தொற்று நோய் ஆகும்.

ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் ஒரே நேரத்தில் பாதிப்படைவது இணைத்தொற்று நோய் ஆகும்.

ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் ஒரே நேரத்தில் பாதிப்படைவது இணைத்தொற்று நோய் ஆகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. சில இடங்களில் கன மழையும் பெய்துள்ள நிலையில், கோடைகால வெப்பத்திலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த பருவகால மழை, டெங்கு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றது. இந்த இரண்டு நோய்களின் கலவை மிகவும் ஆபத்தானது. கோவிட்-19 உங்கள் சுவாச மண்டலம் மற்றும் ஆரோக்கியத்தை பாதித்து, உடலின் மற்ற எல்லா பகுதிகளையும் பாதித்துள்ள நிலையில், டெங்கு போன்ற நோய்கள் குணமடைவதை இன்னும் கடினமாக்குகிறது.

இணைத்தொற்று என்றால் என்ன?

ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் ஒரே நேரத்தில் பாதிப்படைவது இணைத்தொற்று நோய் ஆகும். அதாவது, ஆரோக்கியமான செல்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வைரஸ் நுண் கிருமியால் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், பல ​​இணை நோய்த்தொற்றின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுவாகவே மழைக்காலங்களில், டெங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதாவது ஒரே நேரத்தில் கோவிட்-19 மற்றும் டெங்கு தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அழிப்பது பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது.

கோவிட்-19 தொற்று பாதிப்பு இருக்கும் போதே, டெங்கு நோய் தாக்கினால், ஏற்படும் விளைவுகள் :

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்வதும், சிகிச்சை மற்றும் மீண்டு வருவதும் அத்தனை சுலபமானதாக இல்லை. இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோடிக்கணக்கானவர்களின் இறப்புக்கும் காரணமாக இருந்துள்ளது.

இப்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆணையாளர்கள் டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு நோய்களாலும் ஒரே நேரத்தில் தொற்று பாதிப்பு ஏற்படுவது சிகிச்சையை கடினமாக்குவது மட்டுமல்லாமல் சிகிச்சைகள் பெரும்பாலும் எந்த தீர்வுகளையும் அளிக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தவிர, இரண்டு நோய்களின் அறிகுறிகளும் சில நேரங்களில் ஒரே மாதிரி இருப்பதால், இது கூடுதல் குழப்பத்திற்கு வழிவகுத்து, நோயறிதலில் தாமதத்தையும் ஏற்படுத்தும்.

நீங்கள் நல்ல ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

குழப்பமடையச் செய்யும் பொதுவான அறிகுறிகள் :

டெங்கு மற்றும் கோவிட்-19 என்று வரும்போது, நோய்த்தொற்றின் ​​அறிகுறிகளை பிரிப்பது கடினமாக இருக்கலாம். ஒரே மாதிரியான அறிகுறிகள் குழப்பத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நோயறிதலில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய பொதுவான தொற்று அறிகுறிகளே இரண்டு தொற்றுகளிலும் காணப்படுகிறது.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை டெங்கு நோயின் சில அறிகுறிகளாகும். இவை அனைத்துமே கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் தோன்றும். ஒரு சில டெங்கு நோயாளிகள் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

டெங்கு வைரஸ் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சருமத்தில் சொறி அல்லது அரிப்பு போன்ற கோவிட் தொற்று அறிகுறிகளும் ஏற்படலாம்.

கோவிட்-19 அல்லது டெங்குவா? பிரித்தறிவது எப்படி?

டெங்குவால் உண்டாகும் காய்ச்சல், சோர்வு மற்றும் உடல் வலி ஆகியவற்றை வேறுபடுத்துவது கடினம் என்றாலும், கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் சில கூடுதல் அறிகுறிகள் உள்ளன. அவை உங்கள் நோயின் மூலத்தை அடையாளம் காண உதவும்.

வறட்டு இருமல், தொண்டைப் புண், வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு போன்ற சுவாச ரீதியான சிக்கல்கள் அனைத்தும் கோவிட்-19 இன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் டெங்கு நோயாளிகளில் காணப்படுவது குறைவு. இருப்பினும், மழைக்காலத்தில் இணைத்தொற்று ஆபத்து அதிகரிப்பதால், ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் டெங்கு மற்றும் கோவிட்-19 பாதிப்பு, என்று இரண்டையும் கண்டறிய முடியும்.

இணைத்தொற்று ஆபத்தை தடுப்பது எப்படி?

பொதுமக்கள் இணைத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் நோயறிதல் முக்கிய பங்கு வகிக்கிறது. அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், மருத்துவ பணியாளர்களுக்கு, நோயறிதல் சவாலான பணியாக இருக்கிறது. எந்த அறிகுறிகள் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ளது, எது டெங்கு நோயின் அறிகுறி என்பதை சரியாக கண்டறிவது முக்கியம்.

பருவமழை காலத்தில், பொறுப்புள்ள தனிநபர்களாகிய நாம் நமது பங்கைச் சரியாக செய்து, திசையன் மூலம் பரவும் நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியம். மழைநீர் தேங்குவதைத் தவிர்ப்பது, கொசு விரட்டியைப் பயன்படுத்துதல், முழு கை உடைகளை அணிவது போன்ற டெங்குவைத் தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது டெங்கு அபாயங்களை தவிர்க்க உதவும். அதே நேரத்தில், நாம் கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். அலட்சியம் மூலம் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Monsoon, Monsoon Diseases