Home /News /lifestyle /

டீனேஜர்ஸ் இடையே அதிகமாக காணப்படும் தொற்று இதுதான்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

டீனேஜர்ஸ் இடையே அதிகமாக காணப்படும் தொற்று இதுதான்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

காட்சி படம்

காட்சி படம்

உடல் பருமன் பெரும்பாலும் பல உடல்நலப் பிரச்சனைகளை கூடவே கொண்டு வருகிறது.

தற்போதைய நவீனகால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அனைத்து வயதினரிலும் பொதுவாக காணப்படும் ஒன்று உடல் பருமன். உடல் பருமன் ஒரு தீவிரமான, நீண்டகால நோயாக மாறலாம். ஆனால் டீனேஜ் பருவத்தினரிடையே தற்போது பரவலாக காணப்படும் உடல்பருமன் பல விஷயங்களின் கலவையால் ஏற்படலாம். மரபணுக்கள், உணவை உடல் எவ்வாறு ஆற்றலாக மாற்றுகிறது அதாவது வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள், போதிய தூக்கமின்மை, வாழ்க்கை முறை தேர்வுகள், உணர்ச்சி சிக்கல்கள், நாளமில்லா கோளாறுகள், நோய்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல காரணிகள் டீனேஜர்களுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படுத்துகின்றன.

கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் டீனேஜர்ஸ் இடையே காணப்படும் அமைதியான தொற்று இது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமீப காலமாக பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் உடல்பருமன் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சஞ்சய் ஷா, பெருந்தொற்று ஒன்றரை வருடங்களாக நீடிக்கும் இந்த நேரத்தில் இளைஞர்களிடையே கணிசமாக உயர்ந்துள்ள உடல் பருமன் சிக்கலுக்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை இடையூறுகள் என்றார்.

தொற்று காரணமாக பல மாதங்களாக வீட்டிலேயே நடக்கும் ஆன்லைன் கல்வி முறை மற்றும் வாழ்க்கை முறையை குழந்தைகளாக விரும்பி தேர்வு செய்யவில்லை என்றாலும் இந்த சூழல்கள் அவர்களின் உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன என்றார்.

உடல் பருமனால் டீனேஜர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் :

உடல் பருமன் பெரும்பாலும் பல உடல்நலப் பிரச்சினைகளை கூடவே கொண்டு வருகிறது. பருமனான உடலமைப்பை கொண்ட டீனேஜர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட சில இருப்பதை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் இது அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வழி வகுக்கிறது.

இது தவிர நீரிழிவு நோய் குறிப்பாக டைப் 2 நீரிழிவு, சுவாச பிரச்சனைகள், மூட்டு வலி, பித்தப்பை கோளாறு, குறைந்த வாழ்க்கைத் தரம், மன அழுத்தம், பிற மனநல கோளாறுகள், உடல் வலி மற்றும் உடல் செயல்பாடுகளில் சிரமம் உள்ளிட்ட இன்னும் பல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உடல்பருமன் கொண்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் தாழ்வுமனப்பான்மை, உருவகேலி உள்ளிட்டவற்றால் உளவியல் சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது என்று டாக்டர் சஞ்சய் ஷா சுட்டிக்காட்டி உள்ளார்.

தவிர உடல் பருமன் உள்ள இளம் பெண்களில் 10-ல் ஒருவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான அல்லது குறைந்த ரத்த ஓட்டம், முகதில் அதிக முடி வளர்ச்சி மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமான கோளாறுகளும் காணப்படுகின்றன.அடுத்து இதுதொடர்பாக பேசிய பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சீனியர் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் டாக்டர் ஷாலினி ஜோஷி வளர்சிதை மாற்ற பிரச்சனைகள், குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிசிஓஎஸ் உள்ளிட்ட சிக்கல்கள் உடல்பருமன் காரணமாக உருவாகலாம் என்று குறிப்பிட்டார்.

Also read : குழந்தையின் காதில் படியும் அழுக்குகளை எப்படி நீக்க வேண்டும்..? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

அதிக உடல் எடை கொண்ட இளவயது பெண்களுக்கு PCOS காணப்படுவது அதிகரித்து வருவதாகாவும் கூறினார். அதிலும் கொரோனா லாக்டவுன் காரணமாக நாள் முழுவதும் நடக்கும் ஆன்லைன் கிளாஸ்கள் காரணமாக பெரும்பாலான இளம்வயது குழந்தைகள் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது அவர்களின் வாழ்க்கை முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தி, உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்து அது அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதித்துள்ளது என்றும் டாக்டர் ஷாலினி ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மற்றும் ஆரோக்கியமான எடை கொண்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்ஸ் கோவிட் 19 நோய் தொற்றால் குறைவாகவே பாதிக்கப்படுவர். ஆனால் உடல்பருமன் கொண்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்ஸ் கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்தியாவிலும் எடை இழப்பு அறுவை சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்க இது காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வாழ்க்கை முறை நோயாக கருதப்படும் உடல்பருமனை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதை சரி செய்தாலே இந்த பிரச்சனையை டீனேஜர்ஸ் சிறப்பாக சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Covid-19, Obesity, PCOS

அடுத்த செய்தி