ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் நிலவும் காற்று மாசுபாடு... அதிகரிக்கும் நுரையீரல் தொற்று... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

குளிர்காலத்தில் நிலவும் காற்று மாசுபாடு... அதிகரிக்கும் நுரையீரல் தொற்று... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நுரையீரல் தொற்று

நுரையீரல் தொற்று

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் உடல் நலப்பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியமான ஒன்று. குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நோயாளிகளும் காய்ச்சலுக்கான ஊசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலம் தொடங்கியிருச்சு.. அப்ப பல உடல் நலப்பிரச்சனைகளும் நம்முடனே சேர்ந்துப் பயணிக்கப் போகிறது என்று தான் அர்த்தம். குறிப்பாக பருவநிலை மாறும் போது தொற்று நோய்களுகம் அதிகரிப்பது பொதுவாக நடைபெறும் ஒரு நிகழ்வு தான். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின் தொடக்கத்தில் புதுடெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கடும் புகை மற்றும் மூடு பனியின் காரணமாக காற்றின் தரம் குறையத் தொடங்குகிறது.

இதனால் தான் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் கூட பட்டாசுகள் வெடிப்பதற்கு இந்திய தலைநகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் அதிகரிக்கும் குளிரின் காரணமாக காற்றின் தரம் மாசுபட்டுத்தான் கிடக்கிறது. இவ்வாறு ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக சமீப காலங்களாக , சுவாசக் கோளாறு, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்காக மக்கள் பலர் மருத்துவமனைக்குச் செல்வது அதிகமாகிவிட்டதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

மேலும் மார்பகத் தொற்று மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள். இதய நோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் அல்லது பிற நாட்பட்ட நோய்கள் போன்ற பல மருத்துவ பிரச்சனைகள் உள்ள முதியவர்கள் இந்த காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதுப்போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் நுரையீரல் தொற்று நிபுணர்கள்.

தடுப்பு நடவடிக்கைகள்..

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் உடல் நலப்பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியமான ஒன்று. குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நோயாளிகளும் காய்ச்சலுக்கான ஊசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும். இதோடு நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் காய்ச்சல் மற்றும் நிமோனியா தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.

Also Read : டெங்குவை லேசாக எடை போடாதீங்க... கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

நுரையீரல் தொற்று நோய் உள்ளவர்கள், இந்த குளிர்காலத்தில் எப்போதும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இன்ஹேலர்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காலங்களில் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் போது குழந்தைகளை வெளியே விளையாட விடாதீர்கள். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், குளிர்ந்த காற்றை சுவாசிக்காதபடி மாஸ்க் அணிய வேண்டும்.

குளிர்காலத்தில் உடல் நல பிரச்சனை உள்ளவர்கள், எப்போதும் சூடான திரவங்களை மட்டுமே குடிக்க வேண்டும்.

குறிப்பாக நீரழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்களின் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இன்சுலின் செலுத்தி வந்தால் அதைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மார்பக தொற்று நோய் சீக்கிரம் அவர்களைத் தாக்கக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Air pollution, Lungs health, Winter