ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்ப காலத்தில் வலது அல்லது இடது... எந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும்..? மருத்துவர் விளக்கம்

கர்ப்ப காலத்தில் வலது அல்லது இடது... எந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும்..? மருத்துவர் விளக்கம்

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

3 மாத கர்ப்பத்திற்கு பிறகு, மல்லாந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு மருத்துவர் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இப்படி தூங்கும்போது, ஒட்டுமொத்த கர்ப்பப்பை மற்றும் குழந்தையின் எடை என்பது முதுகின் மீது அழுத்தம் கொடுக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் அன்புக்குரியவர்களும், மருத்துவர்களும் உங்களுக்கு ஏராளமான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குவார்கள். ஆரோக்கியமான உணவை நீங்கள் சாப்பிட வேண்டியிருக்கும். ஊட்டச்சத்துகளின் அளவை இரட்டிப்பாக்க எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியம்.

இது எல்லாவற்றையும் தாண்டி, இரவில் நன்றாக தூங்கி எழுந்திருக்க வேண்டும். ஆனால், கர்ப்ப காலத்தில் ஆழ்ந்த உறக்கம் வருவது தான் சிரமமான காரியம். குறிப்பாக, வயிறு அழுந்தும் வகையில் குப்புற படுத்து தூங்குவதை நீங்கள் விரும்புபவர் என்றால், இப்போதைக்கு அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது அழுத்தம் கொடுக்கக் கூடும். ஆகவே, கர்ப்ப காலத்தில் சௌகரியமாக தூங்குவது எப்படி என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

எந்தப் பக்கம் சாய்ந்து தூங்குவது நல்லது :

கர்ப்ப காலத்தில், பெண்கள் இடது பக்கம் திரும்பி உறங்க வேண்டும் என்றும், அந்த சமயத்தில் கால் முட்டியை மடக்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுதான் இருப்பதிலேயே சௌகரியமான, சிறந்த பொசிஷன் என்று தெரிவிக்கப்படுகிறது. உடலில் கல்லீரல் வலது பக்கம் அமைந்திருக்கும் நிலையில், நாம் இடதுபுறமாக உறங்கும்போது, அதன் மீது அதிக பிரஷர் ஏற்படாது. இதனால், கல்லீரல் இயல்பாக இயங்க முடியும்.

இது மட்டுமல்லாமல், இடதுபுறமாக தூங்கும்போது இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். கர்பப்பை, சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

அதே சமயம், தொடர்ந்து இடதுபுறமாகவே தூங்கிக் கொண்டிருக்க முடியாது அல்லவா? ஆகவே, பொசிஷன்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. வலது புறமாக தலை சாய்த்து உறங்கலாம். முதுகு முழுவதும் தரையில் அழுந்தும்படி மல்லாந்து தூங்குவதால் தவறொன்றும் இல்லை. அசௌகரியம் எதுவும் இல்லை என்றால் பிரச்சினை இல்லை என்றால் அப்படி தூங்கலாம். ஆனால், 3 மாதம் வரை தான் இப்படி தூங்கலாம்.

கர்ப்பப் பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரிசல்ட் கிடைக்குமா..?

தவிர்க்க வேண்டிய பொசிஷன்கள் :

3 மாத கர்ப்பத்திற்கு பிறகு, மல்லாந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு மருத்துவர் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இப்படி தூங்கும்போது, ஒட்டுமொத்த கர்ப்பப்பை மற்றும் குழந்தையின் எடை என்பது முதுகின் மீது அழுத்தம் கொடுக்கும். இதனால், முதுகு வலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட கூடும்.

தூக்கத்தை மேம்படுத்துவதற்கான டிப்ஸ் :

கர்ப்ப காலத்தில் ஆழ்ந்த உறக்கம் என்பது மிக முக்கியமானது. ஆகவே, சில ஆலோசனைகளை கடைப்பிடித்து ஆழ்ந்து உறங்குவது நல்லது. தூங்கும்போது உடலுக்கு சௌகரியம் கொடுக்கும் வகையில் நிறைய தலையணைகளை பயன்படுத்தலாம். குறிப்பாக, கால் மற்றும் முதுகு பகுதிகளுக்கு அரணாக வைத்துக் கொள்ளலாம்.

ரெகுரலாக ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். சோடா, காஃபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Baby sleeping position, Pregnancy care, Sleep