Home /News /lifestyle /

Rewind 2021 : 2021 ஆண்டை பாதித்த கொரோனாவின் பக்கவிளைவுகள்… இதிலிருந்து மீளும் வழிகள் என்ன?

Rewind 2021 : 2021 ஆண்டை பாதித்த கொரோனாவின் பக்கவிளைவுகள்… இதிலிருந்து மீளும் வழிகள் என்ன?

கொரோனாவின் பக்கவிளைவுகள்

கொரோனாவின் பக்கவிளைவுகள்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி உலக அளவில் 300 மில்லியன் மக்கள் மன ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மன அழுத்தம், மனச்சோர்வு , மனப்பதட்டம் ஆகியவற்றால் 18 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
2020 ஆம் ஆண்டை கடந்த போது பலரும் தப்பித்துவிட்டோம் என்ற மன நிம்மதியில் இருந்தார்கள். ஆனால் பலருக்கும் தெரியவில்லை அதன் சுவடுகள் பேரழிவை விட கொடுமையானது என்று...

2020 ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மெல்ல மெல்ல அடங்க ஆரம்பித்தது. இனி இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது என நினைத்துக்கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாம் அலை வந்தது. அதில் பல உயிர்களை பலி கொடுத்து 2021 ஆண்டு பிறந்தது. கொரோனா அலை சற்று ஓய்ந்தாலும் அதன் தாக்கம் இன்னும் பலருடைய வாழ்க்கைமுறையை , பொருளாதாரத்தை பாதித்துக்கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் வீழ்ந்தோர் பலர் ஒருபக்கம் என்றால் வாழ்க்கை முறை மாற்றங்களால் பல நோய்களை அனுபவித்து வருகின்றனர். கொரோனா கற்றுத்தந்த விஷயங்கள் பல... அதில் முக்கியமானது டிஜிட்டல் வளர்ச்சி. சமூக இடைவெளி, ஊரடங்கு என்ற விஷயங்களுக்கு மாற்றாக உருவெடுத்ததுதான் டிஜிட்டல் வளர்ச்சி.

டிஜிட்டல் வளர்ச்சி ஏற்படுத்திய தாக்கம் :

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, பணப்பரிவர்த்தனைகள் என இவை நம் வசதிக்கு ஏற்ப இருந்தது ஒரு பக்கம் என்றால் அலுவலக பணிகளையும் ஒர்க் ஃபிரம் ஹோம் முறைக்கு மாற்றியது. எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் ஒர்க் ஃபிரம் ஹோம் என சொல்லிக்கொண்டிருந்த கலாச்சாரம் மாறி இப்போது பலரும் ஒர்க் ஃபிரம் ஹோம் என்ற நியூ நார்மல் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இந்த ஒர்க் ஃபிரம் ஹோம் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக இருந்தாலும் தொழிலாளிகளுக்கு பாதகங்களையே அதிகமாக தந்துதுள்ளது.நேரம் , காலம் தெரியாமல் வேலை , இரவு , பகல் பாராது வேலை, இடைவெளி இல்லா வேலை , தொடர்ச்சியான மீட்டிங் என வேலை அழுத்தம் அவர்களை கடுமையாக பாதித்துள்ளது. வீட்டில் தானே வேலை செய்கிறீர்கள் என்கிற வார்த்தை சாதாரணமாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள சிக்கல்களை அனுபவித்த போதுதான் அய்யோ.. அலுவலகம் சென்று வேலை பார்ப்பதே நல்லது என பலரும் உணரத் தொடங்கினர். இந்த ஒர்க் ஃபிரம் ஹோம் கலாச்சாரம் அலுலக வாழ்க்கை , தனிப்பட்ட வாழ்க்கை என்கிற இரண்டிற்குமான இடைவெளியை அழித்தது. எனவே இது ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் உட்பட பல நிறுவன முதலாளிகள் குரல் கொடுத்தனர்.

New Year Resolution 2022 : வருகிற புத்தாண்டிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த உறுதிமொழிகள்..!

உடல் ஆரோக்கியத்தை பாதித்த ஒர்க் ஃபிரம் ஹோம் :

ஒர்க் ஃபிரம் ஹோம் மெல்ல மெல்ல மன அழுத்தமாக மாறியது. இதனால் இளைஞர்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் பல வெளியாகின. அப்படி உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி உலக அளவில் 300 மில்லியன் மக்கள் மன ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மன அழுத்தம், மனச்சோர்வு , மனப்பதட்டம் ஆகியவற்றால் 18 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 60 முதல் 65 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வரையறுத்துள்ளது. இதனால் 1 கோடி முதல் 2 கோடி மக்கள் இந்தியாவில் மன ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இருமுனை கோளாறுகள் (bipolar disorders) மற்றும் ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia) என்னும் மனக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.உடல் உழைப்பை நிறுத்திய டிஜிட்டல் வளர்ச்சி :

ஒர்க் ஃபிரம் ஹோமில் 8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகியவற்றாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் இளைஞர்களே அதிகமாக பாதித்துள்ளனர்.

லாக்டவுன் என்பது உடல் உழைப்பு என்னும் விஷயத்தையே ஒரு வேலையாக மாற்றிவிட்டது. அமர்ந்த இடத்திலேயே அனைத்தும் கிடைத்துவிடும். அலுவலக வேலையும் அமர்ந்த இடத்திலேயே பார்த்துவிடலாம் என்கிற எண்ணம் உடல் உழைப்பை முற்றிலுமாக தடை செய்தது. இதன் விளைவாக பலரும் இன்று உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடல் பருமன் மட்டுமல்லாது லாக்டவுன் ஏற்படுத்திய உடல் உழைப்பின்மை டைப் 2 நீரிழிவு நோயை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5-10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. Annals of Neurosciences என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது 60 இந்திய மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் உடல் உழைப்பின்மை வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது. 37% பேர் மிதமான உடல் உழைப்பை செய்வதாகவும் கூறுகிறது. எனவே தினமும் 150 நிமிடங்கள் மிதமான உடலுழைப்பையும், 75 சதவீதம் தீவிரமான உடலுழைப்பையும் செய்ய WHO பரிந்துரைக்கிறது. ஆனால் இதை 57% மக்கள் பின்பற்றுவதில்லை என்பதை ஆய்வில் கண்டறிந்ததாகக் கூறுகிறது. இதனாலேயே உடல் பருமன், தீர்க்க முடியாத நோய்களை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.

மேலும் the Journal of Epidemiology and Global Health வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் 75.6 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுள்ளர், 26,000 பேர் எண்டோமெட்ரியல் கேன்சரால் பாதிக்கப்பட்டுளனர். இந்த எண்ணிக்கை 2028 ஆண்டில் 91.72 மில்லியனாகவும் மற்றும் 32,000 வழக்குகளாகவும் அதிகரிக்கும் என கணித்துள்ளது. இப்படி கொரோனாவால் தீர்க்க முடியாத நீழிரிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்களும் உடல் பருமனும் அதிகரிக்கரித்துள்ளன.இனி வரும் ஆண்டில் மக்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தினால் மட்டுமே இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும் என்கிறது. அதோடு மக்கள் உடல் உழைப்பை செய்ய வேண்டும். உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் பருமன் எண்ணிக்கை அதிகரிப்பை குறைக்க முடியும். தீர்க்க முடியாத நோய்களை குறைக்க முடியும் என்கிறது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona impact, New Year, YearEnder 2021

அடுத்த செய்தி