• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்ப காலத்தில் அதிக ஓய்வு ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கர்ப்ப காலத்தில் அதிக ஓய்வு ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

கர்ப்பிணிகள் இந்தப் பிரச்சனையை உணர்ந்தால், குழந்தையின் ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்கள், சில உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அறிவோம். அதற்காக, கர்பிணிகள் அதிக ஓய்வெடுக்க வேண்டும் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், உண்மையில் அதிகப்படியான ஓய்வும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். அதிக நேரம் ஓய்வெடுப்பதற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஹார்மோன்களில் மாற்றம்

நாம் ஏற்கனவே கூறியதுபோல கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுக்கு ஒருவிதமான அசௌரிக்கங்களை உண்டாக்கும். வளரும் வயிறு மற்றும் ஒருவிதமான பதட்டம் அவர்களுக்குள் ஏற்பட்டு தூக்க பிரச்சனைகளை உண்டாக்கும். உடலில் ஏற்படும் அசதியால் பெண்கள் அதிக நேரம் ஓய்வெடுக்க விரும்புவார்கள். இதற்கு முக்கிய காரணமாக, புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதை மருத்துவர்கள் கூறுகின்றன. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்தஅழுத்தங்களில் உண்டாகும் மாற்றம் சோர்வை உண்டாக்கி பெண்களை அதிக நேரம் ஓய்வெடுக்க தூண்டும்.

ரிஃப்ளக்ஸ் நோய்

கர்ப்ப காலத்தில், வயிற்றில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் GERD எனப்படும் இரப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு வழிவகுக்கும். உணவுக்குழாயின் அடிப்பகுதியில் தளர்வான தசை வளையம் உள்ள பெண்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். உணவு செரிமானத்துக்கு உதவும் ஆசிட்டானது அதிக நேரம் ஓய்வெடுக்கும்போது தொண்டை பகுதி வரை செல்லக்கூடும். அப்போது, தொண்டையில் உண்டாகும் சில அசௌகரியங்கள் தூக்கத்தை கெடுக்கும்.

மூச்சுத்திணறல்

ஸ்லீப் அப்னியா எனப்படும் மூச்சுத்திணறல் கடுமையான தூக்க கோளாறுகளை உண்டாக்கும். இந்தப் பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் தூங்கும்போது முழுமையாக சுவாசத்தை எடுத்துக்கொள்ள முடியாமல், தடைபட்ட சுவாசத்தை எடுப்பதுபோல் உணர்வார்கள். அவர்களுக்கு குறட்டை மற்றும் சோர்வு நிலை காணப்படும். இதனை ஸ்லீப் அப்னீயா எனக்கூறும் மருத்துவர்கள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பிரச்சனை உருவாவதாக தெரிவிக்கின்றனர்.

Also read... கோடையில் தண்ணீரை ஏன் அதிகளவு குடிக்க வேண்டும்? முக்கிய காரணங்கள்

காலில் ஏற்படும் பாதிப்பு

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் கால் நரம்புகளுக்கும் பரவி ஒருவித தூண்டல் உணர்ச்சியை கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தல் அல்லது ஃபோலிக் மற்றும் இரும்புசத்து குறைபாட்டால் கால்களில் தூண்டல் உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால், நீண்ட நேரம் கால்களை ஓரிடத்தில் அவர்களால் வைத்திருக்க முடியாது. இரவு நேரத்தில் இந்தப் பிரச்சனை உண்டாக வாய்ப்பு உள்ளதால், கர்ப்பிணிகளின் தூக்கம் பாதிக்கிறது.

சிறுநீர் கழித்தல்

கர்ப்பணிகளுக்கு வயிறு வளரும்போது, சிறுநீர் பைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அப்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு கர்ப்பிணிகளுக்கு உண்டாவதால், இரவு நேர தூக்கம் பாதிக்கிறது. இதுபோன்ற தூக்கமின்மை பிரச்சனைகளினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றினால் தூக்கமின்மை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை தினசரி தவறாமல் செய்துவந்தால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சோர்வை போக்குகிறது.மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். தொடர் உடற்பயிற்சி உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கத்தையும் கொடுக்கும்.



மனக்கவலை

உடலில் ஏற்படும் ஒரு சில அசௌகரியங்கள் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி மனதில் ஒருவித கவலையையும் உண்டாக்கும். கர்ப்பிணிகள் இந்தப் பிரச்சனையை உணர்ந்தால், குழந்தையின் ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும். முறையாக மருத்துவரை அணுகி மனநல ஆலோசனைகளை பெறும்போது மனக்கவலையில் இருந்து விடுபடலாம்.
ஒரு தூக்க வழக்கத்தை உருவாக்குதல்



தூக்க நடைமுறை

தூங்குவதற்கு என்ற ஒரு நேரத்தை வழக்கமாக்கிக் கொள்வது தூக்கப் பிரச்சனைகளில் இருந்துவிடுபடலாம். சரியான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், தூங்குவதற்கான நேரத்தை ஒதுக்கிவிட்டீர்கள் என்றால், அந்த நேரத்தில் தூங்குவதை கடைபிடிக்க வேண்டும். தூங்க செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பாக செல்போன் பயன்பாடுகளை தவிர்ப்பது நல்லது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: