கோவிட்-19 அதிகம் பரவும் இடங்கள் இவைதான்.. ஆய்வு அளிக்கும் எச்சரிக்கை என்ன?

வைரஸ் எவ்வாறு, எங்கு பரவுகிறது என்பது குறித்து மக்கள் வைத்திருக்கும் கூடுதல் தகவல்களை கொண்டு எளிதில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது அவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

கோவிட்-19 அதிகம் பரவும் இடங்கள் இவைதான்.. ஆய்வு அளிக்கும் எச்சரிக்கை என்ன?
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 10:44 AM IST
  • Share this:
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஆராய்ச்சியாளர்கள் COVID-19 நோய்த்தொற்றுக்கான அதிக ஆபத்து நிறைந்த இடங்களை அடையாளம் காண முயற்சிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, வைரஸ் எவ்வாறு, எங்கு பரவுகிறது என்பது குறித்து மக்கள் வைத்திருக்கும் கூடுதல் தகவல்களை கொண்டு எளிதில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது அவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

முகக்கவசங்கள், ஹேண்ட் சானிடைசர்கள், சமூக-இடைவெளி என உலகளாவிய தொற்றுநோய்க்கு பத்து மாதங்களாக நாம் புதிய நடைமுறை பழக்கத்திற்கு பழகிவிட்டோம். இப்போது நாம் வெளியே செல்லத் தொடங்கிவிட்டோம், சிறு உணவகங்களில் சாப்பிடுகிறோம், திறந்தவெளி பொழுதுபோக்குகளை அனுபவிக்கிறோம், நெரிசலான இடங்களுக்கு வருவதை வெறுக்கிறோம்:

ஆனால் பாதிப்புகள் இன்னும் அதிகரித்து வருகின்றன, ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் கொரோனோ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். காரணம், மனித தொடர்புகள் முன்பை விட அதிகரித்துள்ளன. ஊரடங்கால் வீட்டிலிருந்தவர்கள் இப்போது வெளியே செல்கிறார்கள், அவர்கள் அத்தியாவசியங்களுக்காக மட்டுமே வெளியே செல்வதாகவும் கூறுகின்றனர். Nature-இல் வெளியிடப்பட்ட ஒரு புதிய விஞ்ஞான ஆய்வு, நீங்கள் கோவிட் -19 வைரஸ் தொற்றை பெற்றுக்கொள்ளும் இடங்களைக் கண்டறிந்துள்ளது.
பெரிய நகரங்களில், குறைந்த அளவிலான மக்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு காரணமாகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, உணவகங்கள், ஜிம்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்கள் இதுபோன்ற இடங்களை நாம் தவிர்ப்பது நோய் பரவுவதை கணிசமாகக் குறைக்கும். அதிகபட்ச கொரோனா தொற்றில் 20% புள்ளிகளை ஈடுசெய்வது 80% க்கும் அதிகமான தொற்றுநோய்களைக் குறைக்கும் என்று கணித்துள்ளது. ஆனால் வழக்கமாக அதிகபட்ச ஆக்கிரமிப்பை முழுமையாக ஒப்பிடும்போது 40% வருகைகளை மட்டுமே இழக்கிறோம், என்று "ஜூரே லெஸ்கோவெக் , ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் ஆசிரியரும் கணினி அறிவியல் பேராசிரியர் CNN-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய பெருநகரங்களில் 10 க்குள் கோவிட் -19 இன் பரவலை மாதிரியாகக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பான வரைபடத்திலிருந்து செல்போன் இருப்பிடத் டேட்டாவைப் பயன்படுத்தினர்.கொரோனா பரவலைத் தடுக்க பாதுகாப்பு என நினைக்கும் இவையெல்லாம் பாதுகாப்பு அல்ல

அதில் உணவகங்கள், கஃபேக்கள், மளிகைக் கடைகள், ஜிம்கள், ஹோட்டல்கள், அத்துடன் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் மக்களின் நடமாட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.

"மெட்ரோ பகுதிகளில் சராசரியாக, முழு சேவை உணவகங்கள், ஜிம்கள், ஹோட்டல்கள், கஃபேக்கள், மத நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சேவை உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் போது தொற்றுநோய்களின் மிகப்பெரிய கணிப்பை அதிகரிக்கும்" என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், குறைந்த வருமானம் கொண்ட சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் இந்த மாதிரி கணித்துள்ளது.மேலும் லெஸ்கோவெக் கூறுகையில் "அதிக வருமானம் உடைய நபருடன் குறைந்த வருமானம் உடைய நபரை ஒப்பிடும் போது ஆபத்து இரு மடங்காகும் என்று எங்கள் மாதிரி கணித்துள்ளது" என்று கூறினார். இருப்பினும், இந்த ஆய்வில் குறைபாடுகளும் உள்ளன, இது அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வு அல்ல. இந்த மாதிரி ஒரு உருவகப்படுத்துதல் மற்றும் இந்த டேட்டா ஒரு நாட்டில் வெறும் 10 பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் சிறைச்சாலைகள், குடியிருப்புகள், மருத்துவ இல்லங்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற பிற இடங்களை இந்த ஆய்வு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading