Home /News /lifestyle /

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி...  கண்பார்வை இழப்பை தடுக்க ஸ்மார்ட் LED கான்டாக்ட் லென்ஸ்கள் கண்டுபிடிப்பு! 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி...  கண்பார்வை இழப்பை தடுக்க ஸ்மார்ட் LED கான்டாக்ட் லென்ஸ்கள் கண்டுபிடிப்பு! 

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் விழித்திரையைப் பாதிக்கும் நோயை குறிக்கிறது.

நீரிழிவு விழித்திரை நோய் எனப்படும் டயாபெட்டிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக புதிய எல்இடி கான்டாக்ட் லென்ஸை தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் விழித்திரையைப் பாதிக்கும் நோயை குறிக்கிறது. இந்த விழித்திரை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறியாவிட்டால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது, நீரிழிவினால் கண்ணில் ஏற்படும் மாற்றங்களை கொண்டிருக்கும் உள்பரவும் நோயாகும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்காத நபர்கள் அதிக பட்ச ஆபத்தாக நீரிழிவு ரெட்டினோபதி நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் அணிவதற்காக பிரத்யேக கான்டாக்ட் லென்ஸை கண்டறிந்து தென் கொரிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பேராசிரியர் சேய் குவாங் ஹான் மற்றும் மெட்டீரியல் மற்றும் பொறியியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற ஜியோன்-ஹுய் லீ ஆகியோர் பிஎசை பயோடெக் கோ-வின் மருத்துவர் சங்பாய் சின் உடன் இணைந்து, நீரிழிவு நோயாளிகள் அணியக்கூடிய LED கான்டாக்ட் லென்ஸை உருவாக்கியுள்ளனர். இதனை அணிந்தால், ஆரம்ப நிலையிலேயே கண்களில் ஏற்படும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு, பார்வை இழப்பை தடுக்கவும், உடனடி சிகிச்சையளிக்கவும் உதவும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த எல்இடி கான்டாக்ட் லென்ஸ்கள் 120 வாட்ஸ் அளவிலான சிவப்பு நிற எல்இடி ஒளி நேரடியாக விழித்திரையில் படுவதன் மூலம் உருவாகும் ரெட்டினோபதியை குறைக்கிறது. இதனுடைய உண்மைத் தன்மையை 8 வாரங்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளின் மாதிரிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் என்னென்ன..? உயிருக்கே ஆபத்தாகலாம்.!

8 வாரங்களில், வாரத்திற்கு 15 நிமிடங்கள் என 3 முறை லென்ஸ்கள் அணிந்த விலங்குகளுக்கு இந்த நிலை ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டது, மறுபுறம் லென்ஸ்கள் அணியாத விலங்குகளுக்கு ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கிளீவ்லேண்ட் கிளினிக் வெளியிட்டுள்ள கூற்றுப்படி, நிலை தீவிரமடையும் போது, ​​ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு தொலைதூர பொருட்களைப் படிப்பதில் அல்லது பார்ப்பதில் சிக்கல், மங்கலான அல்லது சிதைந்த பார்வை, நிற குருட்டுத்தன்மை, மோசமான இரவு பார்வை மற்றும் சிறிய கரும்புள்ளிகள் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.



நீரழிவு ரெட்டினோபதிக்கான சிகிச்சை முறைகளாக 2 வலிமிகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று கண்ணுக்குள் ஊசியை மீண்டும், மீண்டும் செலுத்தி சிகிச்சை அளிக்க கூடியது. மற்றொரு சிகிச்சை முறையில் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, லேசர் மூலம் விழித்திரைக்கு அருகே உள்ள நுண் குழாய்களை அடைக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த 2 சிகிச்சை முறைகளை விடவும் தென் கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய LED கான்டாக்ட் லென்ஸ் மார்டன் மருத்துவத்தின் அடுத்த படிநிலையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஊசி, லேசர் என எவ்வித வலிமிகு சிகிச்சையும் இன்றி, நீரழிவு ரெட்டினோபதி நோயால் பாதிக்கப்பட்ட ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு நபர் LED கான்டாக்ட் லென்ஸை அணிவதன் மூலமாக கண் பார்வையை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது இதன் சிறப்பாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Eye care, Eye Problems

அடுத்த செய்தி