Home /News /lifestyle /

வைட்டமின் D உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொரோனா பாதிப்பை குறைக்க முடியுமா ?

வைட்டமின் D உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொரோனா பாதிப்பை குறைக்க முடியுமா ?

வைட்டமின் டி

வைட்டமின் டி

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

  வைட்டமின் டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் என்று அறியப்படுகிறது. அந்த வகையில் பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை சூரிய ஒளி வைட்டமின் கொரோனா வைரஸ் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்குமா மற்றும் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்குமா என்பதை சோதனை செய்ய முடிவெடுத்துள்ளது.

  கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். மேலும், வைட்டமின் டி போதுமான அளவு இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறுகளின் அபாயத்தையும் குறைகிறது என தெரியவந்துள்ளது. இந்த இரண்டு விளைவுகளும் கொரோனா வைரஸ் அறிகுறிகளில் அடங்கும். தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட முந்தைய ஆய்வில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 80%-த்திற்கும் அதிகமான மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளது.

  எனவே, உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்தை வழங்க பரிந்துரைத்து வருகின்றன. இந்த நிலையில், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களை புதிய ஆய்வுக்குழு, கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் வைட்டமின் டி-யால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கண்டறிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'வைட்டமின் டி ஃபார் கோவிட் -19  என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வைட்டமின் டி வைரஸின் கடுமையான அறிகுறிகளைக் குறைக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்வதற்கான மருத்துவ பரிசோதனையே இந்த ஆய்வு.

  சோதனையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி , சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என தெரிகிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்திய கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவைப் பெற்றவர்கள் மற்றும் கடந்த 5 நாட்களுக்குள் அவற்றின் அறிகுறிகளை கொண்டவர்கள் விவிஐடி ஆய்வில் சேர தகுதியுடையவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

  இந்த ஆய்வில் பங்கேற்க உள்ள 2,700 நபர்கள் ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒருமுறை வைட்டமின் டி அல்லது ப்லேஸ்போ ஆய்வு காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுக்காக மக்கள் மருத்துவமனைக்கோ அல்லது ஆய்வுக் கூடத்திற்கோ வரவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே விரல்-முள் மூலம் எடுக்கப்பட்ட 2 இரத்த மாதிரிகளை வழங்கவும், இரண்டு சுருக்கமான ஆன்லைன் கேள்வித்தாள்களை முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். கேள்வித்தாள்களில் ஒன்று சோதனை ஆரம்பம் ஆகும் போதும், மற்றொன்று மாத்திரைகள் எடுத்துக் கொண்ட பிறகு ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு முறையும் நிரப்பப்பட வேண்டும்.

  இது குறித்து, பிரிங்காம் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பேராசிரியரும் மற்றும் விவிஐடி ஆய்வில் ஈடுபட்டுள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவருமான எம்.டி ஜோன் மேன்சன் கூறியதாவது, "வைட்டமின் டி, நோய்த்தொற்றுக்கு எதிராக நோய்எதிர்ப்பு அமைப்பின் பாதுகாப்பை உயர்த்துவதற்கான நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. ஆனால் இது கொரோனாவுக்கு குறிப்பாக சோதிக்கப்படவில்லை. சில ஆய்வுகள் வைட்டமின் டி வீக்கத்தைக் குறைக்கக்கூடும் என்று காட்டுகின்றன. அதேபோல இது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுக்கும் கடுமையான கொரோனா நோயைக் குறைப்பதில் பங்கு வகிக்கக்கூடும். இருப்பினும், கொரோனவுடன் போராடுவதில் வைட்டமின் டி-ன் சாத்தியமான நன்மைகளை இந்த ஆய்வு கண்டுபிடிக்கும்" என விளக்கம் அளித்துள்ளார்.

  Also read : உடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணா போதுமாம்..

  மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வைட்டமின் டி சத்துள்ள பொருட்களை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி ஒரு சக்திவாய்ந்த ஆதாரமாக இருக்கும். ஆனால் இந்த தொற்று சூழ்நிலையில் வெளியேறுவதைத் தவிர்ப்பவர்களுக்கு, தினசரி ஊட்டச்சத்தினை சரிசெய்தலுக்காக வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.

  உங்கள் தினசரி உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

  * ஆரஞ்சு பழச்சாறு
  * மஷ்ரூம்
  * முட்டை (குறிப்பாக மஞ்சள் கரு)
  * பால் மற்றும் பால் பொருட்கள்
  * ஓட்ஸ்
  *கொழுப்பு மீன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Vitamin D

  அடுத்த செய்தி