• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா நோயாளிகள் ’குப்புற படுத்தல்’ மூலம் மூச்சு திணறலை குறைக்க முடியும் - ஆய்வில் தகவல்

கொரோனா நோயாளிகள் ’குப்புற படுத்தல்’ மூலம் மூச்சு திணறலை குறைக்க முடியும் - ஆய்வில் தகவல்

காட்சி படம்

காட்சி படம்

கொரோனா நோயாளிகளுக்கு குப்புற படுத்தல் என்ற பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான வென்டிலேட்டர்கள் தேவையை கணிசமாகக் குறைக்கலாம்.

  • Share this:
லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தீவிரமான மூச்சுத் திணறல் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு Prone Positioning (குப்புற படுத்தல்) என்ற பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான வென்டிலேட்டர்கள் தேவையை கணிசமாகக் குறைக்கலாம். அதாவது, அவர்களில் ஏற்படும் மூச்சு திணறலை குறைக்க முடியும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. 1,100 க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில், அதிலும் குறிப்பாக போதுமான அளவு சூடான மற்றும் ஈரப்பதமான ஆக்ஸிஜனை வழங்க பயன்படும் உயர்-ஓட்ட நாசி கேனுலா ஆக்ஸிஜன் சிகிச்சை தேவையை கொண்ட நோயாளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடையில் அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரான்ஸ், கனடா, அயர்லாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள மருத்துவ மையங்களில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட Prone Positioning சோதனையின் மூலம் ஆய்வு தொடர்பான முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அமெரிக்காவின் ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இணை பேராசிரியர் ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஜீ லி, " Prone Positioning நிலையில் மூச்சுவிடுவது நுரையீரலை மிகவும் திறம்பட செயல்பட உதவுகிறது" விளக்கினார்.

மேலும் பேசிய அவர், "கடுமையான ஆக்ஸிஜனேற்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் Prone Positioning-ல் படுத்திருக்கும் போது அதாவது வயிற்று பகுதி தரையில் இருப்பது போல படுத்திருக்கும் போது, ​​இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரலில் காற்றோட்டம் ஆகியவை சிறப்பாக இருக்கும். இது இரத்த ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது," என்று மேலும் தெரிவித்துள்ளார். இந்த முன்னோக்கு மற்றும் அவதானிப்பு ஆய்வுகளின்படி, விழித்திருக்கும் பிரான் பொசிஷனிங் நிலை கொரானா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்த உதவும். ஆனால் அது நோயாளியை மையமாகக் கொண்ட விளைவுகளை மேம்படுத்துகிறதா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.

Also read : சத்தமில்லாமல் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம்… அறிகுறிகள் என்னென்ன? ஓர் அலர்ட் பார்வை!

மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்விற்காக, அதிக ஓட்டம் கொண்ட நாசி கேனூலாவிலிருந்து சுவாச ஆதரவு தேவைப்படும் கொரோனா பாதித்த நோயாளிகள், இந்த மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க ஒப்புக்கொண்டனர். இவர்களில் ஒரு குழு supine positioning -ல் (மல்லாந்து படுத்தல்) அதாவது முகம் சீலிங்கை பார்த்தபடி படுக்கையில் நேராக படுக்கவைக்கப்பட்டனர். மற்றொரு குழு, Prone positioning-ல் (குப்புற படுத்தல்) படுக்கவைக்கப்பட்டனர். அதாவது முகம் கீழ்நோக்கி பார்த்து கிடைமட்டமாக படுக்கவைக்கப்பட்டனர். மேலும் அவர்களால் முடிந்த வரை அந்த நிலைகளில் இருக்கும்படி கேட்கப்பட்டனர்.

supine மற்றும் Prone நிலையில் படுத்திருந்த குழுக்கள் இரண்டும் அதிக ஓட்டம் ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் தரமான மருத்துவ மேலாண்மை நிலையை பெற்றிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வென்டிலேட்டர்கள் உதவி தேவையா என்பதை தீர்மானிக்க நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அதன்படி, Prone நிலை குழுவில் இருக்கும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் உதவி தேவைப்படுவது கணிசமாக குறைந்து இருப்பதைக் காட்டியது. அதாவது விழித்திருக்கும்-Prone நிலை குழுவில் வென்டிலேட்டர்கள் தேவை 33 சதவீதமாகவும் மற்றும் supine நிலை குழுவில் 40 சதவீதமாகவும் குறைந்தது.

Also read : கோவிட் தொற்று குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்துள்ளது? பெற்றோர்கள் செய்ய வேண்டிவை!

இதையடுத்து, சென்டர் ஹாஸ்பிடீசியர் பிராந்திய யுனிவர்சிட்டேர் டி டோர்ஸ் (CHRU)-ன் ஆய்வு மைய எழுத்தாளர் ஸ்டீபன் எர்மன், விழித்திருக்கக்கூடிய பிரான் பொசிஷன் ஒரு பாதுகாப்பான தலையீடு என்று கூறினார். இது கோவிட் -19 காரணமாக ஏற்படும் கடுமையான ஹைபோக்ஸீமிக் சுவாச செயலிழப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் ஸ்டீபன் எர்மன் கூறியதாவது, "எங்கள் கண்டுபிடிப்புகள், அதிக ஓட்டம் நாசி கன்னுலா ஆக்சிஜன் தெரபி தேவை இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு விழித்திருக்கக்கூடிய பிரான் பொசிஷன் நிலைப்பாட்டை வழக்கமாக செயல்படுத்த வேண்டும் என்பதை ஆதரிக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் இந்த நிலையை தொடர்வது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைய சூழலில் வென்டிலேட்டர்கள் தேவையை குறைப்பது என்பது அந்த வளங்களை திறம்பட பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் வென்டிலேட்டர்கள் உண்மையில் சொந்தமாக சுவாசிக்க முடியாத மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று லி கூறினார். இப்போது நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியை நாடும் தீவிர நிலையை தடுப்பதற்கான உத்திகள் எங்களிடம் உள்ளன. இதன் மூலம் உண்மையிலேயே வென்டிலேட்டர்கள் அவசியம் தேவைப்படும் நோயாளிகளுக்கு அந்த சாதனங்களைச் சேமிக்கிறோம் என்று ஆய்வு ஆசிரியர்லி கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: