Home /News /lifestyle /

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம்

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம்

IVF செய்து குழந்தையைப் பெற்றெடுத்துவிடலாம் என்ற கனவில் இருக்கும் பலர் இந்த முயற்சியில் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கின்றனர். இந்த சூழலில் தான், பல IVF கருக்கள் உருவாகத் தவறியதற்கானக் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
உடலில் அதிக எண்ணிக்கையிலான குரோமோசோம்கள் காரணமாக, கருவுற்ற முட்டை வெற்றிக்கரமாக இனப்பெருக்கத்தை உறுதி செய்யாது எனவும் சில நாள்களுக்குள் பெரும்பாலான கருக்கள் வளர்வதை நிறுத்தி இறந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை, மல்டிபெசாலிட்டி ஹாஸ்பிடல், பொது மருத்துவமனை என பல்வேறு நோய்களுக்காகவே பிரத்யேக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் எந்தளவிற்கு அதிகரித்துள்ளதோ? அதற்கேற்றால் போல் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகளும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிம்மதியை இழக்க வழிவகுக்கும். திருமணமாகி ஓராண்டு காலம் முடிந்துவிட்டது ஏன்? இன்னும் குழந்தை இல்லையா? என பலர் கேட்பதைத் தாங்க முடியாமல் எப்படியாவது குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று செயற்கை கருத்தரித்தலை மக்கள் அதிகளவு நாடி செல்கின்றனர்.

IVF செய்து குழந்தையைப் பெற்றெடுத்துவிடலாம் என்ற கனவில் இருக்கும் பலர் இந்த முயற்சியில் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கின்றனர். இந்த சூழலில் தான், பல IVF கருக்கள் உருவாகத் தவறியதற்கானக் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது? இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்...IVF சிகிச்சை : ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில் கருமுட்டையை தனியாகப் பிரித்து, ஆய்வகத்தில் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுற வைக்கப்படுகிறது. பின்னர் கருவுற்ற முட்டையை அதாவது கருவை பெண்ணின் கருப்பையில் பொருத்துகிறார்கள். தொடர்ந்து வயிற்றில் கரு வளர்வதற்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் போது பெண்ணின் வயிற்றில் குழந்தை வளர ஆரம்பிக்கிறது. ஆனால் இது போன்ற முயற்சி எப்போதும் வெற்றியில் முடியும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் தோல்வியை சந்திக்கும். ஒரு சிலருக்கு பல முறை ஐவிஎஃப் செய்தால் மட்டுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி : முழுமையான தகவல்கள்

IVF குறித்து ஆய்வு நடத்திய, கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் இணை ஆசிரியரும், இனப்பெருக்க நிபுணருமான ஜென்னா டுரோசி, தெரிவிக்கையில், IVF மூலம் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான மனித கருக்கள், கருத்தரித்த சில நாள்களுக்குப் பிறகு வளர்வதை நிறுத்துகின்றன. சில நேரங்களில் மனித வளர்ச்சியின் திறமையின்மையால் இனப்பெருக்க சிகிச்சையின் செயல்திறன் தடைபடுவதாகக் கூறியுள்ளார். இதனால் தான் செயற்கை கருவுறுதல் சிகிச்சையைப் பெறும் பல பெண்களுக்கு கர்ப்பமாக இருக்க பல IVF சுற்றுகள் தேவைப்படுகின்றன எனவும் ஆனால் சிகிச்சைக்கான விலை உயர்வு அதிகம் என்பதால் பலரும் இதனை மீண்டும் செய்ய முன்வரமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வகேலோஸ் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் அண்ட் சர்ஜன்களின் புதிய ஆராய்ச்சியின் படி, உடலில் அதிக எண்ணிக்கையிலான குரோமோசோம்கள் காரணமாக, கருவுற்ற முட்டை வெற்றிக்கரமாக இனப்பெருக்கத்தை உறுதி செய்யாது எனவும் சில நாள்களுக்குள் பெரும்பாலான கருக்கள் வளர்வதை நிறுத்தி இறந்துவிடுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக உயிரணுப்பிரிவின் முதல் கட்டங்களில் டிஎன்ஏ நகலெடுக்கும்போது ஐவிஎப் சிகிச்சையில் தவறுகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக மனித முட்டை கருவுற்ற 24 மணி நேரத்திற்குப்பிறகு உயிரணுப்பிரிவைத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாயின் போது அசௌகரியங்களை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்கள்...

IVF குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஐவிஎப் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் கருவுறுதல் சிகிச்சையை நாடாத முட்டை தானம் செய்பவர்களுக்கு பெட்ரி டிஷில் கருக்கள் உருவாக்கப்பட்டன என்ற போதிலும், அந்த பிரச்சனைகள் சாதாரண மனித இனப்பெருக்கத்தின் போது உருவாக்கப்பட்ட கருக்களையும் பாதிக்கலாம் என ஆய்வு கூறுகிறது.

மேலும் டிஎன்ஏ இரட்டைச் சுருளில் உள்ள தடைகள் கருவில் டிஎன்ஏ நகலெடுக்கும் தவறுகளுக்கு மூலக்காரணமாக அமைகிறது. இந்த தடைகளின் சரியான தன்மை தெரியவில்லை என்ற போதிலும், அவை டிஎன்ஏ நகலை நிறுத்துவதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவருகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy

அடுத்த செய்தி