Home /News /lifestyle /

சிறிய சிறுநீரக கற்களை அலட்சியம் செய்வதால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்!

சிறிய சிறுநீரக கற்களை அலட்சியம் செய்வதால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்!

சிறுநீரகக் கல்

சிறுநீரகக் கல்

அறிகுறியற்ற சின்ன கற்களையும் ஒரே சிகிச்சையில் அகற்றி விடுவதே நல்லது என்பது எங்களது ஆய்வு மூலமாக நிரூபனம் ஆகியுள்ளது என்று மேத்தீவ் சொரேன்சன் தெரிவித்தார். கற்களை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நோயாளிகளுக்கு சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை செய்யும்போது, கூடுதலாக சின்னஞ்சிறு கற்கள் இருப்பின் அதனால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று கருதி அப்படியே விட்டுவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நோயாளி மீண்டும் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக 6 எம்எம் அளவுக்கு குறைவாக இருக்கும் கற்கள் அகற்றப்படுவதில்லை. ஆனால், அந்த கல்லின் நிலை குறித்து கண்காணிக்கப்படுகிறது. ஏனென்றால், அந்தக் கல்லானது சிறுநீர் குழாய்க்கு நகர்ந்து விட்டால், அதற்குப் பிறகு எளிமையாக வெளியேறிவிடுகிறது என்று வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசன் என்ற ஆய்வு நிறுவனத்தின் சிறுநீரகவியல் துறை நிபுணர் மேத்தீவ் சொரேன்சன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்கள் ஆய்வு வெளிவருவதற்கு முன்பு இருக்கின்ற நிலை என்னவென்றால், சில கற்களுக்கு சிகிச்சை அளித்து வெளியேற்றிவிட முடியும் என்று கருதப்பட்டது. பெரும்பாலான மருத்துவமனைகளில் கல்லின் அளவை பொறுத்துதான் அதை அகற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.



சின்னஞ்சிறிய கற்கள் என்பது சிகிச்சைக்கு இடையூறாக இருந்தால் அகற்றுகின்றனர். அப்படி இல்லை என்றால் அதை அப்படியே அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த அலட்சியமே நாளடைவில் மீண்டும் தொந்தரவு ஏற்படக் காரணமாக அமைகிறது என்றார் அவர்.

6 ஆண்டுகளாக ஆய்வு

கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகளாக 75 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பாதி நோயாளிகளுக்கு பெரிய கற்கள் மட்டுமே அகற்றப்பட்டன. எஞ்சியுள்ள நோயாளிகளுக்கு பெரிய கற்கள் மற்றும் இரண்டாம் நிலை கற்கள் உள்பட அனைத்தும் அகற்றப்பட்டன.

அடிக்கடி வயிறு வலிக்கிறதா.? வாயுத்தொல்லை மட்டும் காரணம் இல்லை.!

ஆனால், இரண்டாம் நிலை கற்கள் அகற்றப்படாமல் இருந்த நோயாளிகளுக்கு, அந்தக் கற்கள் மேலும் வளர்ச்சி அடைவது சிடி ஸ்கேன் மூலமாக உறுதி செய்யப்பட்டது அல்லது வலி மற்றும் இதர அறிகுறிகள் காரணமாக, தங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நோயாளிகள் முன்வைத்தனர். அதே சமயம், இரண்டாம் நிலை கற்கள் அகற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் தொந்தரவு ஏற்படும் வாய்ப்புகள் 82 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.



இத்தகைய நிலையில், அறிகுறியற்ற சின்ன கற்களையும் ஒரே சிகிச்சையில் அகற்றி விடுவதே நல்லது என்பது எங்களது ஆய்வு மூலமாக நிரூபனம் ஆகியுள்ளது என்று மேத்தீவ் சொரேன்சன் தெரிவித்தார். கற்களை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kidney Stone

அடுத்த செய்தி