Home /News /lifestyle /

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி : முழுமையான தகவல்கள்

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி : முழுமையான தகவல்கள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

ஜூலை 6 ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப்பு புற்றுநோய்க்கான தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜூலை 12 ஆம் தேதி சீரம் நிறுவனத்திற்கு சந்தை அங்கீகாரத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DGCI) அமைப்பு பரிந்துரைத்தது.

மேலும் படிக்கவும் ...
இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. இது இந்தியாவின் முதல் குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசிஎன்பது கூடுதல் சிறப்பாகும். இந்த தடுப்பூசியானது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அகற்றுவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த தடுப்பூசியானது தற்போதுள்ள தடுப்பூசிகளை விட மலிவான விலையில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகில் இரண்டாவது பொதுவான புற்றுநோய் வகை என்று இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை குறிப்பிடுகின்றனர். கருத்தரிக்க கூடிய வயதுடைய (15-44) பெண்களில் புற்றுநோய் இறப்புக்கான இரண்டாவது பொதுவான காரணமாக இந்த புற்றுநோய் உள்ளது. உலக அளவில் இந்தியா இந்த புற்றுநோயின் பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுமார் 1.23 லட்சம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆண்டுக்கு 67,000 இறப்புகள் இந்த கர்ப்பப்பை வாய்ப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC-WHO) தெரிவித்துள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப்பு புற்றுநோய்க்கான தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜூலை 12 ஆம் தேதி சீரம் நிறுவனத்திற்கு சந்தை அங்கீகாரத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DGCI) அமைப்பு பரிந்துரைத்தது. உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் படி (IARC-WHO), கர்ப்பப்பை வாய்ப்பு புற்றுநோயின் தடுப்பூசியான செர்வாவாக், ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் போலவே VLP (வைரஸ் போன்ற துகள்கள்) அடிப்படையிலானது. மேலும் எச்.பி.வி வைரஸ் L1 புரதத்திற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.



மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) என்பது இனப்பெருக்கக் குழாயின் மிகவும் பொதுவான வைரஸ் தொற்று ஆகும். பாலியல் ரீதியாக அதிக ஈடுபாடு கொண்ட பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இந்த புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் சிலர் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது பாலியல் ரீதியாக உருவாக கூடிய மிகவும் பொதுவான நோயாகும். இந்த வகை புற்றுநோயில் பெரும்பாலானவை - 95% க்கும் அதிகமானவை எச்.பி.வி காரணமாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

எச்.பி.வி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மேலும் இந்த வைரஸின் பாதிப்பிற்கு ஆளாகும் பெண்களை இந்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். இந்த தடுப்பூசி பல உயிர்களை காப்பதால் இது அறிவியலின் உயரிய கண்டுபிடிப்பாகவே பார்க்கப்படுகிறது. புற்றுநோயிற்கு எதிராக இது போன்ற பல தடுப்பூசிகளை வரும்காலங்களில் அறிமுகம் செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக தற்போதைய சூழலில் உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cervical cancer

அடுத்த செய்தி