Home /News /lifestyle /

அதிகரிக்கும் வெயில் தாக்கத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு... தவிர்ப்பதற்கான வழிமுறைகள்..!

அதிகரிக்கும் வெயில் தாக்கத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு... தவிர்ப்பதற்கான வழிமுறைகள்..!

கோடைக்கால தொற்றுகள்

கோடைக்கால தொற்றுகள்

பொதுவாக கோடை காலத்தில் நம் வயிற்றில் செரிமானத் திறன் குறைவாக இருக்கும். இதனால் செரிமான ரீதியாக உடலில் ஏராளமான தொந்தரவுகள் ஏற்படும்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், தற்போது கொரோனா 4வது அலை வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தால் அதிக வியர்வை, களைப்பு, உடல் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் பொதுவாக எல்லோருக்கும் வர கூடியவை என்பது நமக்கு தெரியும். ஆனால், வெகு சிலருக்கு வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும். இது ஏன் ஏற்படுகிறது? இதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூல்டிரிங்க்ஸ், குளிர்ந்த குடிநீர் போன்றவற்றால் ஏற்படலாம் :

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நாம் கூல்டிரிங்க்ஸ், சாஃப்ட் டிரிங்க்ஸ் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட கூலிங் தண்ணீர் போன்றவற்றை அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். இவற்றில் ஏதேனும் கிருமித் தொற்றுகள் இருப்பின், அதன் காரணமாக வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



இதுகுறித்து மருத்துவர் பிரதீப் முகர்ஜி கூறுகையில், “கோடை காலங்களில் கூலிங் குடிநீர், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றை அருந்தும்போது கிருமித் தொற்று ஏற்படலாம் என தெரியாமலேயே மக்கள் பலர் அதை அருந்துகின்றனர். கூலிங் குடிநீரை அருந்துவதால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதன் விளைவாக வைரஸ் காய்ச்சல் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் வரும்’’ என்று தெரிவித்தார்.

செரிமானத் திறன் குறையும் :

பொதுவாக கோடை காலத்தில் நம் வயிற்றில் செரிமானத் திறன் குறைவாக இருக்கும். இதனால் செரிமான ரீதியாக உடலில் ஏராளமான தொந்தரவுகள் ஏற்படும். இத்தகைய சமயத்தில் செரிமானத்திற்கு சிக்கல் தரக் கூடிய உணவு வகைகளை நீங்கள் சாப்பிட்டால் அதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்த உணவுகளை தப்பித்தவறி கூட சமைக்காமல் பச்சையாக சாப்பிடக் கூடாது..! 

குறிப்பாக, காரசாரமான உணவுகள், பழைய உணவுகள், முந்தைய நாள் உணவுகளை அடுத்த நாள் சூடேற்றி விற்பனை செய்யும் சில ஹோட்டல் உணவுகள் போன்றவற்றை சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும்.

அறிகுறிகள் :

வயிற்று வலி, வயிறு உப்புசம், திடீரென உடலின் வெப்பம் அதிகரிப்பது போன்றவை வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மலத்துடன் சேர்ந்து ரத்தம் வெளியேறக் கூடும்.



தற்காத்துக் கொள்வது எப்படி

* காரம் குறைந்த, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுங்கள்.
* தண்ணீர் ஏராளமாக அருந்துவதன் மூலமாக உடலில் நீர்ச்சத்தை கடைபிடியுங்கள். ஆனால், கூலிங் தண்ணீர் கூடாது. வேண்டுமானால் பானைத் தண்ணீர் அருந்தலாம்.
* வெயிலி அலைந்து திரிந்த உடனேயே பதப்படுத்தப்பட்ட கூல்டிரிங்ஸ் அருந்துவதை தவிர்க்கவும்.
* உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க கதர் ஆடைகள், லைட் கலர் ஆடைகளை அணியவும்.
* வெயில் நேரத்தில் காலி வயிறுடன் எங்கும் சுற்ற கூடாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diarrhoea, Stomach Pain, Summer Heat

அடுத்த செய்தி