Home /News /lifestyle /

மெனோபாஸ் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

மெனோபாஸ் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

மெனோபாஸ்

மெனோபாஸ்

40 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உடலில் நிகழும் எந்த மாற்றங்களையும் கண்காணிக்க வேண்டும்.

குறிப்பிட்ட வயதை கடக்கும் பெண்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் மாதவிடாய் ஏற்படாத போது மட்டுமே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எதிர்கொள்வார்கள். 40-களின் முற்பகுதியில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால் அவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இது இயல்பானது.

40 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உடலில் நிகழும் எந்த மாற்றங்களையும் கண்காணிக்க வேண்டும். அபப்டி ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் கூடிய விரைவில் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.

மெனோபாஸ் என்பது ஒருமுறை மட்டும் நிகழும் நிகழ்வல்ல..

மெனோபாஸ் நிகழ்வதற்கான சராசரி வயது 51 என நிபுணர்கள் கூறுகின்றனர்.மெனோபாஸ் என்பது உடலில் நிகழும் படிப்படியான செயல்முறை மாற்றம் என்பதை 40 வயதை கடந்த பெண்கள் புரிந்துகொள்வது அவசியம். ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆண்டுகள் முடிவடையும் போது, மெனோபாஸ் என்பது பல ஹார்மோன் மற்றும் உடலியல் மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு இயற்கை செயல்முறை. 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது.

மெனோபாஸ் காரணமாக ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis).!

ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண் ஹார்மோன் எலும்பு இழப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. பெண்கள் தங்களது மெனோபாஸ் காலத்தில் குறிப்பாக (ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது அதிக எலும்பு சத்தை இழக்கிறார்கள். இதனால் பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். எனவே பெண்களுக்கு 40 வயதிற்குப் பிறகு, கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.



ஹாட் ஃப்ளஷ்ஷஸ் (Hot flushes):

மெனோபாஸிற்கு முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன் அளவுகள் மாறுகின்றன. . இந்த ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் பிற ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இதனால் உடலின் வெப்பநிலை கட்டுப்பாடு பாதிப்படையும் என்பதால் தூக்கத்தின் போது குறிப்பிடத்தக்க வியர்வை ஏற்படுகிறது.

உடல் பருமன் கருவுறாமைக்கு முக்கிய காரணம் இல்லை - ஆய்வில் வெளியான உண்மை..!

பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பிரச்சனை:

மெனோபாஸ் என்பது ஒரு நோயல்ல, என்றாலும் இதனால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஹட் ஃப்ளாஷஸ், இரவில் வியர்த்தல், தூக்கமின்மை, யோனி வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறியது முதல் கடுமையானது வரை, வலி மற்றும் வேதனையை ஏற்படுத்துகின்றன.

சிகிச்சை:

பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து அறிகுறிகளுக்கும் சிகிச்சை உள்ளது. சிறிய ஆனால் நீண்ட கால வாழ்க்கை முறை மாற்றங்கள், மறுபக்கம், இந்த அறிகுறிகளை சரியாக கையாள்வதில் முக்கியமானவையாக கருதப்படுகிறது.



மருந்துகளின்றி மெனோபாஸை திறம்பட நிர்வகிப்பதற்கான டிப்ஸ்..

* தினமும் தவறாமல் உடபயிற்சி

* தியானம் அல்லது யோகா வகுப்பில் பங்கேற்பது

* முடிந்தவரை பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு இடையில் பேலன்ஸை ஏற்படுத்துவது

* நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல தொடர்பில் இருப்பது, அவர்களுடன் அடிக்கடி வெளியே செல்வது

* மெனோபாஸ் பருவத்தில் இருப்பவரிடம் உங்கள் அனுபவங்களை ஷேர் செய்து கொள்வது

* நினைவாற்றல் இழப்பு, பதட்டம், விரக்தி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் உரிய சிகிச்சை பெறுவது

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Menopause, Periods, Women Health

அடுத்த செய்தி