ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுய இன்பத்திற்கு பின் நல்ல தூக்கம் வர என்ன காரணம்..?

சுய இன்பத்திற்கு பின் நல்ல தூக்கம் வர என்ன காரணம்..?

சுய இன்பத்திற்கு பின் நல்ல தூக்கம் வர என்ன காரணம்..?

சுய இன்பத்திற்கு பின் நல்ல தூக்கம் வர என்ன காரணம்..?

தூக்கம் என்பது சுய இன்பம் செய்வதால் கிடைக்கும் ஒரு நன்மை. அதே போல, சுய இன்பம் செய்வதால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்தியான பாலியல் உறவுக்குப் பிறகு நல்ல ஆழமான தூக்கம் வருவது போலவே சுய இன்பம் அதாவது மாஸ்டர்பேஷன் செய்தால் கூட நன்றாக தூக்கம் வரும். மாஸ்டர்பேஷன் செய்த பின்பு உடலும் மனமும் அமைதியாகி, ரிலாக்ஸ் ஆகி நீங்கள் நிம்மதியாக தூங்க முடியும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தூக்கமின்மைக்கு பல விதமான வேறு சில உடல் உபாதைகள் காரணமாக இல்லாத பட்சத்தில் சுய இன்பம் நல்ல ஆழமான, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

உடல்ரீதியான பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுய இன்பம் உதவுவதோடு மட்டுமல்லாமல், அது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. தேவையில்லாத டென்ஷனில் இருந்து நீங்கள் உடனடியாக வெளிவருவீர்கள். மாஸ்டர்பேஷன் செய்தால், உடல் ரீதியான பாலியல் தேவை தானே பூர்த்தியாகிறது, எப்படி தூக்கம் வரும் என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம்! சுயஇன்பம் எவ்வாறு உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆர்காசம் மன அழுத்தத்துக்கு நிவாரணம் அளிக்கிறது, வலியை குறைக்கிறது

நீங்கள் சுய இன்பம் செய்யும் பொழுது நிச்சயமாக ஆர்காசம் அதாவது உச்சம் அடைவீர்கள். ஒரு ஆண் அல்லது பெண் ஆர்காசம் அடையும் போது, உடலில் பலவிதமான னியூரோ கெமிக்கல்களும் ஹார்மோன்களும் உற்பத்தியாகும். உதாரணமாக, உடலை மகிழ்ச்சியாக புத்துணர்ச்சியாக சந்தோஷமாக வைத்திருக்க உதவும் ஆக்ஸிடோசின், செரடோனின் உள்ளிட்ட பல விதமான ஹார்மோன்கள் ரிலீஸ் ஆகும்.

Also Read :  கணவரின் சட்டை வாசனையை நுகர்ந்தால் பெண்களின் மன அழுத்தம் போய்விடுமா..? வித்தியாசமான ஆய்வு வெளியீடு..!

இதனால் ஈயிஃபோறியா என்ற அதீதமான சந்தோஷமான, உற்சாகமான மனநிலையை நீங்கள் உணர்வீர்கள். இது உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதுமட்டுமில்லாமல் வாசோபிரஸ்ஸின் என்ற ஹார்மோன் வலியை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புரோலாக்டின் என்ற நியூரோ கேமிகில் நீங்கள் திருப்தியாக உணரச் செய்து, உங்களை உடனடியாக தூங்குவதற்கு உதவுகிறது.

சுய இன்பம் அசௌகரியத்தைக் குறைத்து நிம்மதியாக இருக்க வைக்கிறது

உடல்ரீதியான பிரச்சினைகளாக இருந்தாலும் சரி அல்லது மனக்கவலைகள், டென்ஷன் என்று எதுவாக இருந்தாலும் சரி, சுய இன்பம் செய்வது மிகப்பெரிய ரிலீஸ் கொடுக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, மேலே கூறியுள்ளது போல ஆர்காசம் அடையும் பொழுது உடலில் ஒரே நேரத்தில் ஹார்மோன்கள் ரிலீஸ் ஆகும். இது உடனடியாக வலியைக் குறைக்கும். எனவே உங்களுக்கு எந்த விதமான அசௌகரியமாக இருந்தாலும், மாஸ்டர்பேஷன் செய்வது விரைவில் அதில் இருந்து வெளியேற உதவி உங்களுக்கு மனதை அமைதிப்படுத்தும், இதனால் நன்றாகத் தூங்குவீர்கள்.

Also Read : ஆண்களுக்கான அட்வைஸ்..ஒரு பொண்ணு உங்கள பாக்குறப்போ இப்படி தான் ரியாக்ட் பண்ணனும்..

சுயஇன்பம் உடலை ரிலாக்ஸ் செய்கிறது

பாலியல் திருப்தி என்பது உடல் மனதும் இரண்டுக்குமானது. எனவே மாஸ்டர்பேஷன் செய்யும் பொழுது அது உடலை ரிலாக்ஸாக ஆக்குகிறது. உங்களுக்கு எந்த விதமான டென்ஷனாக இருந்தாலும் சரி, ஆர்காசம் ஏற்படும் பொழுது அதை நீங்கள் மறந்து விடுவீர்கள். உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆன பிறகு, நன்றாக தூங்கலாம்.

ஆனால், உங்களுக்கு அதிக அளவு பிரஷர் அல்லது டென்ஷன் இருந்தால், ஆர்காசம் அடைவது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

சுயஇன்பம் உடல் சோர்வாகி விடும்

பாலியல் உறவு மட்டுமல்லாமல் சுய இன்பமும் உடலுக்கு சோர்வைத் தரும், சுய இன்பம் மூலம் ஆர்காசம் அடைந்த பிறகு எல்லோருமே சோர்வாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால் நிச்சயமாக உடலும் மனமும் அமைதியாகி, நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். பாலியல் உறவின்போது ஒரு சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால் அவை எதுவுமே சுய இன்பம் செய்யும் போது இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சுய இன்பம் செய்பவர்கள் கூடுதல் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்கம் என்பது சுய இன்பம் செய்வதால் கிடைக்கும் ஒரு நன்மை. அதே போல, சுய இன்பம் செய்வதால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Masturbation, Sleep