முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ’திராட்சை’ : ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ’திராட்சை’ : ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

திராட்சை

திராட்சை

சிவப்பு திராட்சை கொலஸ்ட்ராலை குறைக்க காரணம் அதில் இருக்கும் நார்ச்சத்து முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

’சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரால் மெல்ல இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. எனவேதான் கொலஸ்ட்ரால் என்றாலே உயிரை பறிக்கும் எதிரியாக சித்தரிக்கப்படுகிறது.

இன்று பெரும்பாலான மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்சனைகளுக்கு கொலஸ்ட்ரால் முக்கிய காரணியாக இருப்பதற்கு அதன் அறிகுறியற்ற தன்மையே காரணம்.

ஆம்.. கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கிறது எனில் அது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. தீவிர நிலையை அடைந்த பின்னே அறிகுறிகளை காட்டத்தொடங்குகிறது. எனவேதான் கொலஸ்ட்ராலால் உண்டாகக் கூடிய பிற நோய்கள் அதிகரிக்கின்றன.

கொலஸ்ட்ரால் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவப்பு நிற திராட்சைகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Harvard Medical School கூற்றுப்படி சிவப்பு திராட்சை கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.

சிவப்பு திராட்சை கொலஸ்ட்ராலை குறைக்க காரணம் அதில் இருக்கும் நார்ச்சத்து முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. பின் அதில் இருக்கும் பாலிபினால்ஸ் (polyphenols) கெட்ட கொழுப்பை கரைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது நியூட்ரியன்ட்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read : தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

எனவே தினமும் 46 கிராம் திராட்சையை உட்கொண்டால் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைக்கலாம் என்கிறது. அப்படி இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மூன்று கப் திராட்சை 8 வாரங்களுக்கு தினமும் கொடுத்ததில் கணிசமான அளவில் கொழுப்பு குறைந்திருந்தது தெரிய வந்துள்ளது. எனவே கொழுப்பை கரைக்க திராட்சையை ஸ்நாக்ஸ் போல் கூட சாப்பிட்டு எளிதாக குறைக்கலாம் என பரிந்துரைக்கிறது.

First published:

Tags: Cholesterol, Grapes, High Cholesterol Symptoms