கண்கள் நமது உடலில் உள்ள சென்சிடிவ் உறுப்புகளில் ஒன்றாக உள்ளதால் தான் 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நமது கண்களைத் தேய்த்தாலே கண்கள் சிவந்து விடுவதைப் பாரத்திருப்போம். கண்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமம் மற்றும் சவாலன விஷயம். ஆனால் இதைத்தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக காற்று, தூசி, புகை, விலங்குகளின் முடி, தாவர மகரந்தம் போன்றவற்றின் ஒவ்வாமை பண்புகள் உள்ளது. எனவே மீண்டும் மீண்டும் நாம் அதே இடத்திற்கு செல்லும் போது ஆன்பாடிகளை உருவாக்குவதோடு ஒவ்வாமை அதாவது கண் அலர்ஜி பிரச்சனைக்கு ஆளாகின்றோம். இதோடு கண்கள் ஹிஸ்டமைன் உள்ளிட்ட ராசாயனங்களை வெளியிடுவதால், ஒவ்வாமை வெண்படலத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
இதனையடுத்து கண்கள் சிவத்தல், அரிப்பு, கண்களில் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. இதை நாம் சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், பார்வைக் குறைபாடுடைய கார்னியல் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுப்போன்ற பாதிப்புகள் நீங்கள் உணர நேர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனைகளை நீங்கள் அனுபவிக்க நேரிடும். எனவே இந்நேரத்தில் கண்களில் ஒவ்வாமை ஏற்படக்காரணம் என்ன? அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து முதலில் இங்கே தெரிந்துக் கொள்வோம்..
கண் அலர்ஜி ஏற்படக்காரணம்? பொதுவாக கண் அலர்ஜி அதாவது ஒவ்வாமை பிரச்சனை என்பது புகை, தூசி,செல்லப்பிராணிகளின் முடி போன்றவற்றால் அதிகளவில் ஏற்படுகிறது. இதுப்போன்ற நேரத்தில் உங்களது கண்களில் லேசான அரிப்பு ஏற்பட்டாலே அந்த இடத்தை விட்டு சற்று விலகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கண் அலர்ஜி அதிகமாகிவிடும்.
Also Read : Eye Care : நீண்ட நேரம் லேப்டாப்பையே பார்ப்பதால் கண் எரிச்சலா..? சரி செய்ய இதை டிரை பண்ணுங்க..!
கண் அலர்ஜி பிரச்சனைக்கான அறிகுறிகள்: கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண் சிவப்பாகுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை தான் ஆரம்ப அறிகுறிகளாக உள்ளனர். இதோடு கண்புரை, கண்களின் மேற்பரப்பில் திசு வளர்ச்சி. கண்ணை சுற்றியுள்ள தோல் புற்றுநோய், வெயிலைக்கண்டலே கண்களை திறக்க முடியாத நிலை மற்றும் மாகுலர் சிதைவு போன்றவையெல்லாம் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன.
சிகிச்சைகள் மற்றும் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Eye care, Eye Problems