முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டெங்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்பட்டால் பாதிப்புகள் தீவிரமாகும் : IgG சோதனையில் உறுதி..!

டெங்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்பட்டால் பாதிப்புகள் தீவிரமாகும் : IgG சோதனையில் உறுதி..!

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

IgM என்பது இம்யூனோகுளோபுளின் M என்று கூறப்படுகிறது. இது தொற்று ஏற்படும் போது, ரத்தத்தில் ரிலீஸ் ஆகி உடல் முழுவதும் பரவுகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலத்தில் தொற்று பாதிப்பு மிகவும் அதிகரிக்கும். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், வைரஸ் தொற்று எளிதில் பரவும். டெங்கு பலரையும் பாதிக்கக்கூடிய காலம் இது. பலரும், ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அடிக்கடி டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் அல்லது தொடர்ந்து டெங்கு காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு தீவிரமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

உதாரணமாக, ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து அவதிப்பட்டு மீண்டவர்களை விட, அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் வருபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் 50% அதிகத் தீவிரமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்றால் உடல் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நல சிறப்பு மருத்துவரான நிஹார் பரீக், இதைப் பற்றி பகிர்ந்த விவரங்கள் இங்கே.

டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள்

பொதுவாக டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது உறுதி செய்ய, NS1 என்ற சோதனை செய்யப்படும். இந்த சோதனையின் மூலம், டெங்கு வைரசால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அடுத்ததாக, டெங்கு வைரஸ் எந்த அளவுக்கு தீவிரமாக பாதிப்பை ஏற்பட்டுள்ளது என்பதை IgG மற்றும் IgM சோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

NS1 சோதனை என்பது, டெங்கு வைரஸ்ஸின் அமைப்பாக-இல்லாத புரதம் NS1 இருக்கிறதா என்பதைக் கண்டறிகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டால், NS1 என்ற புரதம் ரத்தத்தில் காணப்படுகிறது. டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட 7 நாட்களுக்குள் இந்த புரதம் ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், 7 நாட்களுக்கு பின்னர், இந்த சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

IgG சோதனை என்பது தொற்று ஏற்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு, உடலில் ரிலீஸ் ஆகும் ஆன்டிபாடிகள் பற்றிய சோதனையாகும். இது ஒவ்வொரு நபரின் உடல் நலம், நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ் பாதிப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் உடலில் நீண்ட நாட்கள் காணப்படும்.

இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா..? உங்களுக்கான டயட் டிப்ஸ்..!

IgM என்பது இம்யூனோகுளோபுளின் M என்று கூறப்படுகிறது. இது தொற்று ஏற்படும் போது, ரத்தத்தில் ரிலீஸ் ஆகி உடல் முழுவதும் பரவுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றை எதிர்த்து செயல்படும் போது, டெங்கு வைரசுக்கு எதிராக IgM ஆன்டிபாடிகளை ரிலீஸ் செய்யும். வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அத்தகைய அறிகுறிகள் தெரிந்த பிறகு, IGM உடலில் இருப்பதை கண்டுபிடிக்க முடியும் என்று நோய் கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.

IgG சோதனை எவ்வளவு முக்கியமானது?

மயோ கிளினிக் நிபுணர்கள் “IgG சோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரும் போது, ஒரு முறைக்கு மேல் டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். நீங்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து நிவாரணம் அடைந்து மீண்டு வரும் போது, தொற்று ஏற்படுத்திய வைரஸ் பாதிப்புக்கு எதிராக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, மீண்டும் அதே வைரசால் அவ்வளவு எளிதாக பாதிக்கப்பட மாட்டீர்கள்.

அதே நேரத்தில், மற்ற வகையான டெங்கு வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அதனால், உங்களுக்கு மற்றொரு முறை டெங்குவால் பாதிப்பு ஏற்படும் போது, முன்னர் தொற்று பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் அடுத்த முறை தாக்காது. வேறு மூன்று வகையான வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிக்கப்படலாம்” என தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த சோதனை மூலம், நீங்கள் எந்த வகையான வைரலாஸ் பாதிகப்பட்டுள்ளீர்கள், உடலின் அதன் தாக்கம் மற்றும் சிகிச்சைகளை முடிவு செய்ய முடியும்.

First published:

Tags: Dengue fever