கொரோனா தொற்றின் புதிய அறிகுறி : கைகளில் தொடர்ச்சியான இரத்த உறைவு உண்டானால் அலட்சியம் வேண்டாம்..!

கொரோனா அறிகுறிகள்

ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றாலும் கைகளில் உண்டான இரத்த உறைவுப் பிரச்னை நுரையீரலுக்கும் பயணிக்கக் கூடும். இதனால் உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கிறது.

 • Share this:
  கொரோனா ஆரம்பகால அறிகுறிகள் என்பது சாதாரண தொற்றைப் போல் சளி, இருமல், காய்ச்சலைத்தான் கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய உருமாறிய கொரோனா உடல் பாகங்களையே கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துவிடுகிறது. ஏன்...மூளையைக் கூட விட்டு வைப்பதில்லை. அந்தவகையில் தற்போது புதிய அறிகுறியை கண்டறிந்துள்ளது.

  நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் கைகளில் தொடர்ச்சியான இரத்த உறைவு பிரச்னையை சந்திப்பதாக தெரிவித்துள்ளது.

  இந்த அறிக்கையை உறுதி செய்து Rutgers Robert Wood Johnson Medical School வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் கண்டுபிடிப்பு COVID-19 ஆல் ஏற்படும் அழற்சி எவ்வாறு மேல் இரத்த இரத்தக் கட்டிகளை பாதித்து உறைவை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதோடு விஞ்ஞானிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த முறையையும் வழங்குகிறது.  இந்த ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 1000 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகள் கையின் மேற்ப்பகுதியின் கடுமையான உறைவை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

  ஆரம்பத்தில் கைகளில் வீக்கம் உண்டாகிறது என்கிற காரணத்திற்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள பலர் மருத்துவமனையை நாடியுள்ளனர். பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிடிவ் ரிசல்டை காட்டியுள்ளது. பின் அதன் தொடர்சியாக இரத்த உறைவு பிரச்னையை சந்தித்துள்ளனர்.  ஆனால் அவர்களுக்கு மற்ற எந்த அறிகுறிகளும் இல்லை. ஆக்ஸிஜன் அளவும் சீராக இருந்துள்ளது. இந்த அறிகுறி இதுவரை பெரிய ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும்..பாதிக்கப்பட்ட நபர்களில் பலர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோன் என்பது தெரியாமல் சாதாரணமாக இருக்கின்றனர். இதனால் தொற்றின் பலரவல் அதிகரிக்க காரணமாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

  உங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..? கொரோனாவாக இருக்கலாம் என உறுதிபடுத்தும் இந்த 5 அறிகுறிகளை என செக் பண்ணுங்க..!

  அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றாலும் கைகளில் உண்டான இரத்த உறைவுப் பிரச்னை நுரையீரலுக்கும் பயணிக்கக் கூடும். இதனால் உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கிறது. எனவே கைகளில் வலி, வீக்கம், கைகளை தூக்கமுடியவில்லை போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்கிறது இந்த ஆய்வு.

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: