“மெட்ராஸ் ஐ” என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி சென்னையில் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது.
“ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10-15 புதிய நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடிவுக்கு வரும்போது கண் வெண்படல அழற்சி பாதிப்பு சற்றே மிதமான அளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு சென்னை மாநகரில் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பது மெட்ராஸ் ஐ பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது. சமீப வாரங்களில் சிகிச்சைக்காக வருகை தந்த எமது நோயாளிகளுள் 20%க்கும் அதிகமான நபர்களுக்கு கண் வெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ) இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது” என்று சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை கண் மருத்துவர் கற்பகம் கூறினார்.
மெட்ராஸ் ஐ எப்படி பரவுகிறது..?
கண் வெண்படல அழற்சி அல்லது மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஏறக்குறைய 90% கண் வெண்படல அழற்சிகள் அடினோ வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது.
அறிகுறிகள் எப்படி இருக்கும்..?
மெட்ராஸ் ஐ பாதிப்பில் காணப்படும் பொதுவான அறிகுறிகளாக கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் ஆகியவை இருக்கின்றன. ஆனால், கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும்.
Also Read : சுகரை கன்ட்ரோல் பண்ணும், கொலஸ்ட்ராலை குறைக்கும்... கொய்யா இலையில் இத்தனை நன்மைகளா..?
சிகிச்சை முறை என்ன..?
கண் வெண்படல அழற்சி என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றாக இருக்கிறபோதிலும் அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் அதிக தீவிரமான பிரச்சனையாக மாறக்கூடும். பக்கத்திலிலுள்ள மருந்து கடையிலிருந்து ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை மெட்ராஸ் ஐ பிரச்சனைக்காக வாங்கி பயன்படுத்திப் பார்த்துவிட்டு பல நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர்.
சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செயல்பாட்டிற்குப் பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைபடி மெட்ராஸ் ஐ தவிர்க்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை :
தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health tips, Madras Eye