இரைப்பை குடல் அழற்சி பிரச்சனை : சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

இரைப்பை குடல் அழற்சி பிரச்சனை : சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

மாதிரி படம்

வைரஸ்கள் தாக்குவதால் சில நேரங்களில் இரைப்பை குடல் அழற்சி ஏற்படும். இது வயிற்று காய்ச்சல் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது

  • Share this:
நம்முடைய உடல் ஆரோக்கியமானது, செரிமான மண்டலத்துடன் நெருங்கிய தொடர்பு உடையது. வைரஸ்கள் தாக்குவதால் சில நேரங்களில் இரைப்பை குடல் அழற்சி ஏற்படும். இது வயிற்று காய்ச்சல் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.

இந்நோய் பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு அல்லது அசுத்தமான உணவு சாப்பிடுவதன் மூலம், சுத்தமற்ற தண்ணீரை குடிப்பதன் மூலமும் உள்நுழையும் பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. வயிற்று காய்ச்சல் உடல், மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இரைப்பை குடல் அமைப்பை தாக்கும் எந்த வைரஸ்கள் மூலமும் இரைப்பை குடல் அழற்சி என்றும் அழைக்கப்படும் வயிற்று காய்ச்சல் ஏற்படுகிறது.

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்டவை வயிற்று காய்ச்சல் அறிகுறிகளில் அடங்கும். இரைப்பை குடல் அழற்சி எனப்படும் வயிற்று காய்ச்சலின் போது என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும், என்னென்னெ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.



* வயிற்று காய்ச்சலின் போது நிகழும் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை மூலம் உடலில் நீர்சத்து வெகுவாக குறைந்திருக்கும். எனவே அதனை ஈடு செய்ய போதுமான அளவு திரவங்களை குடிப்பது அவசியம். நன்கு கொதிக்க வைக்கப்பட்ட குடிநீர், தேங்காய் நீர் அல்லது இளநீர், இஞ்சி மற்றும் மிளகுக்கீரை கொண்டு செய்யப்பட்ட மூலிகை தேநீர் உள்ளிட்டவற்றை பருகலாம். குறிப்பாக குமட்டலைக் குறைக்க மிளகுக்கீரை தேநீரின் வாசனை உதவும். நச்சுகளை வெளியேற்ற சுத்தமான திரவங்களை குடித்து உடலை நீரேற்றமாகவும், ஆற்றலுடன் வைத்திக்க வேண்டும்.

* வயிற்று தொற்றின் போது காரம், மசாலா அல்லது அதிக எண்ணெய் இல்லாத குறைந்த ஃபைபர்(நார்ச்சத்து) கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. உதாரணமாக வெள்ளை அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கிச்சடியை சாப்பிடலாம். இது நல்ல புரத உள்ளடக்கத்திற்கு உதவும்.

* வயிற்று காய்ச்சலின் போது சாப்பிட சிறந்த ஸ்னாக்காக முட்டைகள் உள்ளன. வயிற்றுக்கு மென்மையான மற்றும் புரதச்சத்து நிறைந்தவை முட்டைகள். முட்டையில் இருக்கும் பி வைட்டமின்கள் மற்றும் செலினியம் இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முக்கியமான ஊட்ட சத்துகளாகும்.



* அதிக கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை எடுத்து கொள்ளாமல் குறைந்த கொழுப்பு சத்துடைய இறைச்சிகளை சாப்பிடலாம். இந்த வகையில் கோழி இறைச்சி உண்பது சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஒரு சிலரின் தீவிர உடல் பாதிப்புக்கு கோழி இறைச்சி கூட கொஞ்சம் ஆபத்தானது. எனவே சாப்பிடும் முன் தனிப்பட்ட நபரின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்.

கோடையில் தண்ணீரை ஏன் அதிகளவு குடிக்க வேண்டும்? முக்கிய காரணங்கள்

* சோள மாவு அல்லது கிரீம் போன்றவற்றை சேர்க்காமல் தயாரிக்கும் சூப்களை குடிக்க முயற்சி செய்யலாம் தேவைப்பட்டால் ஆரோவ்ரூட்(Arrowroot) சூப் முயற்சி செய்யலாம். குழம்பு அடிப்படையிலான சூப்களும் வயிற்று காய்ச்சலின் போது சாப்பிட சிறந்தவை. இவை எலக்ட்ரோலைட்டுகளுடன் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வழங்குகின்றன.

* அழற்சி எதிர்ப்பு முழு உணவுகள், ஊட்டச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள், இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்ற மசாலாப் பொருட்கள், எலும்பு குழம்பு போன்ற உணவுகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நெய் மற்றும் முட்டை போன்ற புரதங்கள் , கொழுப்பு குறைவான இறைச்சி, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்ளலாம்.



தவிர்க்க வேண்டியவை:

* வறுத்த உணவு பொருட்கள் ஜீரணமாவது கடினம் மற்றும் வயிற்று காய்ச்சல் அறிகுறிகளை மோசமாக்கும்.

* காரமான உணவுகள் குமட்டல் மற்றும் வாந்தியை மேலும் தூண்டும்

* அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடுவது வயிற்று போக்கை மோசமாக்கும்

* காஃபினேட்டட் பானங்கள் தூக்கத்தை கலைக்க கூடும். காஃபின் செரிமான பிரச்சனையை அதிகரிக்க கூடும் என்பதால் காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்

* பாலும் சமயங்களில் செரிமான ஆரோக்கியதிற்கு தீமை செய்யும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்கவும்.



பரிந்துரைக்கப்பட்ட உணவு முறை:

காலை உணவு: முட்டையுடன் அரிசி மாவு சில்லா(rice flour chilla)

11 மணிக்கு மேல்: பழங்கள்

மதிய உணவு: வெள்ளை அரிசி மற்றும் குழம்பு சார்ந்த சூப் கொண்ட பாசிப்பருப்பு கிச்சடி

மாலை நேரம்: பழம் / பிசைந்த உருளைக்கிழங்கு

இரவு உணவு: சூப் மற்றும் கிச்ச்டி அல்லது முட்டை அரிசி

மேலும் வயிற்று காய்ச்சலுக்கு போதுமான ஓய்வு, தூக்கம் அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

சிறந்த கதைகள்