• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • கொரோனாவில் இருந்து மீண்டவர்களா நீங்கள்? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் எடுங்க!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களா நீங்கள்? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் எடுங்க!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 • Share this:
  கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற காலத்திற்கு பிறகு அல்லது மருத்துவமனை / கோவிட் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பல நோயாளிகளுக்கு ஒரே கவலையாக இருப்பது, பலவீனம் மற்றும் தொடர்ச்சியான இருமல் தான். எனவே பலர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்கள் எந்த வகையான வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும். எந்த வகையான உணவைப் பின்பற்ற வேண்டும்? என்ன முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  * கொரோனா அறிகுறிகள் தோன்றியதிலிருந்து அல்லது அறிகுறி இல்லாமல் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி அனுப்பியதில் இருந்து குறைந்தது 10 நாட்கள் கடந்துவிட்ட பின்பு மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருக்கும் போது, வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் நோயாளி தனிமைப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அந்த காலம் முடிந்ததும் கொரோனா சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

  * இதையடுத்து பல்ஸ் ஆக்சிமீட்டரைப் பயன்படுத்தி உங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டலை தினமும் சோதனை செய்ய வேண்டும். அது அறை காற்றில் >94% ஆக பராமரிக்கப்பட வேண்டும்.

  * இருமல் தொடர்ந்து இருப்பதையும் அல்லது மோசமடைவதையும் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமத்தை எதிர்கொள்கிறார்களா என்பதையும் குணமடைந்தவர்கள் கவனிக்க வேண்டும்.

  * உடல் வெப்பநிலையை தினசரி சோதனை செய்வது அவசியம்.

  * சோம்பல், மயக்கம் மற்றும் மாற்றப்பட்ட சென்சோரியத்தின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

  * அறியப்பட்ட நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வேறு எந்த தொற்றுநோயையும் போல கொரோனா தொற்று உடலின் இரத்த சர்க்கரை அளவை மாற்றுகிறது. எனவே 3 நாட்களுக்கு ஒரு முறை கடுமையான கண்காணிப்பு மற்றும் உங்கள் மருத்துவருடன் வழக்கமான ஆலோசனை தேவை.

  * உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு குணமடைந்த உயர் இரத்த அழுத்த நோயாளிகளில் வழக்கமான இரத்த அழுத்த கண்காணிப்பு தேவைப்படுகிறது.

  * உடலில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க முழுமையான படுக்கை ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

  * அதேபோல் குணமடைந்த பிறகு அதிக அளவு தண்ணீர், இளநீர், பழச்சாறுகள், சூப்கள் மற்றும் தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்கள் வடிவில் திரவத்தை உட்கொள்வதை அதிகரிக்கவும். சிறந்த நீரேற்றம் ஆரம்பகால மீட்புக்கு வழிவகுக்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

  * பால், பாலாடைக்கட்டி, வேர்க்கடலை, பருப்பு வகைகள், முட்டை, அசைவம் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம்.

  * உங்களை அமைதியாகவும் வைத்திருக்க சுவாச பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
  வேகமான அல்லது கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் அதிக உழைப்பு ஆக்ஸிஜனின் அதிக தேவையை உருவாக்கும். ஆக்ஸிஜன் தேவையை குறைக்க சரியான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

  * டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் காய்ச்சல், சகிக்க முடியாத இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

  * மருத்துவர் ஆலோசனை அளிப்பதன்படி முதல் போலோ-அப் சமயத்தில் சிபிசி போன்ற இரத்த பரிசோதனைகள் எடுத்துக்கொள்வது அதேபோல அடுத்தடுத்த பின்தொடர்தலில் அதனை கண்காணிப்பது அவசியம்.

  * மருத்துவர் ஆலோசனை அளிக்கும்பட்சத்தில், கொரோனாவில் இருந்து மீண்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நுரையீரல் அளவைப் சரிபார்க்க சி.டி ஸ்கேன் எடுத்துக்கொள்வது அவசியம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: