ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

யார் யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது..?

யார் யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது..?

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி

கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தாய்க்கு உதவுவது மட்டுமல்லாமல், பிறக்க போகும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். இருப்பினும், சில சூழ்நிலைகளில் உடற்பயிற்சி செய்வது நல்லதை விட அதிக அளவிலான தீங்கையே விளைவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்ப்பமாக இருந்தாலும் கூட உடற்பயிற்சி செய்வது நல்லது தான். குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் விளைவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி, கணுக்கால் வீக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம், குறிப்பாக இரவில் நிம்மதியாக தூங்கலாம்.

கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தாய்க்கு உதவுவது மட்டுமல்லாமல், பிறக்க போகும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். இருப்பினும், சில சூழ்நிலைகளில் உடற்பயிற்சி செய்வது நல்லதை விட அதிக அளவிலான தீங்கையே விளைவிக்கின்றன. இப்படியாக எந்தெந்த சூழ்நிலைகளில் கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற விவரங்கள் இதோ:

உரிய காலத்திற்கு முன்னரே முதல் குழந்தைப்பேறு பெற்றவர்கள்:

உங்கள் முதல் குழந்தை 37 வார கர்ப்பத்திற்கு முன் பிறந்திருந்தால், அது முன்கூட்டிய பிரசவம் என்று குறிப்பிடப்படுகிறது, நீங்கள் எந்த விதமான கடுமையான உடல் செயல்பாடுகளையும் தவிர்ப்பது நல்லது, முடிந்தவரை அதிக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அவர்கள் சில எளிய பயிற்சிகளை பரிந்துரைக்கலாம்.

கருச்சிதைவு அல்லது அது தொடர்பான அறிகுறிகள்:

கருச்சிதைவு வரலாற்றைக் கொண்ட பெண்கள் அல்லது தற்போதைய கர்ப்பத்தில் இரத்தப்போக்கு அல்லது 'ஸ்பாட்டிங்' (spotting) போன்றவைகளை எதிர்கொண்டால் தங்கள் கர்ப்ப காலத்தின் ஒன்பது மாதங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கருச்சிதைவைத் தவிர்க்க கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றனர்.

ப்ளேசென்டல் (Placental) பிரச்சனைகள்:

ப்ளேசென்டா பிரீவியாவை பொறுத்தவரை, கடுமையான உடல் செயல்பாடு 'கான்டராக்சன்ஸ்' (contractions) அல்லது இரத்தப்போக்குகளைத் தூண்டும் என்பதால், உடல் சார்ந்த செயல்பாட்டின் அளவைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. ப்ளேசென்டல் பிரச்சனை உள்ள பெண்கள் முதல் மூன்று மாதங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் லேசான உடல் செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படலாம். அதுவும் அவர்களின் உடல்நிலையைப் பொறுத்தது.

இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள்:

இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் வரலாற்றைக் கொண்ட தாய்மார்கள் அனைத்து வகையான ஏரோபிக் பயிற்சிகளிலிருந்தும் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வகையான பயிற்சிகளில், இதயத் துடிப்பு அதிகரித்து, உடலுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிற சிக்கல்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.

பொதுவாகவே கர்ப்பிணிகள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் எதுவும் இல்லாத வரை அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் - கர்ப்ப காலத்தின் போது செய்ய - பாதுகாப்பானது தான். நீச்சல், விறுவிறுப்பான நடைபயிற்சி, இன்டோர் சைக்கிளிங் மற்றும் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகள் கர்ப்பிணிகளுக்கு சிறந்தவை. இருப்பினும், குழந்தையின் பாதுகாப்பிற்காக அவர்கள் தவிர்க்க வேண்டிய சில குறிப்பிட்ட நடவடிக்கைகளும் உள்ளன.

கர்ப்பத்தின் 4வது மாதத்திற்குப் பிறகு முதுகை 'பிளாட்' ஆக வைத்து படுப்பதைத் தவிர்க்கவும். உடன் கிக் பாக்ஸிங், ஸ்குவாஷ், டென்னிஸ், கால்பந்து மற்றும் ஹாக்கி போன்ற காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ள விளையாட்டுகளையும் தவிர்க்கவும். மேலும் ஸ்கூபா-டைவிங் போன்ற பிரெஷர் மற்றும் ஆல்டிட்யூட் மாற்றத்தை உள்ளடக்கிய செயல்பாடுகளையும் தவிர்க்கவும். கடைசியாக நிறைய 'ட்விஸ்ட் அண்ட் டர்னிங்'களை உள்ளடக்கிய ஹை இம்பாக்ட் பயிற்சிகளையும் தவிர்க்கவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Workout