பெண்கள் மாதவிலக்கு எட்டும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்று இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் கல்வியின் மூலமாக ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவும், சமூக மாற்றம் காரணமாகவும் பல கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மிக தீவிரமான சில குழப்பங்கள் அல்லது மூட நம்பிக்கைகளுக்கு இன்னும் விடை தெரியாமலேயே இருக்கிறது.
அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் மாதவிலக்கு காலத்தில் உடலுறவு அல்லது சுயஇன்பம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது. அறிவியல் ரீதியாக பார்த்தால் மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொள்வதற்கான மன ரீதியான ஆர்வம் இருக்காது என்பதும், உடல் வலி இருப்பதால் சில பெண்களால் இதற்கு ஒத்துழைக்க முடியாது என்பது மட்டுமே உண்மை. ஆனால், மனதளவிலும், உடல் அளவிலும் ஒரு பெண் தயாராக இருந்தார் என்றால் மாதவிலக்கு காலத்திலும் உடலுறவு அல்லது சுயஇன்பம் செய்து கொள்ள முடியும்.
இருந்தாலும், கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்த விஷயம் குறித்து இறுக்கமான மனநிலை எல்லோர் மனதிலும் நிலவுகிறது. அதே சமயம், மாதவிலக்கு காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது அல்லது சுயஇன்பம் செய்வது என்பது பெண்களுக்கு உடல்ரீதியாக பலன் அளிக்கும் என்பது இங்கு பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. அதாவது மாதவிலக்கு கால வலியை எதிர்கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.
உச்சகட்டம் அடைவதால் பலன் உண்டு
பொதுவாக சாதாரண நாட்களில் உடலுறவு கொண்டு அல்லது சுயஇன்பம் செய்து உச்சகட்டம் அடைவதைப் போலவே மாதவிலக்கு காலத்திலும் அடைய முடியும். உச்சகட்டம் அடையும் சமயத்தில் பெண்களின் உடலில் இருந்து ஆக்ஸிடோசின் மற்றும் டோபோமைன் ஆகிய ரசாயன திரவங்கள் சுரக்கின்றன. இது இயற்கையாகவே வலி நிவாரணியாக செயல்படும். ஆகவே, வலி குறையும்.
இதுகுறித்து, மகப்பேறு மருத்துவ நிபுணர் அருணா கல்ரா கூறுகையில், “செரோடோனின் மற்றும் டோபோமைன் ஆகியவை மன ஆர்வத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் ஆகும். இது உச்சகட்டத்தின் போது வெளிவரும். இது மட்டுமல்லாமல் உச்சகட்டத்தின்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, அது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும், உடல் ரிலாக்ஸ் அடைந்து, நல்ல தூக்கம் வரும்’’ என்று தெரிவித்தார்.
மாதவிடாயின் போது அசௌகரியங்களை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்கள்...
மாதவிலக்கு காலத்தில் உடலுறவு அல்லது சுயஇன்பம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் இவை
வலி நிவாரணி
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியை எதிர்கொள்ள இது உதவிகரமாக இருக்கும். சுயஇன்பம் செய்வதால் முதுகு வலி, தலைவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் தீரும்.
நல்ல தூக்கம் வரும்
சுயஇன்பம் செய்யும்போது உடலில் சுரக்கும் புரோலேக்டின் என்னும் திரவமானது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
மன ஓட்டம் அதிகரிக்கும்
சுயஇன்பம் செய்த பிறகு ஒரு நபர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுயஇன்பம் செய்யும்போது சுரக்கும் எண்டோர்பின் என்பது நமது மன ஓட்டத்தை குதூகலமாக வைத்திருக்க உதவும்.
அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறீர்களா..? புற்றுநோயாக இருக்கலாம்... இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...
மனதுக்கும், உடலுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கிறது
சுயஇன்பம் செய்யும்போது உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர ரிலாக்ஸ் கிடைக்கிறது. மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து நம் மனதை திசை திருப்புவதாக உச்சகட்டம் அமையும். ஆகவே, இதை முயற்சி செய்வதில் எந்தவித தீங்கும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Masturbation, Periods