Home /News /lifestyle /

மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..!

மாதவிடாய் காலத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்..!

சாக்லெட் நன்மைகள்

சாக்லெட் நன்மைகள்

து உங்கள் பசியை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உற்ற நண்பனாகவும் இருக்கிறது.

பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களில் எப்போதுமே சாக்லேட்டிற்கு என தனி இடம் உண்டு. நம் வாழ்வில் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள சாக்லேட்டை விட வேறு என்ன வேண்டும். இது உங்கள் பசியை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உற்ற நண்பனாகவும் இருக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் போது நீங்கள் ஏன் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆறு காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பை போக்கும்:

மாதவிடாய் காலத்தில் உடலில் சில ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்க கூடும். அதில் ஒன்று புரோஸ்டாக்லாண்டின். இது விரும்பத்தகாத சுருக்கங்கள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக பிடிப்புகள் ஏற்படுகின்றன. டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது, இது தசைகளை தளர்த்தி வலியில் இருந்து நிவாரணம் தர உதவுகிறது. டார்க் சாக்லேட் மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது. ஆனால், பல ஆய்வுகள் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் டார்க் சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர்.

2. சோம்பலை விரட்டும்:

டார்க் சாக்லேட் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்களில் ஒன்று. மாதவிடாயின் போது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இரும்புச்சத்து உள்ளது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பு உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது, ஆனால் அது ஒருவிதமான சோம்பலை தரக்கூடும். எனவே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை குறைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது. இதனை உட்கொள்வதன் மூலமாக உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சீராக பாய்ந்து, சோம்பலை குறைத்து சுறுசுறுப்பாக்குகிறது.



3. மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிடுகிறது:

நீங்கள் சாக்லேட் சாப்பிடும் போது, ​​மூளையில் நரம்பியல் கடத்திகள் வெளியிடப்படுகின்றன. அவை நரம்பு மண்டலத்தைச் சுற்றி சிக்னல்களைக் கொண்டு செல்கின்றன. அவற்றில் டோபமைன், செரோடோனின் மற்றும் எண்டோர்பின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அடங்கும்.

செரோடோனின் உங்கள் மனநிலையை மேம்படுத்தும், எண்டோர்பின்கள் வலி நிவாரணிகளாக செயல்படும், மேலும் டோபமைன் உங்களை நன்றாக உணர உதவும். இந்த ஹார்மோன்கள் அனைத்தும் சேர்ந்து உங்கள் மனம் மற்றும் உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

இந்த 2 வைட்டமின் குறைபாடு இருந்தால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுமாம்..!

4. மன அழுத்தத்தை போக்கும்:

WebMD-ல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, இரண்டு வாரங்களுக்கு டார்க் சாக்லேட் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்கிறது. டார்க் சாக்லேட் சாப்பிடுவது நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது என்றும் அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.



5. வீக்கத்தை குறைக்கிறது:

இரும்பு மற்றும் மெக்னீசியத்துடன், டார்க் சாக்லேட்டில் பொட்டாசியம் உள்ளது, இது நீரேற்றத்தை பராமரிக்கும் மற்றும் உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்தும் எலக்ட்ரோலைட் ஆகும். எனவே, மாதவிடாய் காலத்தில் வீக்கம் ஏற்பட்டால், டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இது வீக்கத்தை குறைப்பதோடு வலி நிவாரணமும் தருகிறது.

6. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:

பல நல்ல தரமான சாக்லேட்டுகளில் கோகோ ஃபிளவனால்கள் உள்ளன, அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. அவை உடலில் ஆக்ஸிஜனேற்றங்களைச் சேர்க்கின்றன, அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை சரி செய்யவும் உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chocolate, Periods

அடுத்த செய்தி