முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்கள் முகத்தில் ஏன் முடி வளர்கிறது தெரியுமா..? இந்த 5 விஷயங்கள்தான் காரணம்..!

பெண்கள் முகத்தில் ஏன் முடி வளர்கிறது தெரியுமா..? இந்த 5 விஷயங்கள்தான் காரணம்..!

பெண்கள் முகத்தில் ஏன் முடி வளர்கிறது

பெண்கள் முகத்தில் ஏன் முடி வளர்கிறது

பெண்களுக்கு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை விட சில பெண்களுக்கு முகத்தில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது பெரும் பிரச்சனையாக உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுக்கு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை விட சில பெண்களுக்கு முகத்தில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது பெரும் பிரச்சனையாக உள்ளது. பூனை ரோமம் எனப்படும் மெல்லிய வெளிறிய முடி தாடி, மேல் உதடு, தாடை, கழுத்துக்கு கீழ் பகுதிகள், கன்னம் ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்படும்.

இதனால் பெண்களின் அழகு மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் பெரும் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக ஆண்களைப் போலவே பெண்களுக்கும் முகத்தில் அதிகமான அளவு தாடி, மீசை வளர்வது ஹிர்சுட்டம் என அழைக்கப்படுகிறது. ஆண் தன்மையை அதிகரிக்கூடிய 'டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் பெண்கள் உடலில் அதிக அளவில் சுரப்பது பெண்களுக்கு அதிக அளவில் முடி வளரக் காரணாம அமைகிறது.

இதனைத் தவிர பெண்களின் முகத்தில் அதிக முடி வளர 5 காரணங்களை இங்கே கொடுத்துள்ளோம்...

1. பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்):

பெண்களுக்கு ஹிர்சுட்டம் எனப்படும் முகத்தில் அதிக அளவில் முடி வளரும் பிரச்சனைக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பிசிஓஎஸ் கருப்பையில் நீர்க்கட்டிகளை உருவாக்கிறது, இதனால் மாதவிடாய் சுழற்சி மற்றும் இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் பிரச்சனகள் ஏற்படுகிறது. ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடிய இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் முகத்தில் முடி வளருவதற்கான வாய்ப்புகள் 85 சதவீதம் உள்ளது. முகப்பரு, எடை அதிகரிப்பு, தோல் குறிச்சொற்கள், முடி உதிர்தல் மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் ஆகியவை பிசிஓஎஸ் பிரச்சனையின் அறிகுறிகள் ஆகும்.

2. குஷிங்ஸ் சிண்ட்ரோம்:

குஷிங்ஸ் சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் குறைபாடு ஆகும். இது மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. இது அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து வந்து சிறுநீரகங்களில் தங்குகிறது, இதனால் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், ரத்த அழுத்தத்தை பராமரித்தல், உணவை ஆற்றலாக மாற்றுதல் மற்றும் வீக்கத்தைத் தணித்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

கார்டிசோலின் அதிகப்படியாக உற்பத்தியாவதை, உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, சோர்வு, மனச்சோர்வு, முடி உதிர்தல், உயர் இரத்த அழுத்தம், தூக்க பிரச்சனைகள் மற்றும் உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது போன்ற அறிகுகள் மூலம் அறியலாம்.

நகங்களில் தொற்று ஏற்பட என்ன காரணம்..? அறிகுறிகளும்.. தடுக்கும் வழிகளும்...

3. மருந்துகள் :

எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஹிர்சுட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவை டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை தூண்டக்கூடியது. இந்த ஆண் ஹார்மோன்களின் அதிகரிப்பு பெண்ணின் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

4. அட்ரீனல் சுரப்பி கோளாறுகள் :

கட்டிகள் மற்றும் புற்றுநோய் போன்ற அட்ரீனல் சுரப்பி கோளாறுகளின் விளைவாகவும் ஹிர்சுட்டிசம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு அட்ரீனல் கட்டியானது ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கும், இது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பாதிக்கும். இது தலைவலி, சோர்வு, எடை இழப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.

தினசரி வெந்நீர் குடிப்பதை உங்கள் பழக்கமாக்கிக்கொண்டால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணாதீங்க...

5. பிற காரணங்கள் :

பெண்களின் முகத்தில் அதிக அளவில் முடி வளர பரம்பரை காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் யாருக்காவது பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கு முகத்தில் முடி வளரும் பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைகிறது. மத்திய தரைக்கடல், தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருப்பது, அவர்களுடைய பாரம்பரைச் சார்ந்தது எனக்கூறப்படுகிறது. மேலும் உடல் பருமன் ஆண்ட்ரோஜன்களின் உற்பத்தியை அதிகரித்து முகத்தில் முடி வளரக் காரணமாக அமைகிறது.

First published:

Tags: Facial hair, Hair growth, PCOD, PCOS