ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் உடல் எடையை குறைப்பது கடினம் : உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா..?

இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் உடல் எடையை குறைப்பது கடினம் : உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Weight Loss | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி-யானது நமது BMI-ஐ குறைப்பதிலும் கணிசமான பங்கு வகிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் குறைவான மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கியமானவை.ஆனால் நீங்கள் இதையெல்லாம் செய்தும் கூட உங்களது எடை குறைப்பு முயற்சியில் இன்னும் உங்களுக்கு விரும்பிய பலன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு உங்கள் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாததால் இருக்கலாம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தினசரி வைட்டமின்-டி நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமென்ட்ஸ்களை எடுத்து கொள்பவர்கள் கணிசமாக எடையை குறைக்க முடிவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போதுமான வைட்டமின் டி பெறுவது எடை இழப்புக்கு உதவுவதோடு, உடல் கொழுப்பை குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். அதிக உடல் எடை கொண்ட நபர்களுக்கு, எடை குறைவான நபர்களுடன் ஒப்பிடும் போது ரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. வைட்டமின் டி உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாவது, கொழுப்பு திரட்சியை குறைக்கிறது.

வைட்டமின் டி:

வைட்டமின் டி ஒன்று மட்டுமே பிற வைட்டமின்கள் போலில்லாமல் சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது. இது ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன். நம் சருமம் சூரியனின் UVB கதிர்களுக்கு வெளிப்படும் போது கொலஸ்ட்ராலில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. நம் உடலில் சரியான அளவு வைட்டமின் டி-யை பராமரிக்க போதுமான அளவு வெயிலில் வெளியே செல்வது அவசியம். கேன்சரை தடுக்க, எடையைக் குறைக்க உள்ளிட்ட பலவற்றுக்கு இயற்கையின் பரிசான வைட்டமின் டி அவசியம் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணர் நிபுணர் ரிதிமா பாத்ரா.

Read More : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

அதிக உடல் எடை கொண்டவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு அவர்களின் உடல் அளவை பொறுத்து வைட்டமின் டி தேவைப்படுகிறது. எடை இழப்புக்கு வைட்டமின் டி எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்க்கும் போது, நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. உடலில் இருக்கும் கொழுப்பை சேமிப்பதா அல்லது எரிப்பதா என்று உடலுக்கு சொல்கிறது. உடலில் வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தால் நம் உடல் அதிக கொழுப்பை சேமிக்கும். அதுவே போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது உடல் அதிக கொழுப்பை எரிக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதிக BMI அல்லது உடல் கொழுப்பு (body fat) கொண்டவர்கள் வைட்டமின் டி குறைவாக கொண்டிருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. உடல் எடையை குறைப்பது நீங்கள் நினைத்ததை விட கடினமாக இருந்தால் உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வைட்டமின் டி உணவுகள் என்னென்ன....

ஃபேட்டி ஃபிஷ், கடற்பாசி, முட்டை மஞ்சள் கரு, காளான், காட் லிவர் ஆயில், ஸ்பைருலினா, பால், டோஃபு, தயிர், ஆரஞ்சு ஜூஸ், சீஸ், ​சோயா, பாதாம், ஓட்ஸ், ஓக்ரா உள்ளிட்ட உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். எனினும் உடலில் அதிகப்படியான வைட்டமின் டி சேர்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் அளவோடு வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அல்லது சப்ளிமென்ட்ஸை எடுத்து கொள்ள வேண்டும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Vitamin D, Weight loss