மாதவிடாய் நேரத்தின் போது ஏற்படும் வலி என்பது மிகவும் தொல்லையான ஒன்று. ஆனால் அந்த வலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்வது..? மாதவிடாய் காலங்களின் போது வெளிப்படும் சில அசாதாரண அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது சில வளர்ந்து வரும் உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். பல பெண்கள் தங்கள் மாதவிடாயின் போது உடலை அங்கே இங்கே அசைக்க கூட முடியாத அளவிற்கான கடும் வலியால் அவதிப்படுவார்கள்.
அப்படி வலியால் அவதிப்படுவோர் எதனால் இப்படி நிகழ்கிறது என்று பயங்கர குழப்பத்தில் இருப்பார்கள். இதனிடையே கொச்சி அமிர்தா மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியரும், மகப்பேறியல் நிபுணருமான டாக்டர் ராதாமணி கூறுகையில், “மாதவிடாய் அல்லது மாதவிடாய் வலியின் போது ஏற்படும் தசைப்பிடிப்பு டிஸ்மெனோரியா (dysmenorrhea) என்று அழைக்கப்படுகிறது. 5-15 சதவிகித பெண்களுக்கு கடும் மாதவிடாய் வலி காணப்படுகிறது. மேலும் இது பெண்களின் இயல்பு வாழ்க்கையில் தலையிடுகிறது. இந்த துன்பகர நிலை பிரைமரி மற்றும் செகண்டரி என வகைப்படுத்தப்படுகிறது என்றார்.
டிஸ்மெனோரியாவின் வகைகள்..
பிரைமரி டிஸ்மெனோரியா என்பது மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு வலி. இந்த வலியானது கருப்பையின் புறணியில் தயாரிக்கப்படும் ப்ரோஸ்டாக்லாண்டின்கள் (prostaglandins) எனப்படும் இயற்கை ரசாயனங்களால் ஏற்படுகிறது. புரோஸ்டாக்லாண்டின்கள் கருப்பையின் தசைகள் மற்றும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கின்றன. மேலும் இது அடையாளம் காணக்கூடிய இடுப்பு நோய்க்குறியை கொண்டிருக்காது. 18 - 25 வயதுக்குட்பட்ட இளம்பெண்களில் 50 சதவீத மாதவிடாய் வலிகள் காணப்படுகின்றன.
also read : கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு கைக்கொடுக்கும் உணவுகள் : தினம் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்
செகண்டரி டிஸ்மெனோரியா என்பது எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோசிஸ் மற்றும் ஃபைப்ராய்டுகள் போன்ற இடுப்பு நிலைகளால் ஏற்படும் வலி ஆகும். இந்த வலி காலப்போக்கில் மோசமாகிவிடும் மற்றும் இது சாதாரண மாதவிடாய் பிடிப்புகளை விட நீண்ட காலம் நீடிக்கும். உதாரணமாக, மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே வலி துவங்கலாம்.
also read : புற்றுநோயை தவிர்க்க உதவும் 3 யோகாசனங்கள்..
இதில் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்பது பெரும்பாலும் வலிமிகுந்த ஒரு நிலை. இதில் கருப்பையின் உட்புற புறணி எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது, இது கருப்பை குழிக்கு வெளியே வளரும். அடினோமயோசிஸ் (Adenomyosis) என்பது மயோமெட்ரியத்தில் உள்ள எண்டோமெட்ரியம் திசுவின் ஒரு நிலை. ஃபைப்ராய்டுகள் (Fibroids) என்பது புற்றுநோயற்ற வளர்ச்சி. மேலும் இது மிகவும் வேதனையாக இருக்கும், ஏனெனில் இவை எண்டோமெட்ரியல் குழிக்குள் வளரும். மேல் பிறப்புறுப்பு பாதை தொற்று போன்ற இடுப்பு அழற்சி நோய்களும் கடும் வயிற்று வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் காப்பர் டி அல்லது மிரெனா போன்ற கருப்பையக கருத்தடை சாதனங்களும் கூட வலிமிகுந்த மாதவிடாய் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் ராதாமணி.
டிஸ்மெனோரியாவை எவ்வாறு சமாளிப்பது.!
டிஸ்மெனோரியாவை கண்டறிவதில் பொதுவாக மருத்துவ பரிசோதனையுடன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. சில நோயாளிகளுக்கு CT அல்லது MRI ஸ்கேன் தேவைப்படலாம். மேலும் வலியை போக்க, கருப்பையின் மென்மையான தசைகளை தளர்த்த, அண்டவிடுப்பை அடக்க கருத்தடை மாத்திரைகளை ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் பரிந்துரைக்கலாம். மாதவிடாய் வருவதற்கு 2 நாட்களுக்கு முன் காலத்தில் வைட்டமின் ஈ எடுத்து கொள்வது மாதவிடாய் வலியை குறைக்க உதவும். மருந்துகளால் சரியாகாத சிக்கலான இடுப்பு நிலை வலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சையை பரிசீலிக்கலாம் என்று கூறி உள்ளார் டாக்டர் ராதாமணி கே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Periods, Periods pain