ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

பயோகெமிக்கல் பிரக்னன்சி

பயோகெமிக்கல் பிரக்னன்சி

பெண்குயின் கார்னர் : கருத்தரிக்கும் காலத்தை ஒரு தம்பதி விட்டு விட்டார்கள் என்றால் அவர்களுக்கு அந்த மாதம் கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்காது. அதனால்தான் 25% மட்டுமே ஒரு தம்பதிக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு ஒரு மாதத்தில் இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தீபிகா அன்று தன் கணவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தயங்கிக் கொண்டே இருந்தனர். தீபிகாவின் கணவர்தான் தொடங்கினார். " டாக்டர்... எங்களுக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இருவருமே விரும்புகிறோம். சென்ற மாதம் இவளுக்கு பீரியட்ஸ் இரண்டு நாட்கள் தள்ளி போயிருந்தது. வீட்டிலேயே பிரக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்தோம் அதில் நெகட்டிவ் என்று வந்தது. இரண்டு நாளில் அவளுக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. இருவருக்குமே மிகுந்த வருத்தமாக இருந்தது "

இப்போது தீபிகா தொடர்ந்தார்.

"திருமணத்திற்கு முன்பு எனக்கு எப்பொழுதும் குறிப்பிட்ட தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மாதவிலக்கு ஆகிவிடும். திருமணம் ஆனதிலிருந்து இரண்டு நாட்கள் நான்கு நாட்கள் என்று தள்ளிப் போய், பீரியட்ஸ் ஆகிறது. இந்த மாதமும் நான்கு நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது. இன்று காலை வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தோம். 'நெகடிவ்' என்று தான் வந்தது. அதற்குள் குரல் கம்மி விட்டது தீபிகாவுக்கு. தீபிகாவின் கணவர் அவரை ஆசுவாசப் படுத்தினார்.

இதற்குப் போய் எதற்காக இத்தனை தூரம் வருத்தப்பட வேண்டும் தீபிகா..?  திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது. திருமணமான ஒரு வருடம் வரை மாதவிடாய் சரிவர வராமல் இருக்கலாம். சில சமயங்களில் அது கர்ப்பமாக இருக்கலாம். சில சமயங்களில் மன அழுத்தத்தின் காரணமாக சிறிது நாட்கள் தள்ளி சென்று பிறகு வரலாம்.

எல்லாமே சரியாக இருக்கும் ஒரு தம்பதிக்கு ஒரு மாதத்தில் கர்ப்பம் அடையும் வாய்ப்பு 25 % மட்டுமே. இது இயற்கையின் விதி. அதனால்தான் திருமணமான முதல் ஒரு வருடம் வரை

ஒரு தம்பதிக்கு குழந்தை உருவாகவில்லை என்றால் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குவோம். ஒரு மாதத்தில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு சராசரியாக நான்கு நாட்கள் மட்டுமே. சிலருக்கு ஒரு வாரம் வரை.

முட்டைப்பையில் இருந்து கரு முட்டை வெளியாகி 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். கருமுட்டை வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவோ அல்லது கருமுட்டை வெளியான இரண்டு நாட்கள் வரையும் மட்டுமே கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கும். இது "பெர்டிலிடி விண்டோ"அல்லது "கருத்தரிக்கும் காலம்" எனப்படும். கருத்தரிக்கும் காலத்தை ஒரு தம்பதி விட்டு விட்டார்கள் என்றால் அவர்களுக்கு அந்த மாதம் கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்காது. அதனால்தான் 25% மட்டுமே ஒரு தம்பதிக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு ஒரு மாதத்தில் இருக்கிறது.

பெண்குயின் கார்னர் : திருமணத்திற்கு பின் மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போவது ஆபத்தா..? கரு நிற்பதில் சிக்கல் வருமா?

வேறு ஏதேனும் சிறு சிறு பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் இந்த 25 சதவீதம் மேலும் குறைந்து கொண்டே போகும்.

"தீபிகா... நீங்கள் 3 மாதம் மட்டுமே முயற்சி செய்திருக்கிறீர்கள். இந்த ஒரு வருடம் முழுவதும் காத்திருங்கள். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் கருத்தரிக்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்கும்.

"டாக்டர்! எங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா ??என்று செக் பண்ணி சொல்லுங்கள்." என்றார் தீபிகா.

அடிப்படையான பரிசோதனைகளை மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் கூட நீங்கள் கேட்பதால் மட்டுமே பரிந்துரைக்கிறேன் இன்று இருவருக்கும் அடிப்படை ரத்தப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தேன். தீபிகாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை முட்டைப்பை நன்றாக இருந்தது. அவருடைய கணவருக்கு விந்தணுக்களை பரிசோதித்ததில் சரியான அளவில் இருந்தது.

இருவருக்கும் மீண்டும் மன தைரியம் சொல்லி போலிக் ஆசிட் விட்டமின் மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லி அனுப்பினேன். குழந்தை உருவாகும் போது 'போலிக் ஆசிட்' பிறவி குறைபாடுகள் உருவாவதை தடுக்கும்.

மூன்று மாதங்கள் கழித்து தீபிகா பூனேயில் தன் தாய் வீட்டில் இருப்பதாகவும், கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி இருந்தார். அந்த இளம் தம்பதிகளின் மகிழ்ச்சி எனக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Irregular periods, Pregnancy test, பெண்குயின் கார்னர்