பெரியவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களையும் கொலஸ்ட்ரால் பிரச்சனை தாக்குகிறது என்று பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கொலஸ்ட்ரால் பிரச்சனை குழந்தைகளையும் பாதிக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது கூடுதல் வருத்தம்.
பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய் ஏற்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் தமனிகளில் பிளேக் கட்டி, உடலின் பல பாகங்களுக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.
அதோடு இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இப்படி உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொலஸ்ட்ராலிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கக்கூடிய விஷயங்கள் என்ன..? அதை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.
குழந்தைகளின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் காரணங்கள் :
Web MD இன் அறிக்கையின்படி, குழந்தைகளில் கொலஸ்ட்ரால் அளவு மூன்று காரணங்களால் அதிகரிக்கிறது. முக்கிய காரணம் மரபியல். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை பெற்றோரிடமிருந்து குழந்தைக்கும் மாற்றப்படும்.
இரண்டாவது தவறான உணவுப்பழக்கத்தால் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைத் தவிர்த்து, சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது தவிர, மூன்றாவது முக்கிய காரணம் உடல் பருமன். உங்கள் குழந்தையின் எடை அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க முயற்சிக்கவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மரபணு காரணங்களால் குழந்தைகள் அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். இது இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. ஆனால் இந்த பரிசோதனையை பெரியவர்கள் மட்டுமே செய்கிறார்கள். எனவே இனிமேல் இதைத் தவிர்க்க, 9 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளையும் பரிசோதிக்க வேண்டும். அதேபோல் 17 முதல் 21 வயதினரும் சோதனை செய்ய வேண்டும்.
இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா..? நிபுணர்களின் கருத்து ஏன் அவசியம்..?
அதிக கொலஸ்ட்ராலில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cholesterol, Kids Health