முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தொப்பை உருவாக என்ன காரணம்..? குறைப்பதற்கான வழிகள்..!

தொப்பை உருவாக என்ன காரணம்..? குறைப்பதற்கான வழிகள்..!

தொப்பை உருவாக என்ன காரணம்..?

தொப்பை உருவாக என்ன காரணம்..?

கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களின் உணவு முறைகள், செயல்பாட்டு நிலைகள், தூக்கப் பழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகள் தலைகீழாக மாறியதால், உடல் எடையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான எடையை அடைவது மற்றும் பராமரிப்பது நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்திற்கு முக்கியமானது.

நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பித்தப்பை கற்கள், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஆளாகும் அபாயம் அதிகம். உடல் பருமன் கவலை, மனச்சோர்வு மற்றும் பல போன்ற மனநல பிரச்சினைகளாலும் ஏற்படுகிறது. உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க உதவும், மேலும் உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியிலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

தொப்பை கொழுப்பு என்பது அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறிக்கிறது. தொப்பை கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன:

விஸ்செரல்: உள்ளுறு கொழுப்பு எனப்படும் இது உங்கள் வயிற்றில் இருக்கக்கூடிய உள்ளுருப்புகள் வயிற்றுக்குள் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதால் உண்டாகக்கூடிய தொப்பை.

தோல்புறக் கொழுப்பு (Subcutaneous fat): இது தோலின் கீழ் இருக்கும் கொழுப்பு. தோலடி கொழுப்பைக் காட்டிலும் உள்ளுறுப்புக் கொழுப்பினால் ஏற்படும் உடல் நலப்பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன.

அதிகப்படியான தொப்பை கொழுப்பு அபாயத்தை அதிகரித்து, கீழ்காணும் நோய்களுக்கு வழிவகுக்கும்.

* இதய நோய்

* மாரடைப்பு

* உயர் இரத்த அழுத்தம்

* பக்கவாதம்

* டைப் 2 நீரழிவு நோய்

* ஆஸ்துமா

* மார்பக புற்றுநோய்

* பெருங்குடல் புற்றுநோய்

* டிமென்ஷியா

தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான 7 காரணங்கள் என்னென்ன?

1. தவறான உணவுப் பழக்கம்: குறைந்த புரதம், அதிக கார்ப், அதிக கொழுப்பு உணவுகள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. புரோட்டீன் ஒரு நபரை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவுகிறது, மேலும் மெலிந்த புரதத்தை உணவில் சேர்க்காதவர்கள் பசியால் தூண்டப்பட்டு அதிக உணவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். துரித உணவுகள், பிஸ்கட்கள் மற்றும் பிற பேக்கரி உணவுகள் போன்றவற்றில் டிரான்ஸ்ஃபேட் உள்ளது.

2. உடற்பயிற்சி இல்லாமை: உடல் இயக்கம் குறைவாக இருப்பது வயிற்றை சுற்றிலும் கொழுப்பை அதிகரிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதும் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

3. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளல்: அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால், ஆண்களின் வயிற்றை சுற்றிலும் உள்ள எடை அதிகரிக்கும்.

4. மன அழுத்தம்: கார்டிசோல் - ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் வெளியிடப்படுகிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. மக்கள் மன அழுத்ததில் இருக்கும் போது, ஆறுதல் பெறுவதற்காக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்கின்றனர். கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது.

5. மரபியல்: உடல் பருமனுக்கு மரபணுக்களும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாக பல ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Also Read : உடல் பருமனாக இருப்பது கர்ப்பத்தை பாதிக்குமா..? மருத்துவர்களின் பதில்..!

6. சரியான தூக்கமின்மை: குறைவான தூக்கம் அல்லது குறுகிய கால தூக்கத்திற்கு, அதிக உணவு உட்கொள்வதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நைட் ஷிப்டுகளில் வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வாய்ப்பு குறைவு என்பதால், வயிற்று பகுதியில் அதிக அளவிலான கொழுப்பு சேரும் நபர்களாக மாறுகிறார்கள்.

7. புகைபிடித்தல்: புகைபிடித்தல் தொப்பை கொழுப்பு அதிகரிக்க மறைமுக காரணமாகும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு தொப்பை மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு அதிகம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Belly Fat Reduce, Weight loss