ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிலிருந்து பணிசெய்வது அடிக்கடி தலைவலியை உண்டாக்குகிறதா? காரணங்களும்.. தீர்வுகளும்...

வீட்டிலிருந்து பணிசெய்வது அடிக்கடி தலைவலியை உண்டாக்குகிறதா? காரணங்களும்.. தீர்வுகளும்...

வேலை நினைத்த பயம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதும் இன்றைய ஊழியர்களின் பெருங்கவலையாக உள்ளது. இதற்காகவே சிறந்த பணியாளராக இருக்க வேண்டி குடும்பத்திலிருந்து விலகி விடுப்பு நாட்களிலும் லாப்டப் , ஃபோன் என இருப்பது மனதளவில் பாதிப்பை உண்டாக்கும்.

வேலை நினைத்த பயம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதும் இன்றைய ஊழியர்களின் பெருங்கவலையாக உள்ளது. இதற்காகவே சிறந்த பணியாளராக இருக்க வேண்டி குடும்பத்திலிருந்து விலகி விடுப்பு நாட்களிலும் லாப்டப் , ஃபோன் என இருப்பது மனதளவில் பாதிப்பை உண்டாக்கும்.

தலைவலி உண்டாவதற்குக் தினசரி பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதே முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனாவை எதிர்கொள்ள வீட்டில் இருப்பதே சரியான தீர்வு என மருத்துவர்களின் பரிந்துரையால் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்ய பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து பணி புரிவதால் பலரும் கூடுதல் வேலை, டென்ஷன் போன்றவை அதிகரித்திருப்பதாக ஆய்வுகளும் வெளியாகின. அப்படி உங்களுக்கும் தலைவலி உண்டாகிறது எனில் அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

மருத்துவர்கள் நடத்திய ஆய்வு மூலம் பலருக்கும் தலைவலி உண்டாவதற்குக் காரணம் அவர்களின் தினசரி பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதே முக்கிய காரணம் என்கின்றனர். சரியான தூக்கமின்மை, உணவுப் பழக்கத்தில் மாற்றம் இப்படி பல பழக்க வழக்கங்கள் மாறியிருப்பதைப் பட்டியலிட்டுள்ளனர்.

முக்கியமாக திரை நேரம் அதிகரித்திருப்பது முதல் காரணமாக கூறப்படுகிறது. ஆய்வில் அலுவலக நேரத்தை விட 13 மணி நேரம் லாப்டாப், கணினியில் வேலை செய்வதாகவும், இதற்கிடையில் செல்ஃபோன் பயன்பாடும் இருப்பதாகக் கூறுகின்றனர்.

எனவே முடிந்தவரை திரை நேரத்தைக் குறைத்துக்கொள்ளுதல், தொடர்ந்து திரையைப் பார்க்காமல் சிறிய இடைவேளை விட்டு கண்களை மூடி சற்று நேரம் இருத்தல், இயற்கை காட்சிகளை வெளியே பார்த்தல் போன்ற விஷயங்களை செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.

எப்போதும் தூங்கி வழிந்துகொண்டே இருக்கிறீர்களா? அதற்கு இந்த பிரச்னைகள்தான் காரணம்..

அடுத்ததாக சரியான முறையில் அமராமல் பணி செய்தலும் காரணம் எனப்படுகிறது. இது டென்ஷன் வகையான தலைவலி என்கின்றனர். சரியான அமைப்பில் அமராததால் உடலுக்குக் கிடைக்கும் அழுத்தம், உடல் வலி போன்றவையும் தலைவலியை உண்டாக்கும் என்கின்றனர். எனவே முறையான ஆஃபீஸ் செட்-அப் அமைத்து அமர்ந்து வேலை செய்வதே இதற்குத் தீர்வு.

இதை தவிர தூக்கம் தடைபடுதல், சரியான நேரத்தில் தூங்கி எழாமல் இருத்தல், உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவையும் காரணங்களாக உள்ளன. எனவே இவற்றை சரிசெய்து, உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறையாகப் பின்பற்றுவதே காரணம் என்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட காரணங்களை சரி செய்தும் தலைவலி உண்டாகிறது எனில் மருத்துவரை அணுகுங்கள்.

First published: