• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா காலத்தில் திரையரங்கிற்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

கொரோனா காலத்தில் திரையரங்கிற்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

கொரோனா

கொரோனா

திரையரங்குகள் பாதுகாப்பானதாக இருக்க ஒரே வழி அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதேயாகும்.

  • Share this:
தற்போது கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை மெதுவாகத் திரும்பி வருகிறது. இதனால் தற்போது கிராமங்கள், நகரங்கள் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான படங்களுக்கு சென்று வருகின்றனர். சினிமா பார்ப்பதும் நிச்சயமாக ரசிக்கக்கூடிய ஒன்று, அதில் சந்தேகமில்லை. ஆனால் கோவிட்-19 பரவல் முற்றிலும் நீங்கவில்லை என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் கூட்டமாக படம் பார்க்க சென்று வருகின்றனர். அதே நேரத்தில், ஒரே இடத்தில் எண்ணற்றோர் இருப்பதும், 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மூடிய இடத்தில் இருப்பதும் கொரோனா பரவலை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கூட்ட நெரிசல் மற்றும் நோய் பரவுவதால் ஏற்படும் பல அபாயங்களைக் கருத்தில் கொண்டு திரையரங்குகள் போன்ற பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பரவல் குறைந்தது . ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா அச்சம் எழுந்துள்ளது. எனவே, கோவிட் காலங்களில் நீங்கள் பாதுகாப்பாக திரைப்படம் பார்க்க செல்வது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.,

திரையரங்குகள் பாதுகாப்பானதாக இருக்க ஒரே வழி, அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதேயாகும். எனவே நீங்கள் செல்லும் திரையங்கில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை அறிந்து செல்வது நல்லது. குறிப்பாக உடல் வெப்பநிலை செக் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனரா?, ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வைக்கின்றனரா? மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.



கொரோனா வைரஸ் அச்சத்தை எவ்வாறு தவிர்ப்பது?

நீங்கள் திரையரங்கிற்கு செல்லத் தயாராக இருந்தால் உங்கள் பகுதியில் தற்போதையை கொரோனா பரவல் விகிதம் குறித்து தெரிந்து கொண்டு செல்வது நல்லது. குறிப்பாக நீங்கள் செல்லும் இடத்தின் COVID அபாயங்களை மதிப்பீடு செய்வது முக்கியம், எடுத்துக்காட்டாக, தொற்று விகிதம் சமீபத்திய நாட்களில், அதிகரிக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மேலும் உங்கள் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சினிமா பார்க்க செல்வதை பாதுகாப்பானதாகவும், கவலையற்றதாகவும் மாற்ற கீழ்காணும் விஷயங்களை நிச்சயமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் .

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க 10 மணிக்கு தூங்க வேண்டுமா..? ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

முழுமையாக தடுப்பூசி போடுங்கள் :

தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஒரு வலுவான வழிகளில் ஒன்றாகும். பொது இடங்களில் மக்கள் கூட்டமாக இருந்தாலும் வைரஸ் தொற்று அபாயம் குறைவாக இருப்பதை தடுப்பூசி உறுதி செய்கிறது. எனவே நீங்கள் திரைப்படத்திற்கு செல்ல நினைத்தால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முறையாக செலுத்தி கொள்வது நல்லது. நீங்கள் முழுமையாக தடுப்பூசி போடும்போது, ​​வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவீர்கள். மேலும் சில தியேட்டர்கள் படம் பார்க்க சென்றால் தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை கட்டாயமாக காட்ட வேண்டும். திரைப்படம் பார்க்க வருபவர்களில் தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் இருந்தால் கொரோனா பரவும் விகிதம் மிகவும் குறைவாக இருக்கும்.



முக கவசங்களை அணிந்திருங்கள் :

வைரஸ் பரவல் தாக்காமல் இருக்க உதவும் மற்றொரு வழி என்னவென்றால் முக கவசம் அணிவது. திரையரங்குகளுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லுங்கள், இதனால்உங்கள் மூக்கு, கன்னம் மற்றும் வாயை முழுவதுமாக மூடி இருப்பதால் தொற்று பரவும் துளிகள் உங்களை பாதிக்காமல் இருக்கும். நீங்கள் தடுப்பூசி போட்டாலும் முக கவசங்கள் அணிவது அவசியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: