தினை வகை டயட்டுகளுக்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங் : இதில் அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கிறது..?

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

க தாமதம் என்றாலும் சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ஒரு உணவு தான் தினை. தற்போது நடிகையும் தினை உணவுக்கு மாறியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக, இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பது போன்ற உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகரித்து வருவதால், பலர் தற்போது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதிகரிக்கும் உடல் எடையை குறைக்கவும், பல இணை நோய்களை குறைக்கவும் துரித உணவுகளை கைவிட்டு ஆரோக்கிய உணவு முறைகளுக்கு மாறியுள்ளனர்.

அந்த வகையில், நடிகரும் ஃபிட்னஸ் ஆர்வலருமான ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறியதாக கூறியுள்ளார். மிக தாமதம் என்றாலும் சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ஒரு உணவு தான் தினை. தற்போது நடிகையும் தினை உணவுக்கு மாறியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக, இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கிண்ணம் முழுவதும் காய்கறி மற்றும் தினை கொண்டு சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது போல போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கிண்ணத்தில் காய்கறிகளால் நிரப்பப்பட்ட தினை உணவு உள்ளது. நான் சமீபத்தில் தினை சாப்பிடுவதற்கு மாறிவிட்டேன். நான் தற்போது அற்புதமாக உணர்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார். தினை உணவுகளை முயற்சி செய்வதற்கான ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையை நடிகை தனது பதிவு மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பலரும் தினை உணவுகள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவேளை நீங்கள் முதல் முறையாக தினை உணவினை முயற்சிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. அவை என்ன என்பது பற்றி பார்க்கலாம். 
View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)


* பொதுவாக தினையை குறைந்தபட்சம் 6 முதல் 8 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். எனவே, ஒருவர் எப்போது தினை சாப்பிட நினைக்கிறீர்களோ அதற்கு முன்னதாக ஊற வைக்க வேண்டும்.

* மேலும் நீங்கள் முதன்முறையாக தினை உணவுகளை சாப்பிட போகிறீர்கள் என்றால் உங்கள் உணவு வகைகளில் ஒன்று மட்டும் தினை கொண்டு சமைத்ததாகவும், மற்றவை தினை இல்லாமல் சமைத்த உணவாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், முதல் நாளே நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும் தினையாக இருந்தால் உங்களால் உண்ண முடியாமல் போகலாம். வாரத்திற்கு ஆறு வேளை தினை உணவு என தொடங்கி படிப்படியாக தினை சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும்.

கைத்தறி புடவைகள் மீது மிகவும் விருப்பம் கொண்டவரா..? வித்தியா பலனின் தனித்துவ ஸ்டைல் தோற்றங்கள்..

தினை உணவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை கரையக்கூடியவை மற்றும் கரையாத சத்துக்களை உள்ளடக்கியது. கரையாத நார், அல்லது ப்ரீபயாடிக்குகள், செரிமான அமைப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. இது மலத்தில் பெருமளவு சேர்க்கிறது. ஒருவரின் ஆற்றல் நிலைகள் கடுமையாக வீழ்ச்சியடைவதைத் தடுப்பதால் தினை, நாள் முழுவதும் மக்களை ஆற்றலுடன் வைத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கலோரி உள்ளடக்கமும் குறைவாக இருக்கும். இதனால் இது எடை இழப்புக்கு சிறந்த தானியமாக அமைகிறது.

 
Published by:Sivaranjani E
First published: