Home /News /lifestyle /

திராட்சை Vs உலர் திராட்சை இரண்டில் எது ஆரோக்கியமானது தெரியுமா?

திராட்சை Vs உலர் திராட்சை இரண்டில் எது ஆரோக்கியமானது தெரியுமா?

திராட்சை Vs உலர் திராட்சை

திராட்சை Vs உலர் திராட்சை

உலர் திராட்சைகள் இயற்கையான சர்க்கரை மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளதால் எடை குறைப்பவர்களுக்கான நல்ல ஸ்நாக்ஸ் ஆகும். உலர் திராட்சையை தினமும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.

திராட்சைக்கும், உலர் திராட்சைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் அதில் இருக்கும் தண்ணீர் சத்து தான். திராட்சையில் 80.54% தண்ணீர் உள்ளது, அதேசமயம் உலர் திராட்சையில் 15.43% தண்ணீர் உள்ளது. திராட்சை, உலர் திராட்சை இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை, திராட்சை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு உலர்த்தப்படுகின்றன, அவை காய்ந்ததும் உலர் திராட்சையாக மாறி விடுகிறது.

திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் மூன்று மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன. இரண்டிலுமே எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் இரண்டில் எது நல்லது என்பதை தீர்மானிப்பது கடினம், திராட்சை மற்றும் உலர் திராட்சையின் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை வைத்து மனித உடலுக்கு எது ஆரோக்கியமானது மற்றும் அதிக நன்மை பயக்கும் என்பதை ஒப்பிடலாம்.






































































 

சத்துக்கள்
உலர் திராட்சைதிராட்சை
தண்ணீர்15.43%80.54%
கலோரிகள்299கி -69கி
புரதம்3.07கி0.72கி
கொழுப்பு0.46கி 0.16கி
கார்போஹைட்ரேட்79.18 18.10கி
ஃபைபர்3.70கி0.90கி
சர்க்கரை59.19கி15.48கி
கால்சியம்50கி 10கி
இரும்பு1.88கி0.36கி
மெக்னீஷியம்32கி07கி
வைட்டமின் சி 2.30கி3.20கி
வைட்டமின் ஏ0கி03கி

திராட்சையின் நன்மைகள் : 



* திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது. இவை அனைத்துமே எண்ணற்ற ஆரோக்கிய நற்குணங்களை கொண்டுள்ளது. 

* திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

* இது இருதய நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.

* ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.

* தினமும் திராட்சை சாரு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்

* பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* திராட்சை பழத்தில் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை செரிமான அமைப்பை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீள உதவுகிறது.

உலர் திராட்சையின் நன்மைகள் :



* உலர் திராட்சையை தினமும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.

* உலர் திராட்சைகள் இயற்கையான சர்க்கரை மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளதால் எடை குறைப்பவர்களுக்கான நல்ல ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் உலர் திராட்சை இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் போது எடை குறைப்புக்கும் உதவுகிறது.

* இரத்த சோகை உள்ளவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் அல்லது இரவில் படுக்கும் போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.



* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

* எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இதில் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* உலர் திராட்சையும் நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும், மேலும் செரிமானத்திற்கும் உங்கள் குடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Diet, Diet Plan, Health Benefits, Weight loss

அடுத்த செய்தி