வானவில் என்று கூறினாலே மனதில் உற்சாகம் பிறக்கும். வானிலை என்பதே சொல்லி மிகவும் பாசிட்டிவான எனர்ஜியான சொல்லாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த பாசிட்டிவிட்டியும், நேர்மறையான ஆற்றலும் கர்ப்பிணிகள் உடன் தொடர்புடையது தான் ரெயின்போ பேபி என்று கூறப்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் முந்தைய குழந்தை இழந்த பெற்றோருக்கு பிறக்கும் அடுத்த குழந்தை தான் ரெயின்போ பேபி என்று கூறப்படுகிறது. ரெயின்போ பேபி எவ்வளவு ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.
ரெயின்போ பேபி என்பது ஒரு ஆரோக்கியமான குழந்தையை குறிக்கும். இந்த ஆரோக்கியமான குழந்தை, அதன் பெற்றோரின் இதற்கு முந்தைய காலத்தில் காயங்களை மறக்கச் செய்யும். பெற்றோர்கள் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தத்து எடுப்பதற்கு முன்பு குழந்தையை இழந்திருக்கலாம். அதாவது, கருச்சிதைவு அல்லது குழந்தை வயிற்றிலேயே இறந்து போனது, அல்லது குழந்தை பிறந்த பின்பு ஒரு சில காரணங்களுக்காக இறந்தது, உள்ளிட்ட கடுமையான சூழ்நிலைகளை எதிர் கொண்டிருப்பார்கள். அதைக் கடந்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ளும் போது அல்லது தத்தெடுக்கும் போது, அந்த ஆரோக்கியமான குழந்தைதான் ரெயின்போ பேபி என்று கூறப்படுகிறது.
தெரிந்த நபர், பழகியவர, உறவுக்காரர்கள் என்று யாருடைய இழப்பாக இருந்தாலும் அது துக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல குழந்தையின் இறப்பு அல்லது இழப்பு என்பது வெளிப்படுத்த முடியாத அளவுக்கு துக்கத்தை உண்டாக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதையே இல்லாத அளவுக்கு செய்து விடும். கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தில் குழந்தை இழந்தவர்களுக்கு மிக மிக தனித்துவமான தீராத துக்கம் இருக்கும் என்று அமெரிக்க உளவியல் அசோசியேஷன் கூறியுள்ளது.
கர்ப்பகாலத்தில் குழந்தையை இழந்த துக்கம் என்பது எதிர்காலத்துக்கான இழப்பு என்றும் மற்ற வகையான துக்கம் என்பது கடந்த காலத்தில் நடக்கும் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் குழந்தை இழப்பிற்கு தங்களையே தீவிரமாக குற்றம் சாட்டிக் கொள்வார்கள். இது அவர்களின் உடல் நலத்தை மட்டுமல்லாமல் மனநலத்தையும் தீவிரமாக பாதிக்கும். எனவே இந்த துக்கத்தில் இருந்து வெளிவருவதற்கு சில மாதங்கள் முதல் ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம். அந்த உணர்ச்சிகளை பொறுமையாக ஏற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதுல இருந்து வெளிவர முடியும்.
ஆரம்ப நிலையிலேயே மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை கண்டறிய டிப்ஸ் : ஆபத்துகளை தவிர்க்க எளிய வழிகள்..
கர்ப்ப காலத்தில் குழந்தையை இழப்பது என்பதற்கு எதையுமே ஈடு செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் அதற்கு பிறகு கரு உருவாக்குதலும் ரெயின்போ பேபி பிறப்பதும் கலவையான உணர்வுகளால் கர்ப்பிணி பெண்ணை பாதிக்கும். குழந்தையை இழந்த பிறகு அடுத்த குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது மற்றும் பிறக்கிறது என்பதே ஒரு பக்கம் அதிக அளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தினாலும், இழந்த குழந்தையால் ஏற்பட்ட துக்கம் மற்றொரு புறம் அலைகழிக்கும். அதுமட்டுமல்லாமல் ரெயின்போ குழந்தையையும் இழந்து விடுவோமோ என்ற பயமும் படபடப்பும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
குறை பிரசவம் அல்லது கருச்சிதைவு என்பது பல குழந்தைகளின் பிரசவத்திற்கு சமம் என்று கூறப்படுவதுண்டு. அதேபோல தான் குழந்தையின் இழப்பும்! எனவே குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்பது குழந்தையை இழந்த பெண்களுக்கு தீவிரமாக காணப்படும்.
மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு நீங்கள் அடுத்த குழந்தைக்கு திட்டமிட்டால் அல்லது குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்தாலும் அதைப்பற்றி நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்வது தவறே இல்லை. அதே நேரத்தில் நீங்கள் துக்கத்தை மறைத்துக் கொண்டு புதிய குழந்தையை வரவேற்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள் முழுவதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் தேவைப்பட்டால் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடி கவுன்சிலிங் அல்லது தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
ரெயின்போ பேபி உங்கள் வாழ்வில் அழகான மாற்றத்தை ஏற்படுத்தி ஏற்படுத்துவதை நீங்கள் முழுமையாக உணர்வதற்கு நீங்கள் கடந்த கால தாக்கத்தில் இருந்து வெளி வருவது அவசியம். அதற்கு உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.