ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில் ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளையும் உடல் வெளிப்படுத்தாது. ஆனால் புற்றுநோய் உண்டானால் புற்றுநோய் கட்டியில் உள்ள திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி அவற்றையும் தாக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நம்முடைய உடல் வெப்பநிலையானது உயரும்.
இவ்வாறு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணம் அந்த புற்றுநோய் கட்டியானது அதன் அருகே உள்ள திசுக்களை தாக்கும். இதனை மருத்துவ ரீதியாக பைரெக்சியா என்று அழைப்பார்கள். பொதுவாகவே தொற்றுக்கள் மற்றும் உடல் குறைபாடுகளுக்கு நமது உடல் எதிர்ப்பு சக்தியை காட்டும் தன்மையை இது குறிக்கிறது.
ஒருவருக்கு பைரேக்சியா ஏற்பட்டால் அவரது புற்றுநோய் ஆனது தீவிர நிலையை அடைந்துள்ளதாகவும் அல்லது உடலில் மற்ற பாகங்களுக்கு பரவ துவங்கி உள்ளதாகவோ நாம் எடுத்துக் கொள்ளலாம். பைரெக்சியா என்பது அனைத்து வித புற்றுநோய்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் குறிப்பாக ரத்த புற்றுநோய்களான லுக்குமியா மற்றும் லிம்போமா ஆகியவற்றிற்கு தான் அதிகம் உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மற்ற புற்று நோய்களினால் உண்டாகும் காய்ச்சல்!
மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற பொதுவாக ஏற்படும் புற்று நோய்களினாலும் காய்ச்சல் உண்டாகும். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த யுகே-வை சேர்ந்த மருத்துவர்கள் கூறுகையில், புற்றுநோய் பாதிப்புடைய ஒரு நபருக்கு அவரது கல்லீரலில் புற்றுநோய் பரவி இருந்தால் உடனடியாக காய்ச்சல் உண்டாகும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த புற்றுநோய் மூலம் உடலின் செயல்பாடுகளில் பாதிப்புகள் உண்டாகியுள்ளதற்கான அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
எதனால் காய்ச்சல் உண்டாகிறது?
எதனால் குறிப்பிட்ட புற்றுநோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல் உண்டாகிறது என்றும் மற்ற புற்று நோய்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்பது பற்றியும் தெளிவாக இன்னமும் யாருக்கும் தெரியவில்லை. சில புற்றுநோய் தாக்குதல்கள் மூலம் ஏற்படும் நச்சுத்தன்மையினால் காய்ச்சல் உண்டாக வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். புற்றுநோய் தாக்கிய கட்டியிலிருந்து பைரோஜென்ஸ் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டு, இதுதான் காய்ச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த பைரோஜன் என்பவை தொற்று தன்மையுடையதாக அறியப்படுகிறது.
Also Read : எச்சரிக்கை..! அதிகமாக கொட்டாவி விட்டால் உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்..
அறிகுறிகள்:
ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சலை நாம் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உண்டாக்கும் போது அதிக அளவு வியர்வை உண்டாகி உடலின் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.. இதன் காரணமாகத்தான் புற்றுநோய் பாதித்துள்ள நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் அதிக வியர்வை உண்டாவகிறது
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
உங்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உடனடி சிகிச்சை பெறுவதன் மூலம் தேவையற்ற பாதிப்புகள் உண்டாவதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அதே சமயத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காய்ச்சல் உண்டாவது என்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாக கூட இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.