முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்கள் பூப்படையும் முன் தெரியும் அறிகுறிகள்... முதல் மாதவிடாயை எதிர்கொள்ள தயார் படுத்துவது எப்படி..?

பெண்கள் பூப்படையும் முன் தெரியும் அறிகுறிகள்... முதல் மாதவிடாயை எதிர்கொள்ள தயார் படுத்துவது எப்படி..?

முதல் மாதவிடாய்

முதல் மாதவிடாய்

முதல் மாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் அடர் பழுப்பு நிறத்தில் இருந்து பளிச்சென்ற சிவப்பு முதல் அடர் சிவப்பு வரை என்று மாறுபடும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பூப்படைவது என்பது பெண்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. உடல் ரீதியான பல விதமான மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ளும் காலம். முதல் மாதவிடாய் ஏற்படுவதற்கான அறிகுறிகள், மாதவிடாய் நாட்களின் போது எப்படி இருக்கும், முதல் மாதவிடாய் எவ்வளவு நாட்கள் நீடிக்கும், பராமரிப்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

முதல் மாதவிடாய் எப்போது எதிர்பார்க்க முடியும்?

முதல் மாதவிடாய் என்பது சராசரியாக வயது 10 முதல் 13 வயதில் ஏற்படும். சிறுமிகளின் பாடி மாஸ் இன்டக்ஸ் சராசரியை விட அதிகமாக இருந்தால் அல்லது எடை குறைவாக / அதிகமாக இருந்தால், மன அழுத்தம் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருந்தால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே ஏற்படும்.

பருவமடைதலின் முதல் அறிகுறிகளில், மார்பக வளர்ச்சி, அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் முடிகள் வளர்வது மற்றும் உடல் வடிவம் மாறுவது ஆகியவை அடங்கும். பருவமடைவதற்கான முதல் அறிகுறிகள் தோன்றிய சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மாதவிடாய் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பருவமடைவதற்கான பிற அறிகுறிகள் தோன்றினாலும், 15 வயதிற்குள் முதல் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், மகளிர் மருத்துவரை அணுகவும். மருத்துவரின் பரிசோதனை, பின்னர் அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்தம், ஹார்மோன் சோதனைகள் உள்ளடங்கிய சோதனைகள் செய்யப்பட்டு ஏன் தாமதம் ஆகிறது என்பது கண்டறியப்படும்.

முதல் மாதவிடாய் ஏற்பட இருப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

மார்பகங்கள், அந்தரங்க மற்றும் அக்குள் பகுதிகளில் முடியின் வளர்ச்சியைத் தவிர, முதல் முந்தைய அடங்கும். அவற்றைத் தவிர்த்து,

* பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேற்றம் அதிகரிப்பு

* அடிவயிற்று தசை பிடிப்பு

* முகப்பரு

* வயிற்று உப்புசம்

* தீவிர மனநிலை மாற்றங்கள்

முதல் மாதவிடாய் உதிரப்போக்கு எந்த நிறமாக இருக்கும்?

நிறம் அடர் பழுப்பு நிறத்தில் இருந்து பளிச்சென்ற சிவப்பு முதல் அடர் சிவப்பு வரை என்று மாறுபடும்.

முதலில் மாதவிடாய் ஏற்படும் போது எவ்வளவு இரத்தப்போக்கு ஏற்படும்?

முதல் காலகட்டத்தின், சிறு சிறு துளிகள், ரத்தத் திட்டுகளுடன், சற்று திடமான உதிரப்போக்கு வரை என்று மாறுபடும்.

முதல் மாதவிடாய் எவ்வளவு காலம் நீடிக்கும்?

சில பெண்களுக்கு, முதல் மாதவிடாய் ஓரிரு நாட்கள் மட்டுமே தோன்றும். மற்றவர்களுக்கு, இது ஒரு வாரம் நீடிக்கும். சராசரி மாதவிடாய் காலம் 2-7 நாட்கள் ஆகும்.

மாதவிடாய் துவங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு, ஓட்டத்தின் நாட்களின் எண்ணிக்கையும், இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான இடைவெளியும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம், 2-3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அதற்கும் அதிகமாக மாதவிடாய் ஏற்படலாம்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் மகளிர் மருத்துவரை அணுகவும்:

1) 7 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பது

2) இரண்டு மாதவிடாய் கால இடைவெளி 20 நாட்களுக்கும் குறைவாக உள்ளது

3) மயக்கம் / சோர்வு

Also Read : மாதவிடாயின் போது தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறீர்களா..? இந்த 5 விஷயங்களை செஞ்சு பாருங்க..!

4) மாதவிடாய் முன்பு தாங்க முடியாத வலி ஏற்படுவது

5) முதல் மாதவிடாயிலிருந்து 2-3 ஆண்டுகளுக்குப் பிறகும் 45-60 நாட்களுக்கு மேல் இடைவெளியுடன் தாமதமான மாதவிடாய்.

சுய பராமரிப்புகுறிப்புகள்:

முதல் மாதவிடாய் ஏற்படும் போது:

கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு இரத்தம் வருவதைக் கண்டாலோ அல்லது உங்கள் ஆடைகளில் கறை படிந்திருந்தாலோ, டிஷ்யூ பேப்பர் போன்ற உறிஞ்சக்கூடிய பொருட்களைப் பெற்று, அதை உள்ளாடையின் மீது தற்காலிகமாக வைக்க முயற்சிக்கவும். அருகில் இருக்கும் நம்பகமான பெரியவர்களிடம் தெரியப்படுத்துங்கள், அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில், மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளின் தேர்வு, அதாவது உள்ளாடைகள் முதல் சானிட்டரி நாப்கின், டாம்பன், மாதவிடாய் கப் வரை பல பொருட்களை தரவு செய்ய வேண்டி இருக்கும்.

ஒவ்வொன்றின் நன்மை தீமைகளைப் பற்றி, எது பொருந்துகிறது என்பதை பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதாரம்:

1) பயன்படுத்தும் நாப்கின்கள் முழுமையாக ஈரமாகாவிட்டாலும் ஒவ்வொரு 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்றவும்/ மாதவிடாய் கப்பை ஒவ்வொரு 6-8 மணிநேரத்திற்கும் தவறாமல் காலி செய்யவும்

2) ஆரம்பத்தில் கசிவுகள் ஏற்படுவது இயல்பு தான், எனவே எப்போதும் கூடுதல் சுகாதார பொருட்களை வைத்திருக்கவும்

Also Read : பீரியட்ஸ் நாட்களில் சுத்தம் மட்டும் போதாது.. இதையும் கவனிப்பது அவசியம்..!

3) அந்தரங்கப் பகுதியை வெளிப்புறமாக மட்டுமே கழுவவும், உட்புறமாக தொட முயற்சிக்காதீர்கள். திரவங்களின் பிஎச் அளவில் மாற்றம் ஏற்படுவது யோனி தொற்றுக்கு வழிவகுக்கும்.

4) இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

முதல் மாதவிடாய், வாழ்வின் அனைத்து முதல் அனுபவங்களைப் போலவே, அச்சுறுத்தலாகவும், திகிலூட்டுவதாகவும், பல குழப்பங்களும் நிறைந்து இருக்கலாம். ஆனால் நீங்கள் சரியான தகவலை பெற்றவுடன், உங்கள் உடலை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

First published:

Tags: Menstrual time, Puberty, Puberty Symptoms