முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து மட்டும்தான் கை கொடுக்குமா..? உண்மையை உடைக்கும் வல்லுநர்கள்

தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து மட்டும்தான் கை கொடுக்குமா..? உண்மையை உடைக்கும் வல்லுநர்கள்

உடல் வளர்ச்சிக்கு புரதச் சத்து

உடல் வளர்ச்சிக்கு புரதச் சத்து

நம் உடலில் உள்ள தசைகள் ஒரு கட்டிடம் என்றால், புரதம் அதற்கு செங்கல் போல. ஒருவர் எவ்வளவு கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பை சாப்பிட வேண்டும் என்பது தெரியாதபட்சத்தில் புரதச்சத்து ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உடல் வளர்ச்சிக்கு புரதச் சத்து மிகவும் அவசியமானது. பாடப்புத்தகத்தில் இருந்து விளம்பரங்கள் வரை பாடிபில்டிங் ஃபுட்ஸ் எனப்படும் உடலின் தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாத ஊட்டச்சத்து என்று கூறப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை, உடலை வலுப்படுத்த தசையை வலுப்படுத்த வேண்டும்.

இவர்கள் அனைவருமே தசை ஆரோக்கியத்துக்கு அதிகமான புரதச்சத்தை உட்கொள்வார்கள். இந்த அடிப்படையில் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதனால் உடலுக்கு வேறு எந்த நன்மையும் இல்லையா, தசை வளர்ச்சிக்கு மட்டும் தான் புரதச் சத்து உதவுகிறதா? என்பது பற்றிய நிபுணர்கள் கருத்தை இங்கே பார்க்கலாம்.

புரதச்சத்து மற்றும் தசை ஆரோக்கியம் :

தசையின் ஒரு முக்கியமான காம்போனென்ட்டாக புரதம் இருந்தாலும், நம்முடைய சருமம், முடி மற்றும் நகம், மற்றும் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள், ஹார்மோன் மற்றும் செல்களின் அமைப்பு இவை அனைத்திலுமே புரதச்சத்து ஒரு பகுதியாக ஆக இருக்கிறது.

நம் உடலில் உள்ள தசைகள் ஒரு கட்டிடம் என்றால், புரதம் அதற்கு செங்கல் போல. ஒருவர் எவ்வளவு கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பை சாப்பிட வேண்டும் என்பது தெரியாதபட்சத்தில் புரதச்சத்து ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது. புரத சத்து தசை வளர்ச்சிக்கு அவசியம் என்பது உண்மைதான் என்றாலும், நம்முடைய உடல் புரதத்தை அமினோ ஆசிட்களாக மாற்றுகிறது. இந்த அமினோ அமிலங்கள் தசைகளில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து, தசையின் அமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. செல்களின் தொகுப்பு தன்னைத் தானே சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது.

அதிகமாக புரதம் சாப்பிடுவது தசை அடர்த்தியை உண்டாக்குமா?

ஒருத்தத்திலிருந்து நம்ம உடம்பு பல்வேறு அமினோ ஆசிட் களை உருவாக்கும் அதில் ஒன்பது வகையான அமினோ ஆசிட்டுகள் அத்தியாவசியமான ஆசிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமினோ அசிட்கள் தான் உடலில் தசைகள் வலுவாக (muscle building) செயல்படுகிறது. மேலும், இவை muscle mass என்று கூறப்படும் தசைகளின் அடர்த்தியை நேரடியாக ஏற்படுத்துவதில்லை.

தூங்குவதற்கு முன் பாலில் ஒரு ஏலக்காய்.... இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பலன் கிடைக்கும்..!

இவை, தசைகளில் உள்ள திசுக்களில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மீண்டும் கட்டமைக்க உதவுகிறது. உதாரணமாக, உடற்பயிற்சி செய்த பின்பு, அதனால் ஏற்படும் தசை பாதிப்பை புரதம் சாப்பிடுவதன் மூலம் திசுக்கள் தானே ரிப்பேர் செய்துகொள்ளும். இதனால் தான், உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் புரதம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

நீங்கள் எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும் என்பது மற்ற ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்ற அடிப்படையில் உள்ளது. உடலுக்கு வேலையே கொடுக்காமல், தசைகள் அல்லது திசுக்களில் பாதிப்பு இல்லாமல் இருக்கும் போது, அதிக புரதம் தேவையில்லை. எனவே, புரதம் மட்டும் சாப்பிட்டால் தசைகள் வலுப்பெறாது.

புரதம் அதிகம் இருக்கும் உணவுகளும் தின்பண்டங்களும்...

புரதச்சத்து அதிகமாக இறைச்சி மற்றும் முட்டை ஆகிய உணவுகளில் இருக்கிறது. சைவ உணவுகளில் பால் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து இருக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் :

முட்டை மற்றும் அதைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த உணவும்

வாழைப்பழம் மற்று யோகர்ட், வேர்கடலை, கொண்டைக்கடலை, ராஜ்மா உள்ளிட்ட பயறு வகைகள் சாப்பிடலாம்.

புரதம் மட்டுமே அதிகமாக சாப்பிட்டால், உடலில் கோளாறு ஏற்படும். எனவே, மற்ற ஊட்டச்சத்துக்களையும் சேர்க்க வேண்டும்.

First published:

Tags: Muscle Strength, Protein